சொத்து ஆக்கவீதம்
Appearance
சொத்து ஆக்கவீதம்(Asset turnover) என்பது ஒரு நிறுவனத்தின் சொத்தின் மூலம் அதிகரிக்கும் விற்பனை வருவாய் திறனை அளக்க உதவும் நிதி வீதமாகும்[1]. குறைந்த லாப விளிம்பு கொண்ட நிறுவனங்களின் சொத்து ஆக்கவீதம் அதிகமாகவும்; அதிக லாப விளிம்பு கொண்ட நிறுவனங்களின் சொத்து ஆக்கவீதம் குறைவாகவும் இருக்கும். சில்லறை வணிகத்தில் இருக்கும் நிறுவனங்கள் கடுமையான மற்றும் போட்டியான விலை நிர்ணயம் மூலம் மிக அதிகமான சொத்து ஆக்கவீதம் கொண்டவை.
சொத்து ஆக்கவீதம் = நிகர விற்பனை / சராசரி மொத்த சொத்து
- நிகர விற்பனை வருவாய் - நிறுவனத்தின் வருமானக் கூற்றுபடி உள்ள விற்பனை
- சராசரி மொத்த சொத்து - ஒரு நிதியாண்டின் ஐந்தொகைப்படியுள்ள சொத்துக்களின் சராசரி மதிப்பு.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Bodie, Zane (2004). Essentials of Investments, 5th ed. McGraw-Hill Irwin. p. 459. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0072510773.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)