சொப்பதண்டி யசாசிரி
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சொப்பதண்டி வேணுகோபால் யசாசிரி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 செப்டம்பர் 2003 ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டகாரர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | விரைவு வீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
{{{1}}} | ஐதராபாத்து பெண்கள் துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | உ.பி. வாரியர்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 6 நவம்பர் 2024 |
சொப்பதண்டி யசாசிரி (Soppadhandi Yashasri) இவர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள கைதராபாத் 2003 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம். 4 ஆம் தேதிபிறந்தார். யசாசிரி ஓர் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் மகளிர் ப்ரீமியர் லீக்கில் ஹைதராபாத் மற்றும் உத்திர பிரதேசம் வாரியர்ஸ் அணிக்காக வலது கை பேட்ஸ்மேன் மற்றும் நடுத்தர வேகப்பந்து வீச்சாளராக விளையாடுகிறார்.[1][2]
தொழில் வாழ்க்கை
[தொகு]2018–19 ஆண்டில் சீனியர் மகளிர் ஒருநாள் லீக்கில் 2018 டிசம்பர் மாதம், 1 ஆம் நாள் அன்று ஒடிசாவுக்கு எதிராக ஹைதராபாத் அணிக்காக பட்டியல் ஏ அணியாக தனது சீனியர் அறிமுகத்தை இவர் தொடங்கினார்.[3] 2022 ஆண்டில், ஏப்ரல் மாதம், 18 ஆம் தேதியன்று 2021–22 சீனியர் மகளிர் டி20 டிராபியில் மேகாலயாவுக்கு எதிராக தனது டி20 அறிமுகத்தை சொப்பதண்டி யசாசிரி பெற்றார்.[4]
2022 ஆண்டில்,டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய மகளிர் தேசிய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் யசாசிரி இடம் பெற்றார். மேலும் 2023 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் ரிசர்வ் வீரராகவும் இடம் பெற்றார்.[5]
2023 ஆண்டில்,பிப்ரவரி மாதம், மகளிர் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக உத்திர பிரதேசம் வாரியர்ஸால் ₹10 லட்சம் விலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[2][6] ஜூன் 2023 இல், மகளிர் டி20 வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பைக்கான இந்தியா ஏ அணியில் சொப்பதண்டி யசாசிரி இடம் பெற்றார்.[7][8]
2024 ஆண்டில், ஜூலை மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பல வடிவத் தொடருக்கான இந்தியா ஏ அணியில் சொப்பதண்டி யசாசிரி இடம் பெற்றார்.[9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Player profile: Soppadhandi Yashasri". ESPNcricinfo.
- ↑ 2.0 2.1 "Soppadhandi Yashasri". Women's Premier League. Retrieved 6 November 2024.
- ↑ "Women's List A Matches played by Soppadhandi Yashasri". CricketArchive. Retrieved 6 November 2024.
- ↑ "Women's Twenty20 Matches played by Soppadhandi Yashasri". CricketArchive. Retrieved 6 November 2024.
- ↑ "India U19 Women's squad for ICC World Cup and SA series announced". BCCI. 5 December 2022. Retrieved 6 November 2024.
- ↑ D'cunha, Zenia (25 March 2023). "WPL opens a whole new world for women's cricket in India". ESPNcricinfo. Retrieved 6 November 2024.
- ↑ "BCCI announces India 'A' squad for Emerging Women's Asia Cup 2023". Sportstar. 2 June 2023. Retrieved 6 November 2024.
- ↑ "BCCI announces India 'A' squad for ACC Emerging Women's Asia Cup". இந்தியன் எக்சுபிரசு. 2 June 2023. Retrieved 6 November 2024.
- ↑ "India A Women's Squad for multi-format series against Australia A announced". BCCI. 14 July 2024. Retrieved 6 November 2024.
- ↑ "India 'A' Women announce squad for Australia tour, Minnu Mani to captain". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 6 November 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சொப்பதண்டி யசாசிரி
- Player Profile: சொப்பதண்டி யசாசிரி கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து