சைலா ராகவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைலா ராகவ் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டஒரு காலநிலை மாற்ற நிபுணரும் அதற்கான கொள்கைகளை உருவாக்குபவருமாவார். அவர் இலாப நோக்கற்ற சர்வதேச பேணுகை என்ற காலநிலை மாற்றத்திற்கான நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சைலா ராகவ் இந்தியாவில் பிறந்திருந்தாலும், நைஜீரியா மற்றும் சவுதி அரேபியாவில் தான் பள்ளிப்பருவத்தையும் கல்லூரி பருவத்தையும் கழித்தார், அந்த நாடுகளில், புவி வெப்பமடைதலின் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் ஏற்படும் விளைவுகளை நேரடியாகக் கண்டதன் மூலமாக இந்த துறையில் நுழைந்தார். [1] உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, மின் தூக்கிக்கு பதிலாக படிகளை பயன்படுத்துவதன் மூலமும் எல்.ஈ.டி விளக்குகளை பயன்படுத்துவதன் மூலமும் எளிதாக புவி வெப்பமடைதலை குறைக்கலாம் என்று அவரது நண்பர்களுக்கும், உடன் படிப்போருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். [2]

கலிபோர்னியா இர்வின் பல்கலைக்கழகத்தில், சூழலியல் மற்றும் சர்வதேச உறவுகள் பாடத்தில் தனது இளங்களைப் படித்த இவர், யேல் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.  [3]

தொழில்[தொகு]

சைலா, சர்வதேச பேணுகை நிறுவனத்தின் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகமாலத்தீவுக்கான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாக பணியாற்றினார், அங்கு அவர் கிட்டத்தட்ட 30 நாடுகளில் பாதுகாப்பு முயற்சிகளை மேற்பார்வையிடுகிறார். [4] இலாப நோக்கற்ற கார்பன் தட கணிப்பானுக்கு முக்கிய பங்களிப்பாளராக இருந்துள்ளார். இக்கணிப்பான் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பை பயனர்களே கணக்கிடத் தேவையான பழக்கவழக்கங்களைப் பற்றிய தகவல்களை அந்தந்த பயனர்களே உள்ளீடு செய்ய அவர்களுக்கு அனுமதியளிக்கிறது. [1]

பாரிஸ் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார். [5]

சைலா, ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் மூலம் தொடங்கப்பட்ட இஃப் / தென் என்ற அமைப்பின் தூதுவராக  #இஃப்,தென்அவளால்முடியும் (#IfThenSheCan) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கண்காட்சியில் நியமிக்கப்பட்டார். இந்த கண்காட்சியில் ஸ்டெம்-இல் உள்ள முன்மாதிரிகளின் வாழ்க்கை அளவிலான 3D-அச்சிடப்பட்ட சிலைகளின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.[3] இந்த நிறுவனத்தின் தூதுவராக, 2020 ம் ஆண்டில் நடைபெற்ற டீன் வோக் உச்சிமாநாட்டில் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்கி, பதின்ம வயதினராக, பயனுள்ள அறிவியல் தொடர்பு, பணியிடத்தில் பெண்களைப் பற்றிய  ஒரே மாதிரியான பொதுக் கருத்துகளை அகற்றுதல் மற்றும்  காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துதல் பற்றி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Meet the Woman Making it Easier to Reduce Your Carbon Footprint". InStyle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-17."Meet the Woman Making it Easier to Reduce Your Carbon Footprint". InStyle. Retrieved 2022-11-17.
  2. "Shyla Raghav". www.earthsciweek.org. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  3. 3.0 3.1 "| IF/THEN® Collection". www.ifthencollection.org. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17."| IF/THEN® Collection". www.ifthencollection.org. Retrieved 2022-11-17.
  4. "The Hidden Impacts of Climate Change". www.vice.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  5. "Shyla Raghav". Institute of the Environment and Sustainability at UCLA (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-22. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  6. "Climate Change Expert Shyla Raghav and Venture Capital Trailblazer Terri Burns Mentor Attendees at the Teen Vogue Summit". Teen Vogue (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-12-15. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலா_ராகவ்&oldid=3751134" இலிருந்து மீள்விக்கப்பட்டது