சைலக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைலாக்
இயக்கம்சாமா-ராமு
திரைக்கதைகினிமா ராமு
இசைஎஸ். கி. காசி ஐயர்
நடிப்புசெருகளத்தூர் சாமா
ஒளிப்பதிவுகே. பிரபாகர்
படத்தொகுப்புடி. ஆர். எஸ். ராகவன்
கலையகம்பாரத் பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 23, 1940 (1940-11-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சைலாக் (Shylock) 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாமா-ராமு ஆகிய இருவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, டி. எஸ். சந்தானம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது வில்லியம் சேக்சுபியரின் தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ் என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. படத்தை பாரத் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.[1] மேலும் சாமா சைலாக் என்ற கதாபாத்திரமாக நடித்திருந்தார். படம் 23 நவம்பர் 1940 இல் வெளியிடப்பட்டது வணிக ரீதியாக தோல்வியடைந்தது. இதன் படச்சுருள் எங்கும் கிடைக்கவில்லை. அது தொலைந்து போயிருக்கலாம்.

தயாரிப்பு[தொகு]

வில்லியம் சேக்சுபியரின் அறிஞரும் கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞருமான கினிமா ராமு, சேக்சுபியர் எழுதிய தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ் நாடகத்தின் தமிழ் தழுவலாக இப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். இவருடன் இணைந்து அவரது நண்பர் செருகளத்தூர் சாமாவும் இணைந்து சாமா-ராமு என்ற பெயரில் படத்தை இயக்கியிருந்தனர்.[2]

படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களையும் யானை வைத்தியநாத ஐயர், பி. எஸ். சிவராமலிங்கம் (திரையில் டியூக்காக நடித்தவர்) மற்றும் பாபநாசம் சிவனின் சகோதரர் பாபநாசம் ராஜகோபால ஐயர் ஆகியோர் எழுதியிருந்தனர். நாடக நடிகர் எஸ். ஜி. கிட்டப்பாவின் சகோதரர் எஸ். ஜி. காசி ஐயர், இசையமைப்பாளராக இருந்ததைத் தவிர திரையில் அன்டோனியோவாக நடித்தும் இருந்தார்.[2] ஒளிப்பதிவை கே.பிரபாகர் என்பவரும், படத்தொகுப்பை டி. ஆர். எஸ். ராகவனும் செய்துள்ளனர்.[3] சென்னையின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரத் மூவிடோனில் படப்பிடிப்பு நடந்தது.[2] உடைகள் மற்றும் அமைப்பு மூலம் கதைக்காக ஒரு உண்மையான வெனிசின் தோற்றத்தை மீண்டும் உருவாக்க தயாரிப்பாளர்கள் அதிக முயற்சி எடுத்தனர்.[4]

வெளியீடும் வரவேற்பும்[தொகு]

சைலாக் 23 நவம்பர் 1940 இல் வெளியிடப்பட்டது.[5] இந்தியன் எக்சுபிரசு விமர்சகர் கே. யெஸ் என்: “சேக்சுபியரை திரையில் கொண்டு வர முயற்சிப்பதும், அசலை உண்மையாக வைத்து அதில் வெற்றி பெறுவதும், செருகளத்தூர் சாமா மற்றும் ராமா ஆகியோரின் பெயரில் நிற்கும் பெருமைக்குரிய சாதனையாகும்” என எழுதினார்.[6] இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை; வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, பார்வையாளர்கள் பாத்திரங்கள், உடைகள் மற்றும் அரங்கங்கள் ஆகியவற்றுடன் ஒன்றினையாததே என்பதே இதற்குக் காரணம்.[2] படத்தின் சுருள் ஏதும் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை, இது ஒரு தொலைந்த படமாக ஆனது.[2][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Doraiswamy, V. (1952). Asian Film Directory and Who's who. மும்பை: Fozalbhoy House. பக். 176. https://books.google.com/books?id=0wY6AQAAIAAJ&q=shylock. பார்த்த நாள்: 30 March 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Randor Guy (29 March 2014). "Blast from the Past: Shylock (1941)". த இந்து இம் மூலத்தில் இருந்து 22 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160922155648/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/shylock-1941/article5848280.ece. 
  3. "1940 – ஷைலாக் – பாரத் பிக்சர்ஸ்" [1940 – Shylock – Bharat Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 7 December 2018. பார்க்கப்பட்ட நாள் 10 February 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Jain, Manju, தொகுப்பாசிரியர் (2009). Narratives of Indian Cinema. Primus Books. பக். 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788190891844. https://books.google.com/books?id=ORE9TDOoU1IC&q=shylock+1940+Tamil&pg=PA233. பார்த்த நாள்: 30 March 2021. 
  5. "Shylock". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 23 November 1940. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19401123&printsec=frontpage&hl=en. 
  6. Kay Yess Enn (23 November 1940). "Shakespeare on Tamil Screen". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. https://news.google.com/newspapers?id=9ZI-AAAAIBAJ&sjid=3UsMAAAAIBAJ&pg=4732%2C7934232. 
  7. S. Theodore Baskaran (23 April 2016). "Of monologues and melodrama". த இந்து இம் மூலத்தில் இருந்து 2 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181102080351/https://www.thehindu.com/opinion/op-ed/theodore-baskaran-on-shakespeareinspired-tamil-films/article8510087.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலக்&oldid=3913293" இலிருந்து மீள்விக்கப்பட்டது