சை. பீர் முகம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சை. பீர்முகம்மது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சை. பீர் முகம்மது (பிறப்பு சனவரி 11, 1942) மலேசியாவின் மூத்த தமிழ் இசுலாமிய எழுத்தாளர்களுள் ஒருவர்; ஞானாசிரியனன் எனும் புனைப்பெயராலும் அறியப்பட்டவர். சிறந்த திறனாய்வாளர், இலக்கியப் பேச்சாளர், தமிழ் இளைஞர் மணி மன்றம் முதலிய சமுதாய இயக்கங்களில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் என்ற அடிப்படையிலும் அறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

இவர் 1959 முதல் சுமார் ஐந்து தசாப்த்தங்களுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், புதுக் கவிதைகள், திறனாய்வுகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் என தமிழ் படைப்பிலக்கியத் துறையிலும் இலக்கிய ஆய்வுத்துறையிலும் தனது பங்களிப்பினைத் தொடர்ச்சியாக வழங்கிவருகிறார். இவரது முதல் சிறுகதை 1961இல் சிங்கப்பூரின் மாணவன் இதழில் வெளிவந்தது. மலேசிய தேசிய பத்திரிகைளிலும் இதழ்களிலும் இவரின் இத்தகைய ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் தமிழ் நாட்டில் "புதிய பார்வை", "கணையாழி", "கலைமகள்", "ஓம் சக்தி" போன்ற இதழ்களிலும் இவரது கதைகள் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

இவரால் எழுதப்பட்ட நூல்களில் சில வருமாறு

  • வெண்மணல் (சிறுகதைத் தொகுப்பு)
  • பெண் குதிரை (நாவல் - 1997)
  • கைதிகள் கண்ட கண்டம் (பிரயாணக் கட்டுரை - 1997)
  • மண்ணும் மனிதர்களும் (பிரயாணக் கட்டுரை - 1998)
  • வேரும் வாழ்வும் - பாகம் 1 (1999)
  • வேரும் வாழ்வும் - பாகம் 2 (2001)
  • வேரும் வாழ்வும் - பாகம் 3 (2001)
  • மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் (தொகுப்பாசிரியர், 2001);
  • திசைகள் நோக்கிய பயணங்கள் (கட்டுரை, 2006)

வேரும் வாழ்வும்[தொகு]

வேரும் வாழ்வும் என்பது மலேசிய எழுத்தாளர்களின் பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு நூலாகும். இதன் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன. இந்த தொகுதிகள் மூலம் மலேசியா சிறுகதை இலக்கியப் பரப்பினை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

இலக்கியப் பணி[தொகு]

மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் ஆதரவு வழங்கி வரும் இவர் பல மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை நூலுருவாக்க உதவியுள்ளார். அத்துடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

இதழாசிரியர்[தொகு]

மலேசியாவிலிருந்து வெளிவந்த "உதய சக்தி" என்னும் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • "செந்தமிழ் மாமணி" (1998); சென்னை தாய்மண் இலக்கியக் கழகம் வழங்கியது.
  • "எழுத்துச் செம்மல்"; பழனி தமிழ் நாட்டுக் கவிஞர் பேரணி வழங்கியது.
  • தங்க விருதும் தமிழ்ச் செம்மல் விருதும் தமிழ் நாட்டுப் பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது
  • பணமுடிப்பு (1996); பாரதிதாசன் விழாக் குழுவினர் வழங்கியது
  • "மணிச்சுடர்"; பினாங்கு மணிமன்றம் வழங்கியது
  • கோ. சாரங்கபாணி விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1984). வழங்கியது
  • தான் ஸ்ரி ஆதிநாகப்பன் விருது 2007

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சை._பீர்_முகம்மது&oldid=863415" இருந்து மீள்விக்கப்பட்டது