உள்ளடக்கத்துக்குச் செல்

சொங்கேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொங்கேட்
மினாங்கபாவு சொங்கேட்
வகைகலைத் துணி
பருப்பொருள்பட்டு, பருத்தி, தங்கம், வெள்ளி (தனிமம்)
தோன்றிய இடம்பலெம்பாங், சுமத்திரா இந்தோனேசியா, கடல்சார் தென்கிழக்காசியா[1]
சொங்கேட்
Songket
நாடுமலேசியா
களம்பாரம்பரிய கைவினைத்திறன்
மேற்கோள்01505
இடம்ஆசிய பசிபிக்
கல்வெட்டு வரலாறு
கல்வெட்டு2021 (16-ஆவது அமர்வு)
பட்டியல்பிரதிநிதி பட்டியல்

சொங்கேட் (மலாய்; ஆங்கிலம்: Songket அல்லது Sungkit) என்பது புரூணை, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் மக்கள் பயன்படுத்தும் துணிமணிகளைச் சார்ந்த ஒரு தெனுன் (Tenun) பின்னல் வகை ஆடை ஆகும். இது பட்டு அல்லது பருத்தியில் நெய்யப்பட்டது.

துணியில் இணைக்கப்படும் மெல்லிய உலோகத்திலான நூல்கள், துணியின் பின்னணியில் மினுமினுப்பான விளைவை உருவாக்குகின்றன.[2]

முன்பு காலத்தில் இந்தப் பின்னல் கலைத்துணிகள் கைகளால் மட்டுமே நெய்யப்பட்டன. எனினும், அண்மைய காலங்களில், உலகளாவிய நவீனமயத்திற்கு ஏற்ப இயந்திரங்களும் பயன்படுத்தப் படுகின்றன.

இந்தச் சொங்கேட் பின்னலின் தாயகம் இந்தோனேசியா என்றும்; 7-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவை ஆட்சி செய்த சிறீவிஜயப் பேரரசு (Srivijaya Empire) அறிமுகம் செய்தது எனவும்; முதன்முதலில் பலெம்பாங்கில் தோற்றம் கண்டது எனவும் அறியப்படுகிறது. அங்கிருந்து புரூணை, மலேசியா போன்ற நாடுகளுக்கு இந்தக் கலைப் பின்னல் பரவியது.

வரலாறு

[தொகு]

சுமத்திராவிற்கு வெளியே, பாலி, லொம்போக், சம்பாஸ், சும்பா, மக்காசார், சுலாவெசி மற்றும் இந்தோனேசியாவின் பிற பகுதிகளிலும் சொங்கேட்கள் தயாரிக்கப் படுகின்றன.

சிறீவிஜயப் பேரரசின் வரலாற்றுக் காரணிகள், வணிகம் மற்றும் கலப்புத் திருமணங்கள் காரணமாக, கடல்சார் தென்கிழக்காசியா பிராந்தியத்திலும், குறிப்பாக புரூணை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற இந்தோனேசியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் சொங்கேட் பிரபலமாகிவிட்டது.

பூமியாயு கோயில்

[தொகு]

1902-ஆம் ஆண்டில். தெற்கு சுமத்திராவின் பூமியாயு கோயிலில் (Bumiayu Temple) உள்ள சிலைகளின் மீது ஆய்வுகள் நடத்தப்பட்டன.[3] அந்த ஆய்வுகளின் அடிப்படையில், கிபி 8-ஆம் நூற்றாண்டில் இருந்து தெற்கு சுமத்திரா மக்களால் சொங்கேட் அணியும் வழக்கம் இருந்திருப்பதையும் அறிய முடிகிறது.[4]

2021-இல், யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) சொங்கேட் பின்னல் கலையை மனுக்குல அருவப் பாரம்பரியத்தின் (Masterpiece of the Oral and Intangible Heritage of Humanity) தலைசிறந்த படைப்பாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.[5]

காட்சியகம்

[தொகு]
  • சொங்கேட் காட்சிப் படங்கள்

மேலும் காண்க

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Achjadi, Judi (2015). Floating Threads: Indonesian Songket and Similar Weaving Traditions. Jakarta: BAB Publishing Indonesia. ISBN 978-6027208506.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kheng, June Ngo Siok (2011). "Revitalising the Craft of Songket Weaving through Innovation in Malaysia". In: Seminar a Celebration of South East Asia Textiles, in Conjunction with the Celebration of Textile Carnival and Exhibition at Department of Museums Malaysia, Kuala Lumpur 2011. https://ir.unimas.my/id/eprint/2558/. 
  2. Niken Prathivi (2 August 2015). "New book looks into 'songket' & weaving traditions". The Jakarta Post (Jakarta). http://www.thejakartapost.com/news/2015/08/03/new-book-looks-songket-weaving-traditions.html. 
  3. Budi Utomo, Bambang (2017-06-22). "Percandian Bumiayu". Balai Pelestarian Cagar Budaya Jambi (in இந்தோனேஷியன்). Retrieved 2021-01-26.
  4. "Bumiayu Temple". South Sumatra Tourism (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-02-19. Retrieved 2021-07-29.
  5. "Warisan Budaya Takbenda, Penetapan". Cultural Heritage, Ministry of Education and Culture of Indonesia. Retrieved 14 December 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொங்கேட்&oldid=4173145" இலிருந்து மீள்விக்கப்பட்டது