உள்ளடக்கத்துக்குச் செல்

சையீன் சாஹூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சயீன் ஜஹூர்
பிறப்பு1936 (1936)
சுலேமான்கி, ஓக்ரா நகரம், பாகிஸ்தான்
பணிநாட்டுப்புறப் பாடகர்
இசையமைப்பளர்
அறியப்படுவதுஎக்தாரா, தும்பி

சையீன் ஜாஹூர் அகமது அல்லது அலி சைன் ஷஃபியு (பஞ்சாபி : سائیں ظہور, பிறப்பு 1936) [1] பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு முன்னணி பஞ்சாபி சூஃபி இசைக்கலைஞர் ஆவார். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சூஃபி வழிபாட்டுத் தலங்களில் பாடிக் கழித்தார். மேலும் 2006 ஆம் ஆண்டு பிபிசி வேர்ல்ட் மியூசிக் விருதுகளுக்கு வாய் வார்த்தையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் வரை அவர் எந்தப் இசைப்பதிவையும் உருவாக்கியிருக்கவில்லை.[2]

அவர் "2006 ஆம் ஆண்டின் சிறந்த பிபிசி குரலாக"த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] சயீன் என்பது அவரது முதல் பெயர் அல்ல, மாறாக சிந்தி மரியாதைக்குரிய தலைப்பாகும்.மேலும் சயீன் என்பது செய்ன் என்றும் உச்சரிக்கப்படுகிறது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஒகாரா மாவட்டத்தின் ஹவேலி லாக்க்காவிற்கு அருகிலுள்ள சுலைமான்கி என்ற கிராமத்தில் பிறந்த ஜாகூர் அகமது, கிராமப்புற விவசாயக் குடும்பத்தில் பிறந்த இளைய குழந்தை ஆவார்.[3][2] அவர் ஐந்தாவது வயதில் பாடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.[3] அந்தச் சிறு வயதிலிருந்தே, ஒரு கை அவரை ஒரு சன்னதியை நோக்கி அழைப்பதாக அவர் கனவு கண்டார். பஞ்சாபின் சிந்துவில் உள்ள சூஃபி கோவில்களில் சுற்றித் திரிந்தார். சூஃபி பாடல்களப் பாடுவதன் மூலம் வாழ்க்கையைத் தொடர்ந்தார். தெற்கு பஞ்சாப் நகரமான உச் ஷரீப்பில் (சூஃபி மரபுகளுக்குப் பெயர் பெற்றது) ஒரு சிறிய கோவிலைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, "யாரோ ஒருவர் கையசைத்து என்னை உள்ளே அழைத்தார். அது கனவில் கண்ட இந்தக் கைதான் என்பதை நான் உணர்ந்தேன்" என்று ஜஹூர் கூறுகிறார்.[3]

சில காலம், அவர் பாட்டியாலா கரானாவின் ரௌங்கா அலியின் கீழ் இசை பயின்றார். அவரை புல்லே ஷாவின் தர்காவில் (கோவில்) சயீன் சந்தித்தார். மேலும் சூஃபி வசனங்களுக்கு ரௌங்காவே முதல் ஆசிரியரானார். அவர் உச் ஷரீஃபைச் சார்ந்த மற்ற இசைக்கலைஞர்களிடமும் இசை பயின்றார்.[3]

எழுத்தறிவு இல்லாவிட்டாலும், அவரது நினைவாற்றலுக்காக ஜாஹூர் அறியப்படுகிறார். அவர் பெரும்பாலும் அவர் முக்கிய சூஃபி கவிஞர்களான புல்லே ஷா, ஷா படாக்ஷி, முஹம்மது காதிரி, சுல்தான் பாஹு மற்றும் பலரின் பாடல்களைப் பாடினார்.[4]

சைன் கோக் ஸ்டுடியோவில் (பாகிஸ்தான்) தனது நிகழ்ச்சிகளுக்காக பிரபலமானவர்.[2] 2009 இல், அவர் லாகூரில் ரஃபி பீர் தியேட்டர் ஒர்க்ஷாப் ஏற்பாடு செய்த நாட்டுப்புற இசை விழாவில் பங்கேற்றார். மேலும் அவர் மக்களைத்டிரட்டும் கலைஞராக இருந்ததாக கூறப்படுகிறது.[5]

இசை பாணி[தொகு]

ஜஹூர் தனது அலங்கரிக்கப்பட்ட ஏக்தாராவுடன் (ஒரு வகையான வீணை, பொதுவாக ஒரு சரம், ஆனால் அவர் மூன்று சரங்கள் கொண்ட பதிப்பைப் பயன்படுத்துகிறார்) நீளமான குர்தா மற்றும் ghungroos (கணுக்கால் மணிகள்) ஆகியவற்றைக் கவனியுங்கள்.

