சொர்க்கத்தீவு (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சொர்க்கத்தீவு
நூலாசிரியர்சுஜாதா (எழுத்தாளர்)
மொழிதமிழ்
வகைஅறிவியல் புனைகதை
வெளியிடப்பட்ட திகதி
1970 இன் முற்பகுதி

சொர்க்கத்தீவு எனும் நாவல் தமிழ் எழுத்தாளரான சுஜாதா (எழுத்தாளர்) அவர்களால் 1970 களில் எழுதப்பட்ட அறிவியல் புனைகதை புதினமாகும். எழுத்தாளர் சுஜாதாவால் எழுதப்பட்ட முதல் அறிவியல் புனைப்பிரிவில் எழுதப்பட்ட இப்புதினம் தமிழ் இலக்கிய அறிவியல் புனைகதைகளின் முன்னோடியுமாகும்.[1]

கதைச்சுருக்கம்[தொகு]

அய்யங்கார் என்கிற சென்னையை சேர்ந்த கணினி மென்பொறியியல் வல்லுநர் சில நபர்களால் நைச்சியமாக பேசி, தனி விமானத்தில் கடத்தப்படுகிறார். அவரை கடத்தி, வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு தனித் தீவு ஒன்றிற்கு அழைத்து செல்கிறார்கள். அந்த நாட்டை நிர்வகிக்கும் சத்யா என்கிற நபரை அவர் சந்திக்கிறார். அவர் தங்கள் கணினி இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்றும் அதை சரி செய்யவே அவரை அழைத்து வந்ததாகவும் சொல்கிறார். அதற்கு தக்க சன்மானம் அளிப்பதாகவும் சொல்கிறார். அய்யங்காருக்கு தன்னை கடத்தி வந்ததில் கோபம் இருந்தாலும் தனக்கு நன்கு தெரிந்த கணினி மென்பொருள் சரி செய்யும் வேலை என்பதாலும் தப்பி செல்ல வேறு வழி இல்லாததாலும் ஒப்பு கொள்கிறார்.

அந்த நாட்டில் பல விஷயங்கள் விநோதமாக உள்ளன. அவர்கள் தமிழ் பேசுகிறார்கள் எனினும் பல வார்த்தைகளுக்கு அங்குள்ள குடிமக்களுக்கு அர்த்தம் புரியவில்லை. உதாரணமாய் உடலுறவு, அப்பா, அம்மா போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு தெரியவில்லை !

ஒரு நாள் அய்யங்கார் தங்கிய அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் ஒரு குரல் “அவர்கள் சொல்வதை செய்யாதே” என கூறுகிறது. அப்படி பேசிய நபரை ஒரு நாள் கடற்கரையில் இரவில் சந்திக்கிறார் அய்யங்கார். கெளதம் என்னும் அந்த நபர் தீவின் தலைவரான சத்யா, அத்தீவில் உள்ள மகக்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதற்காக அனைவருக்கும் குறுப்பிட்ட மருந்து கொடுத்து உணர்வுகளை மறக்கடிப்பதாகவும், தனக்கு கொடுக்கும் மருந்தில் தவறிருந்ததால் தன் உணர்வுகள் விழித்து கொண்டன என்றும் சொல்கிறார். மேலும் இயற்கைக்கு மாறாக இவர்கள் செய்வது தவறு என்றும் அய்யங்கார் கணினியை சரி செய்து விட்டால், மனிதர்கள் விழித்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் இப்படி சில புரட்சி செய்யும் நபர்கள் இருப்பது சத்யாவிற்கு தெரியவர அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். அய்யங்கார் கணினியை சரி செய்து விட்டு சென்னை கிளம்புகிறார். விமானத்தில் இருக்கும் போது கடைசியாக கதை வாசிக்கும் வாசகர்களுக்கு மட்டும் இப்படி சொல்கிறார்,

“நான் கணினியில் ஒரு கட்டளையை மாற்றி விட்டேன். அதனால் அனைத்து மக்களுக்கும் கொடுக்கிற மருந்து அடுத்த ஒரு மாதம் வேலை செய்யாது. அனைவரும் விழித்து கொள்வார்கள்” என்று.

மேற்கோள்கள்[தொகு]