சையத் ஹசன் இமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையத் ஹசன் இமாம்
பிறப்புஆகத்து 31, 1871(1871-08-31)
நியோரா, பாட்னா
இறப்பு19 ஏப்ரல் 1933(1933-04-19) (அகவை 61)
பாட்னா
தேசியம் இந்தியா
பணிவழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர்

சையத் ஹசன் இமாம் (Syed Hasan Imam) (31 ஆகஸ்ட் 1871 முதல் 19 ஏப்ரல் 1933) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசில் தலைவராகப் பணியாற்றினார். செப்டம்பர் 1918 இல் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பத்ருதீன் தியாப்ஜி, ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி மற்றும் நவாப் சையத் முகமது பகதூர் ஆகியோருக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசின் நான்காவது முஸ்லீம் தலைவரானார்.[2]

இவரது மூதாதையர்களில் ஒருவர் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பிற்கு தனி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவரது தந்தை பாட்னா கல்லூரியில் வரலாறு பேராசிரியராக இருந்தார். இவரது முதல் மனைவி மூலம் இவருக்கு சையத் மேதி இமாம் என்ற மகன் பிறந்தார். சையத் மேதி இமாம் ஆரோ மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்களில் பயின்றார். இந்தியாவின் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார். கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளில் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார். ஹசன் இமாம் ஒரு இந்தோ-பிரெஞ்சுப் பெண் ஒருவரையும் மணந்து கொண்டார். இவர்களின் பேரன் புளு இமாம் மனித உரிமைப் பரப்புரையாளராகவும், வன உயிரின ஆர்வலராகவும் இருந்தார்.[2]

இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞர்களாகக் கருதப்பட்ட சித்தரஞ்சன் தாஸ், எச். டி. போஸ் ஆகியோர் சையத் ஹசன் இமாமை பிரித்தானிய இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞர் என்று பாராட்டியுள்ளனர். சர் சுல்தான் அகமது, சையத் அப்தால் அஜீஸ் உள்ளிட்ட இவரது சொந்த குடும்பத்தினரைத் தவிர மேலும் பல வழக்கறிஞர்களுடன் இவர் தொடர்பு கொண்டிருந்தார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் படித்த இவரது மருமகன் சையத் ஜாபர் இமாமும் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆனார்.[2][3]

இறப்பு[தொகு]

இவர் ஏப்ரல் 19, 1933 அன்று இறந்தார். பீகார், சார்க்கண்டு மாநிலத்தினிடையே பலாமூ மாவட்டத்தில் உள்ள ஜப்லாவில் உள்ள சோன் ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_ஹசன்_இமான்&oldid=3194741" இருந்து மீள்விக்கப்பட்டது