சொங்கலா மாகாணம்
சொங்கலா மாகாணம்
Songkhla Province สงขลา | |
|---|---|
இடமிருந்து வலமாக: அட் யாய், டாங் குவான் மலையிலிருந்து சொங்கலாவின் பரந்த காட்சி, தின்சுலானோன் அரங்கம், தின்சுலானோண்டா பாலம், காவ் நாம் காங் தேசிய பூங்கா, அட் யாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |
| குறிக்கோளுரை: சயாமின் தென்கோடியின் அழகான எல்லை நகரம் นกน้ำเพลินตา สมิหลาเพลินใจ เมืองใหญ่สองทะเล เสน่ห์สะพานป๋า ศูนย์การค้าแดนใต้ | |
தாய்லாந்தில் சொங்கலா மாகாணம் | |
| ஆள்கூறுகள்: 7°12′19″N 100°35′49″E / 7.20528°N 100.59694°E | |
| நாடு | |
| மாகாணம் | சொங்கலா மாகாணம் |
| பெருநகரம் | அட் யாய் |
| தலைநகரம் | சொங்கலா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 7,741 km2 (2,989 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 26-ஆவது[1] |
| மக்கள்தொகை (2024)[2] | |
| • மொத்தம் | ▼14,31,107 |
| • தரவரிசை | 11-ஆவது |
| • அடர்த்தி | 185/km2 (480/sq mi) |
| அடர்த்தி தரவரிசை | 15-ஆவது |
| மனிதச் சாதனை குறியீடு[3] | |
| • HAI (2022) | 0.6575 |
| மொத்த உள்நாட்டு உற்பத்தி [4] | |
| • மொத்தம் | பாட் 242 பில்லியன் (US$ 8.0 பில்லியன்) (2019) |
| நேர வலயம் | தாய்லாந்து நேரம் +7 |
| அஞ்சல் குறியீடு | 90xxx |
| தொலைபேசி | 074 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | TH-90 |
| இணையதளம் | songkhla |


சொங்கலா மாகாணம் (ஆங்கிலம்: Songkhla Province; தாய்: สงขลา; மலாய்: Singgora) என்பது தாய்லாந்தின் தென் மண்டலத்தில் அமைந்துள்ள மாகாணம் ஆகும். சத்துன் மாகாணம், பத்தலுங் மாகாணம், நக்கோன் சி தாமரத் மாகாணம், பட்டாணி மாகாணம் மற்றும் யாலா மாகாணம் ஆகிய மாகாணங்கள்; சொங்கலா மாகாணத்தின் அண்டை மாகாணங்களாக உள்ளன. சொங்கலா மாகாணத்தின் தெற்கே மலேசியாவின் கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்கள் எல்லைகளாக உள்ளன.
தாய்லாந்தின் மிகப்பெரிய இயற்கை ஏரியான சொங்கலா ஏரி (Songkhla Lake) இந்த மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மற்ற பெரும்பாலான மாகாணங்களைப் போல அல்லாமல், சொங்கலா மாகாணத்தின் தலைநகரான சொங்கலா இந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரம் அல்ல. மிக அண்மையில் உருவான அட் யாய் நகரம்; சொங்கலா நகரத்தை விட கணிசமான அளவில் பெரியது ஆகும். அட் யாய் நகரம்; சொங்கலா நகரத்தின் மக்கள் தொகையைப் போல சுமார் இரண்டு மடங்கு அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது; அத்துடன் சொங்கலா மாகாணத்தின் தலைநகரமாகவும் பெரும்பாலும் கருதப்படுகிறது
பெயரியல்
[தொகு]சொங்கலா என்ற பெயர் உண்மையில் சிங்கோரா (சாவி எழுத்துமுறை: سيڠڬورا) என்ற மலாய் மொழிச் சொல்லில் இருந்து மருவிய தாய்லாந்து மொழியின் வடிவமாகும். அதன் அசல் பெயர் மலாய் மொழியில் சிங்கங்களின் நகரம் என்று பொருள்படும். மேலும் இதனை சிங்கப்பூர் இராச்சியத்தின் சிங்கங்களின் நகரம் எனும் பெயருடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. சிங்கோரா எனும் பெயர் சொங்கலா நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள சிங்கம் போன்ற வடிவிலான ஒரு மலையைக் குறிக்கிறது.
