உள்ளடக்கத்துக்குச் செல்

சைரிசு ஆத்ரே பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைரிசு ஆத்ரே பை (Shirish Atre Pai)(15 நவம்பர் 1929[1]-2 செப்டம்பர் 2017) இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த ஒரு சமூக சேவகரும் எழுத்தாளரும் ஆவார். இவர் மராத்தி, ஆங்கில மொழிகளில் எழுதியுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சைரிசு பிரகலாத் கேசவ் ஆத்ரேவின் மூத்த மகள். இவர் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றார்.[2]

தொழில்

[தொகு]

சைரிசு தனது தந்தையின் செய்தித்தாளான மராத்தாவில் ஒரு பத்திரிகையாளராகச் சேர்ந்தார்.[3] இவர் சோவியத் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறையால் ஆழமாக ஈர்க்கப்பட்டார். மேலும் சோவியத் ஒன்றியம், பிற கிழக்குப் பகுதி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். தனது தந்தையுடன் சேர்ந்து, சம்யுக்த மகாராட்டிர இயக்கத்தில் பங்காற்றினார்.

எழுதுதல்

[தொகு]

சைரிசு கவிதைத் தொகுப்புகள் உட்படப் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1975ஆம் ஆண்டு மராத்தி இலக்கியத்திற்கு ஐக்கு கவிதை வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.[3] இவர் சப்பானிய ஐக்கு கவிதைகளை மராத்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார்.[4]

சூன் 2011இல் செய்தித்தாள் நேர்காணல் ஒன்றில், தான் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே கவிதைகள் எழுதவும் இயற்றவும் தொடங்கியதாகவும், இந்த விசயத்தில் தனது தந்தையிடமிருந்து மிகுந்த ஊக்கத்தைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.

குடும்பம்

[தொகு]

சைரிசு வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான வியாங்கடேசு பையை மணந்தார். இவர்களுக்கு இராஜேந்திர பை, விக்ரமாதித்திய பை என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வழக்கறிஞர்கள். இவர் மும்பையில் வசித்து, அங்கேயே இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. लेखिका आणि सामाजिक कार्यकर्त्या शिरीष पै यांचे निधन (in மராத்தி)
  2. "Marathi poet Shirish Pai passes away". Mumbai Mirror, India Times. https://mumbaimirror.indiatimes.com/mumbai/other/marathi-poet-shirish-pai-passes-away/articleshow/60343723.cms. பார்த்த நாள்: 3 September 2017. 
  3. 3.0 3.1 Thiagarajan, A. "Shirish Pai – An Introduction". Boloji. Retrieved 9 August 2015.
  4. Ramesh, Kala. "A History of Indian Haiku" (PDF). The Haiku Foundation. Retrieved 9 August 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]

பின்வரும் வலைப்பக்கம் சைரிசு பையின் புத்தகங்களை பட்டியலிடுகிறது:

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைரிசு_ஆத்ரே_பை&oldid=4203790" இலிருந்து மீள்விக்கப்பட்டது