சொக்கப்ப நாவலர்
தோற்றம்
சொக்கப்ப நாவலர் | |
---|---|
பிறப்பு | குன்றத்தூர் |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | தஞ்சைவாணன் கோவைக்கு விளக்கவுரை[1] |
சொக்கப்ப நாவலர் என்பவர் தஞ்சைவாணன் கோவைக்கு விளக்கவுரை எழுதிய உரையாசிரியர் ஆவார்.
வாழ்க்கை குறிப்பு
[தொகு]சொக்கப்ப நாவலர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த குன்றத்தூரில் பிறந்தார். தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் சிறப்பு பெற்றிருந்த காலத்தில் வாழ்ந்தவர். இவர் சிறந்த தமிழ்ப்புலமை மிக்கவர். பாவன்மையும் நாவன்மையும் நிரம்பியவர்.தஞ்சைவாணன் கோவை இயற்றிய பொய்யாமொழிப் புலவர் மரபில் வந்தவர். இவர் சேலம் நகரில் கணக்கத் தெருவில் வாழ்ந்து வந்தார். இவர் வழியினர் இன்றும் சேலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.[2]