வரலாறு
[தொகு]தொடக்ககால அரசுகள்
[தொகு]சிறீவிஜயப் பேரரசின்[5][6] வலுவான செல்வாக்கின் கீழ் இருந்த ஒரு பழமையான மலாய் இராச்சியத்தின் மையமாக சொங்கலா விளங்கியது. பண்டைய காலத்தில் (200–1400), சொங்கலா மாகாணமானது இலங்காசுகம் இராச்சியத்தின்[7] வடக்கே எல்லைப் பகுதியாக அமைந்திருந்தது. இந்த நகர அரசு பின்னர் சிங்கோரா சுல்தானகம் (Sultanate of Singgora)[8] எனும் சுல்தானகமாக உருவெடுத்தது.
அதன் பிறகு சொங்கலா மாகாணம், நக்கோன் சி தாமரத் இராச்சியம் (Nakhon Si Thammarat kingdom)[9] அரசிற்கு கப்பம் கட்டும் குறுநில நாடாக மாறியது. அத்துடன், விடுதலை பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளின் போது பெரும் சேதங்களைச் சந்தித்தது. 1450–1550 வரையிலான அரபு மற்றும் பாரசீக வணிகர்களின் பதிவுகளில், சொங்கலா முதன்முதலில் சிங்கோர் (Singor) அல்லது சிங்கோரா (Singora) என்று அறியப்பட்டது.
சத்திங் பிரா நிலச்சந்தி
[தொகு]சொங்கலா ஏரிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள், பொ.ஆ. 10 முதல் 14-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதி ஒரு முக்கிய நகர்மயமாக்கப்பட்ட பகுதியாகவும்; குறிப்பாக சீனாவின் குவான்சூ (Quanzhou) நகரத்துடனான பன்னாட்டு கடல்சார் வணிக மையமாகவும் இருந்ததை வெளிப்படுத்துகின்றன.
அங்கு இருந்த அரசின் நீண்ட சமசுகிருத பெயர் மறைந்துவிட்டது; அதன் சுருக்கமான சமசுகிருத பெயர் சிங்கபுரா (சிங்க நகரம்) என்பதாகும். அதன் மற்றொரு சுருக்கமான பெயர் ஆறு என்று பொருள்படும் சத்திங் மற்றும் சமசுகிருத சொல்லான புரா (நகரம்)[10]:320–321 ஆகியவற்றை இணைத்து சத்திங் பிரா என உருவானது. முக்கியத் துறைமுக நகரமான சத்திங் பிரா (Satingpra) நகரின் இடிபாடுகள் சொங்கலா நகரத்திற்கு[11] வடக்கே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.
தொல்லியல் அகழாய்வுகள்
[தொகு]சத்திங் பிரா நகரத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அகழாய்வுகள் பதிவு செய்துள்ளன. சத்திங் பிரா நகரம் செவ்வக வடிவிலானது; இது வளைகுடாவில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும், வளைகுடா காயலில் இருந்து 3 கிமீ தொலைவிலும்; சுமார் 0.9 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டிருந்தது. இங்கு 1979-80 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரிய செங்கல் கட்டிடங்களின் அடித்தளங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் தாங் அரசமரபு, சொங் அரசமரபு, யுவான் அரசமரபு மற்றும் மிங் அரசமரபு போன்ற சீனர் மரபுகளின் மண்பாண்டங்கள்; பொ.ஆ. 7 முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை இங்கு நிலவிய துறைமுக வணிகச் செயல்பாடுகளை[12]:61, 63 உறுதிப் படுத்துகின்றன.
