சைர்டோடாக்டைலசு கொலிகாலெனென்சிசு
| சைர்டோடாக்டைலசு கொலிகாலெனென்சிசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | சைர்டோடாக்டைலசு
|
| இனம்: | சை. கொலிகாலெனென்சிசு
|
| இருசொற் பெயரீடு | |
| சைர்டோடாக்டைலசு கொலிகாலெனென்சிசு (பெடோமி, 1870) | |
| வேறு பெயர்கள் | |
|
ஜிகோயெல்லா கொலிகாலெனென்சிசு | |
சைர்டோடாக்டைலசு கொலிகாலெனென்சிசு (Cyrtodactylus collegalensis) தரையில் வாழும் பல்லிச் சிற்றினம் ஆகும். கொல்லேகல் தரைப் பல்லி அல்லது காட்டுப் புள்ளிப் பல்லி என்றும் அழைக்கப்படும் சை. கொலிகாலெனென்சிசு, தென்னிந்தியாவில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் சந்திப்பில், மைசூர் மலைகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. சமீபத்திய வகைப்பாட்டியல் ஆய்வுகளின்படியும் மரபணு ஆய்வுகள் மூலமும், முன்னர் கூறப்பட்ட இனம் உண்மையில் பரவலான சைர்டோடாக்டைலசு பேரினத்தின் துணைப்பேரினமாகும் என்பதைக் காட்டுகிறது. இது பெரும்பாலும் காட்டுப் புள்ளிப் பல்லியுடன் (சைர்டோடாக்டைலசு இசுபெசியோசசு) ஒத்த இனமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
வாழிடம்
[தொகு]சை. கொலிகாலெனென்சிசு முதன்மையாக தரையில் வாழும், அடர்த்தியான இலைக் குப்பைகளுக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் பல்லி இனமாகும். இவை இரவு நேர விலங்காகவும், பூச்சி உண்ணியாகும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் விலங்காக அறியப்படுகிறது. இவை காடுகளில், வறண்ட, கலப்பு அல்லது ஈரமான நிலத்தில், முக்கியமாக மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்கின்றன.
பரவல்
[தொகு]தெற்கு கர்நாடகாவில் உள்ள பி. ஆர். மலைகளிலிருந்து 1870ஆம் ஆண்டு இப்பல்லி சிற்றினம் விவரிக்கப்பட்டது.[2] பவுலெங்கர் இதை சைர்டோடாக்டைலசு நெபுலோசசுடன் ஒத்ததாகக் கருதினார். பின்னர் இது மகாராட்டிரா, கருநாடகம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் சந்திப்பிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அருகிலுள்ள மலைத்தொடர்களில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.[3] இலங்கையில், அதன் இருப்பு சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Achyuthan, N.S.; Ganesh, S.R.; Giri, V. (2021). "Cyrtodactylus collegalensis". IUCN Red List of Threatened Species 2021: e.T136380389A123300928. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T136380389A123300928.en. https://www.iucnredlist.org/species/136380389/123300928. பார்த்த நாள்: 18 November 2021.
- ↑ Beddome, RH (1870). "Descriptions of new reptiles from the Madras Presidency". Madras Monthly Journal of Medical Science 2: 169–176.
- ↑ Kluge, AG (1983). "Cladistic relationships among gekkonid lizards". Copeia 1983 (2): 465–475. doi:10.2307/1444392. https://archive.org/details/sim_copeia_1983-05-06_2/page/464.
மேலும் படிக்க
[தொகு]- Prasanna, Ganesh (1993). "Leopard gecko (Cyrtodactylus collegalensis)". Dactylus 1 (4): 33.
- Vyas, Raju (2000). "Notes on distribution and breeding ecology of Gekkoella collegalensis (Beddome, 1870)". Hamadryad 25 (1): 45–46.
- Mirza, Z. (2010). "Notes on a ground gecko Gekkoella cf. collegalensis BEDDOME, 1870(SQUAMATA, SAURIA, GEKKONIDAE) From India". Russian Journal of Herpetology 17 (1): 8–14.
- Agarwal, I., Mirza, Z. A., Pal, S., Maddock, S. T., Mishra, A., & Bauer, A. M. (2016). A new species of the Cyrtodactylus (Geckoella) collegalensis (Beddome, 1870) complex (Squamata: Gekkonidae) from Western India. Zootaxa, 4170(2), 339–354.
- Agarwal, I. (2016). Two new species of ground-dwelling Cyrtodactylus (Geckoella) from the Mysore Plateau, south India. Zootaxa, 4193(2), 228–244.