அவரது வாழ்நாளின் பெரும்பகுதியை, ஜஹூர் தர்காக்களிலும் (சூஃபி கல்லறைகள்/கோயில்கள்), திருவிழாக்களிலும், தெருக்களிலும் நிகழ்த்தினார். அவர் நாட்டுப்புற கருவியான எக்தாராவைக் கொண்டு ( ஏக் = ஒன்று, தார் = சரம்), அதன் மூன்று சரங்கள் கொண்ட தும்பி என்று அழைக்கப்படும் இசைக்கருவையை தனது முக்கிய கருவியாக ஏற்றுக்கொண்டார். சூஃபி இசையின் சில மரபுகளைப் போலவே, அவர் ஒரு உணர்ச்சிமிக்க, அதிக ஆற்றல் கொண்டு பாடும் பாணியைக் கொண்டுள்ளார். அடிக்கடி அவரது கருவியில் உள்ள குஞ்சைகளை அவரிமீது சுற்றி சுழன்று கொண்டு ஒரு வெறித்தனமான பாணியில் நடனமாடுகிறார். அவரது வழக்கமான அலங்காரத்தில் நூலலங்காரம் செய்யப்பட்ட ( குர்தா ), மணிகள், இறுக்கமாகக் கட்டப்பட்ட தலைப்பாகை, அத்துடன் குங்குரூஸ் (நடனக் கலைஞர்கள் அணியும் கணுக்கால் மணிகள்) ஆகியவை அடங்கும். அவரது குரல் மிகுந்த யதார்த்த தொனியைக் கொண்டுள்ளதாக இருந்தாலும், குரலுடையும் தொனிபோல் இருந்தாலும் பரந்த குரல் மற்றும் உணர்ச்சி வரம்பை அடையக்கூடியதாக உள்ளது. அவரது துளையிடும் ஒளி அம்சங்கள் பாக்கிஸ்தானிய தொலைக்காட்சியில் வழக்கமான காட்சியாகும். மேலும் அவர் குறைந்தது ஒரு ஆவணப்படத்தின் பேசுபொருளாக இருந்துள்ளார்.

1989 ஆம் ஆண்டில், ஆல் பாகிஸ்தான் இசை மாநாட்டில் அவர் முதல் முறையாக தனது கச்சேரியை மேடையில் நிகழ்த்தினார். இது அவரை இசையை முக்கியத்துவத்திற்குக் கொண்டு வந்தது. பின்னர் பாகிஸ்தானில் முன்னணிக் கலைஞராக உருவெடுத்தவர், அடிக்கடி தொலைக்காட்சி மற்றும் கச்சேரிகளில் தோன்றினார். ஜஹூர் இங்கிலாந்து, ஜப்பான்,[4] அயர்லாந்து,[1] கனடா மற்றும் நார்வே ஆகிய நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

சூஃபி பாடல்கள், பக்தி,காதல் ப்பொன்ற கருப்பொருள்கள் கொண்ட கவிதையில் கவனம் செலுத்துகிறது. இது ரூமி போன்ற பாரசீகக் கவிஞர்களுடனும் பக்தி வழிபாட்டு முறை போன்ற பிற தெற்காசிய மரபுகளுடனும் அதிகம் பகிர்ந்து கொள்ளப்படுவதாகும்.

சயீன் ஜாஹூரின் கச்சேரிகளின் சில அமைப்பாளர்கள் சூஃபி மரபுகள் இஸ்லாத்தின் மென்மையான, பல கலாச்சார அம்சத்தை முன்னிலைப்படுத்துகின்றன என்று சிலர் வாதிடுகின்றனர். இது மற்ற கலாச்சார குழுக்களுக்கு எதிராக மசூதிகளைப் பயன்படுத்தி தீய எண்ணத்தைப் பரப்பும் முல்லாக்களின் தீவிரவாதத்தை எதிர்க்கிறது.[6]

2006 இல், ஜாஹூர் மட்டீலா பதிவுகள் மூலம் அவாஸே ("சவுண்ட்ஸ்") என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டார். 2007 ஆம் ஆண்டில், குதா கே லியே (2007) என்ற பாகிஸ்தான் திரைப்படத்தின் ஒலிப்பதிவைத் தயாரிக்க உதவினார்.