7-ஆம் நூற்றாண்டு அல்லது 8-ஆம் நூற்றாண்டில்; பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட இந்து கோயிலான காவோ கூகா கோயில் (Khao Khuha) வரலாற்றுச் சின்னமாக அறியப்படுகிறது. அந்தக் கோயிலில் வண்ணம் பூசப்பட்ட இரண்டு அறைகளும்; மற்றும் அதே அறைகளில் ஓம் சின்னங்களும் உள்ளன. இதன் அருகிலுள்ள பாங் பிரா (Phang Phra Pond ) குளத்திலிருந்து 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கல அகத்தியர் சிலையும்; அதே பகுதியிலிருந்து 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விசுணு சிலையின் உடல் பகுதியும்[12]:61, 63 கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அயூத்தியா இராச்சியத்தின் கீழ்
[தொகு]
1619-1680 ஆம் ஆண்டுகளில், இந்தோனேசியாவிலிருந்து புலம்பெயர்ந்த மலாய் ஆளுநர்களின் பன்னாட்டு வணிகச் செயல்பாடுகளால், சிவப்பு குன்று (Red Hill/Khao Daeng) அருகே அமைந்திருந்த சொங்கலா நகரம் மிகவும் செழிப்போடு விளங்கியது. இடச்சுக்காரர்களின் வணிக ஏகபோக உரிமையிலிருந்து தப்பித்து, பிரித்தானியர்களின் ஆதரவுடன் சொங்கலாவில் அவர்கள் தன்னிச்சையாக வணிகம் செய்தனர். இதன் முதல் காலக்கட்டமான 1619-1642-இல், சொங்கலாவின் ஆளுநர் ஒரு முசுலிமாக இருந்தார்.
பின்னர், 1642-1680-இல் அப்போதைய சொங்கலா ஆளுநர்; அயூத்தியா இராச்சியத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்; நாராய் மன்னரால் (Narai) இந்த நகரம் ஒடுக்கப்பட்டு, அதன்பின்னர் கைவிடப்பட்டது. அதன் பிறகு, பத்தலுங் (Phatthalung) இதன் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டது. 1699 முதல் 1776 வரை, லேம்சன் என்ற புதிய இடத்தில் 'லேம்சன் சொங்கலா நகரம்' என்ற பெயரில் சொங்கலா நகரம் மறுசீரமைக்கப்பட்டது. அப்போதைய அந்த நகரம் சொங்கலா நகரத்தின் தற்போதைய அமைவிடத்திற்கு எதிர் திசையில் அமைந்திருந்தது.
சயாமிய இராச்சியத்தின் கீழ்
[தொகு]
1836-ஆம் ஆண்டில், மூன்றாம் ராமா மன்னர் சொங்கலா நகரத்தில் மதில் கோட்டையைக் கட்டுமாறு உத்தரவிட்டார். இந்த மதில் சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, துவாங்கு அகமதுசா-அத் எனும் முசுலிம் தலைவர், சிபுரி, பட்டாணி மற்றும் ஏழு பிற மாகாணங்களின் ஆட்சியாளர்களுடன் இணைந்து சொங்கலா மீது தாக்குதல் நடத்தினார்.
இந்தக் கிளர்ச்சிகள் அனைத்தும் மூன்றாம் ராமா மன்னரால் முழுமையாக ஒடுக்கப்பட்டன. அதன் பிறகு, கோட்டை மற்றும் நகர மதில் சுவர் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. பின்னர் சொங்கலா நகரம் போ யாங் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. 18-ஆம் நூற்றாண்டு முதல், சொங்கலா தாய்லாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வருகிறது. 1909-ஆம் ஆண்டின் ஆங்கிலோ-சியாமிய உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, சொங்கலா நிலப்பகுதி சயாம் நாட்டுடன் இணைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி, சயாம் நாடு, கிளாந்தான் மீதான தனது உரிமையை விட்டுக் கொடுத்தது; அதற்குப் பதிலாக வடக்கே உள்ள மாகாணங்களின் மீதான சயாமின் உரிமையை பிரித்தானியா அங்கீகரித்தது.
புவியியல்
[தொகு]
சொங்கலா மாகாணம் தாய்லாந்து வளைகுடாவின் கடற்கரையில், மலாய் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் வடக்கே தாய்லாந்தின் மிகப்பெரிய இயற்கை ஏரியான சொங்கலா ஏரி (Songkhla Lake) அமைந்துள்ளது. இந்த ஆழமற்ற ஏரி 1,040 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. அத்துடன், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 78 கிமீ தூரத்திற்குப் பரவியுள்ளது.[13]
சொங்கலா நகரத்திற்கு அருகில், தாய்லாந்து வளைகுடாவை இந்த ஏரி தொடும் கயவாய்ப் பகுதியில் இதன் நீர் உவர்நீராக மாறுகிறது.[14] இந்த ஏரியில் ஐராவதி ஓங்கில்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றன; இருப்பினும், உள்ளூர் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்படும் வலைகளில் அவை தற்செயலாகச் சிக்குவதால், தற்போது அழியும் நிலையில் உள்ளன.
தேசிய பூங்காக்கள்
[தொகு]சொங்கலா மாகாணத்தில் மூன்று தேசியப் பூங்காக்கள் உள்ளன.[15] (2024 ஆண்டில் வருகையாளர்கள்)
| சங்கலகிரி தேசியப் பூங்கா | 212 சதுர கிமீ | (13,744) |
| சங் லா கிரி தேசியப் பூங்கா | 143 சதுர கிமீ | (5,472) |
| நாம்டோக் சி போ தேசியப் பூங்கா | 70 சதுர கிமீ | (120,669) |
மக்கள்தொகை
[தொகு]பௌத்தர்கள் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு முதல்; நான்கில் மூன்று பங்கு வரை உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பழங்குடி தாய்லாந்து மக்கள் அல்லது தாய்-சீன மரபுவழியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[17] மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு முதல் மூன்றில் ஒரு பங்கு வரை முசுலிம்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் சாம்-சாம் (கலப்பு) என்று அழைக்கப்படும் தாய் மொழி பேசும் முசுலிம் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[18] முசுலிம் மக்களிடையே மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.[19]
சொங்கலா மலாய்க்காரர்கள் இனம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் மலேசியாவின் கிளாந்தான், பகுதி மலாய்க்காரர்களைப் போலவே உள்ளார்கள். அவர்கள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியில் இருந்து மருவிய[20] சொங்கலா மலாய் மொழியை (Songkhla Malay) பேசுகின்றனர்
மாகாண நிருவாகம்
[தொகு]மாகாண அரசு
[தொகு]சொங்கலா மாகாணம் 16 மாவட்டங்களாகப் (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்கள் மேலும் 127 துணை மாவட்டங்களாகவும் (Tambon) 987 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

| # | ஆங்கிலம் | தாய் | தமிழ் | மலாய் |
|---|---|---|---|---|
| 1 | Mueang Songkhla | เมืองสงขลา | முவெங் சொங்கலா | Bandaraya Singgora |
| 2 | Sathing Phra | สทิงพระ | சதிங் பிரா | Candi Barat |
| 3 | Chana | จะนะ | சனா | Cenok |
| 4 | Na Thawi | นาทวี | நா தவீ | Nawi |
| 5 | Thepha | เทพา | தேபா | Tiba |
| 6 | Saba Yoi | สะบ้าย้อย | சபா ஓய் | Sebayu |
| 7 | Ranot | ระโนด | இரனோடு | Renut |
| 8 | Krasae Sin | กระแสสินธุ์ | கிராசே சின் | Kota Ayer |
| 9 | Rattaphum | รัตภูมิ | இரத்தபூம் | Tanah Merah |
| 10 | Sadao | สะเดา | சதாவோ | Sendawa |
| 11 | Hat Yai | หาดใหญ่ | அட்யாய் | Pantai Besar |
| 12 | Na Mom | นาหม่อม | நா தோம் | Dataran Cengal Pasir Agung |
| 13 | Khuan Niang | ควนเนียง | குவான் நியாங் | Kuning |
| 14 | Bang Klam | บางกล่ำ | பாங் கிளாம் | Kampung Pulau Bulat |
| 15 | Singhanakhon | สิงหนคร | சிங்க நக்கோன் | Singapura |
| 16 | Khlong Hoi Khong | คลองหอยโข่ง | குலோங் ஓய் கோங் | Terusan Siput Gondang |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
- ↑ "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025.
, year 2024, provincial level, Excel File, no.90
- ↑ "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024.
, page 71
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
- ↑ Rausa-Gomez, Lourdes (20 January 1967). "Sri Vijaya and Madjapahit". Philippine Studies 15 (1): 63–107. doi:10.13185/2244-1638.2335. https://www.jstor.org/stable/42720174.
- ↑ Sastri, K. A. Nilakanta (20 January 2024). "Śrī Vijaya". Bulletin de l'École Française d'Extrême-Orient 40 (2): 239–313. https://www.jstor.org/stable/43733093.