அவர் 2011 இல் வெஸ்ட் இஸ் வெஸ்ட் என்ற பிரித்தானிய நகைச்சுவை-நாடகத் திரைப்படத்திற்காக ஒரு பாடலைப் பாடினார். இது 1999 ஆம் ஆண்டு வெளியான ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். நார்வே, பெல்ஜியம், துபாய், மலேசியா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சயீன் ஜாஹூர் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் .[4]{

பாடல்கள்[தொகு]

 • டூம்பா (கோக் ஸ்டுடியோ சீசன் 2)
 • அல்லாஹ் ஹூ
 • நாச்னா பைண்டா ஹை
 • தேரே இஷ்க் நச்சாயா
 • ஏக் அலிஃப் (கோக் ஸ்டுடியோ சீசன் 2)
 • அல்லா ஹூ (கோக் ஸ்டுடியோ சீசன் 6)
 • ரப்பா ஹோ (கோக் ஸ்டுடியோ சீசன் 6)
 • அலிஃப் அல்லா நு (டக் யூ பதிவுகள்)
 • துனியா சலோ சலி டா மேலா (டக் யூ பதிவுகள்)
 • மாயே நி மேய்ன் கினு அகான் (டக்யூ ரெக்கார்ட்ஸ்)
 • லகி பினா/ சால் மேலே நூன் சல்லியே (கோக் ஸ்டுடியோ சீசன் 9)
 • மிர்சியா தலைப்புப் பாடல் - 2016
 • டில் டா கபாஹ்

திரைப்படங்கள்[தொகு]

அவரது இசை பின்வரும் படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது

 • வெஸ்ட் இஸ் வெஸ்ட் (2010) - டூம்பா மற்றும் ஏக் அலிஃப்
 • மிர்சியா – டீன் கவா [7]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

 • 2020 இல் பாகிஸ்தான் ஜனாதிபதியின் செயல்திறனுக்கானப் பெருமித விருது.[8]
 • பிபிசி மியூசிக் மூலம் 2006 இல் "ஆண்டின் சிறந்த குரல்" விருது.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Festival of World Cultures, Dublin 2009". Archived from the original on 13 January 2010. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022."Festival of World Cultures, Dublin 2009". Archived from the original on 13 January 2010. Retrieved 30 September 2022.
 2. 2.0 2.1 2.2 2.3 Profile of Saieen Zahoor on cokestudio.com.pk website Retrieved 30 September 2022
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 Ivan Chrysler (2006). "Winner BBC Music Awards 2006: Sain Zahoor (Pakistan)". BBC Music website. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.Ivan Chrysler (2006). "Winner BBC Music Awards 2006: Sain Zahoor (Pakistan)". BBC Music website. Retrieved 30 September 2022.
 4. 4.0 4.1 4.2 "Folk Music Performance: Pakistan Pavilion [PDF]" (PDF). Aichi Expo 2005 website. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
 5. Saieen Zahoor's performance at the 2009 Lahore Folk Music Festival Dawn (newspaper), Published 17 May 2009, Retrieved 30 September 2022
 6. Robin Denselow (2 December 2005). "Sufi's choice". https://www.theguardian.com/music/2005/dec/02/worldmusic.classicalmusicandopera. Robin Denselow (2 December 2005). "Sufi's choice". The Guardian (UK newspaper). Retrieved 30 September 2022.
 7. Baloch folk singer Akhtar Chanal Zahri to make his Bollywood debut in Mirzaya (along with Saieen Zahoor) Pakistan Today (newspaper), Published 9 September 2016,Retrieved 30 September 2022
 8. Conferment of Pakistan Civil Awards The News International (newspaper), Published 14 August 2019, Retrieved 30 September 2022

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Pride of Performance for Arts

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையீன்_சாஹூர்&oldid=3925070" இலிருந்து மீள்விக்கப்பட்டது