- ↑ Lim, Joo-Jock; Shanmugaratnam, Vani (1984). Armed Separatism in Southeast Asia (in ஆங்கிலம்). Institute of Southeast Asian Studies. p. 221. ISBN 978-9971-902-51-3. Archived from the original on 27 October 2020.
- ↑ Khoo, Benjamin J. Q.; Dalrymple, Graham H. (2024). "Reappraising the Narrative of Dato Mogul and Singora's Early History" (in en). TRaNS: Trans-Regional and -National Studies of Southeast Asia 12 (2): 95–109. doi:10.1017/trn.2023.11. பன்னாட்டுத் தர தொடர் எண்:2051-364X. https://www.cambridge.org/core/journals/trans-trans-regional-and-national-studies-of-southeast-asia/article/reappraising-the-narrative-of-dato-mogul-and-singoras-early-history/E031D54F927947C0100D48533297C472.
- ↑ Lieberman, Victor (2003). Strange Parallels: Volume 1, Integration on the Mainland: Southeast Asia in Global Context, c.800–1830 (Studies in Comparative World History) (Kindle ed.). Cambridge University Press. ISBN 978-0521800860.
- ↑ Stargardt, Janice (2001). "Behind the Shadows: Archaeological Data on Two-Way Sea Trade Between Quanzhou and Satingpra, South Thailand, 10th-14th century". In Schottenhammer, Angela (ed.). The Emporium of the World: Maritime Quanzhou, 1000-1400. Volume 49 of Sinica Leidensia. Brill. pp. 309–393. ISBN 90-04-11773-3.
- ↑ Michel Jacq-Hergoualc'h (2002). BRILL (ed.). The Malay Peninsula: Crossroads of the Maritime Silk-Road (100 Bc-1300 Ad). Translated by Victoria Hobson. BRILL. pp. 411–416. ISBN 90-04-11973-6.
- 1 2 Sanghiran, Siriporn (2019). "Archaeological Sites and Findings on the Lower Peninsula of Thailand from the Seventh to Thirteenth Century Reflecting the Maritime Silk Road". In Amara Srisuchat; Wilfried Giessler (eds.). Ancient Maritime Cross-cultural Exchanges: Archaeological Research in Thailand (PDF) (in ஆங்கிலம்). Bangkok: Fine Arts Department, Ministry of Culture. pp. 54–77. ISBN 978-616-283-434-9. Archived (PDF) from the original on 2 September 2026. Retrieved 3 September 2026.
- ↑ Rattanachaya, Kitti (1996). The Communist Party of Malaya, Malaysia and Thailand. Duangkaew Publishing House. pp. 20–35. ISBN 974-89403-1-4.
- ↑ "Songkhla Lake". Tourism Authority of Thailand (TAT). Retrieved 23 May 2015.
- ↑ "สถิตินักท่องเที่ยวที่เข้าไปอุทยนห่งชาติ ปีงบประมาณ พ.ศ. 2567" [Statistics of tourists visiting national parks in fiscal year 2024]. Department National Parks, Wildlife and Plant Conservation (in தாய்). Retrieved 6 September 2025.
- ↑ "เอกสารตรวจราชการ รอบ 2 ปี 2562". Songkhla Provincial Public Health Office. 26 July 2019. Retrieved 19 March 2020.
- ↑ Geoffrey Benjamin, Cynthia Chou (26 August 2002). Tribal Communities in the Malay World. Institute of Southeast Asian Studies. p. 80. ISBN 981-230-166-6.
- ↑ Kobkua Suwannathat-Pian (2000). The Historical Development of Thai-Speaking Muslim Communities in Southern Thailand and Northern Malaysia. Routledge. p. 173. ISBN 0-7007-1173-2.
Civility and Savagery: Social Identity in Tai States
- ↑ songkhla.xls
- ↑ ""Tak Dok Po": Kekhasan Ekonomi Bahasa Melayu Thailand" (PDF). repositori.kemdikbud.go.id (in இந்தோனேஷியன்). Retrieved 1 November 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Songkhla Province சொங்கலா மாகாணம் பற்றிய ஊடகங்கள்- Provincial website சொங்கலா இணையத்தளம்