சையத் மீர் காசிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சையத் மீர் காசிம் (Syed Mir Qasim - 1921 - 12 டிசம்பர் 2004) 1971 முதல் 1975 வரை ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்தார்.

பிறப்பு[தொகு]

மீர் முகமது ஷா அவர்களுக்கு மகனாக தூரு எனும் கிராமத்தில் 16 ஜனவரி, 1919 ல் பிறந்தார்.

கல்வி[தொகு]

எம்.ஏ, எல்.எல்.பி பயின்றுள்ளார்

அரசியல்[தொகு]

சையத் மீர் காசிமின் அரசியல் வாழ்க்கை முதலில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது தொடங்கியது. அவர் மதச்சார்பற்ற தலைவராகவும், ஜனநாயகத்திற்கு ஆதரவான காஷ்மீர் அரசியல் இயக்கத்தில் பயணித்தார். மேலும் மஹாராஜா ஹரி சிங்கின் முடியாட்சிக்கு எதிராக அவர் வாதிட்டதன் விளைவாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பதவியில்[தொகு]

முதலமைச்சர்[தொகு]

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் சையத் மீர் காசிம் ஈடுபட்டார். அவர் பல்வேறு மாநில மற்றும் யூனியன் பதவிகளில் பணியாற்றினார். காஷ்மீரில் இந்திய தேசிய காங்கிரசை நிறுவிய பெருமைக்குரியவர். குலாம் முகமது சாதிக் மறைவுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பணியாற்றினார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபொழுது ஷேக் அப்துல்லாவுடன் இந்திய அரசு ஒரு உடன்பாட்டை எட்டிய பிறகு, ஷேக் அப்துல்லாவுக்குத் திரும்புவதற்கு வழி வகுக்கும் பொருட்டு 1975 இல் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இது பலராலாலும் பாராட்டப்பட்டது.

சுயசரிதை[தொகு]

செப்டம்பர் 1992 இல் வெளியிடப்பட்ட அவரது சுயசரிதையான மை லைஃப் அண்ட் டைம்ஸில், கொய்ட் காஷ்மீர் இயக்கத்தின் மூலம் சமஸ்தானத்தில் முடியாட்சி என்ற நுகத்தை தூக்கி எறிய காஷ்மீரிகளின் போராட்டம் பற்றிய சுவாரஸ்யமான வரலாற்று விவரங்களை காசிம் வழங்கியுள்ளார். அத்துடன் பாகிஸ்தானுடன் இணைவதைத் தேர்ந்தெடுப்பதை விட இந்தியாவுடன் இணைவதற்கான பிரச்சினையின் பின்னணி குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம்[தொகு]

மீர் காசிமிற்கு மரியம் பேகம் என்ற மனைவியும், டாக்டர் சஜ்ஜத் ஹுசைன், மீர் ஜாவேத் என்ற இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இறப்பு[தொகு]

காசிம் தனது 83வது வயதில் 12 டிசம்பர் 2004 அன்று புது தில்லியில் இந்தியா கேட் அருகே ஆம்புலன்ஸில் இறந்தார். அவரது விருப்பத்திற்கு இணங்க, அவர் பிறந்த கிராமமான காஷ்மீரில் உள்ள தூருவில் அடக்கம் செய்யப்பட்டார். [2]

பத்ம பூஷன்[தொகு]

2005 ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களால் இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் அவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. http://www.dashboard-padmaawards.gov.in/?Name=Syed%20Mir%20Qasim

மேற்கோள்கள்[தொகு]

  1. https://rajyasabha.nic.in/rsnew/publication_electronic/Member_Biographical_Book.pdf
  2. https://www.tribuneindia.com/2004/20041214/j&k.htm#5
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_மீர்_காசிம்&oldid=3480719" இருந்து மீள்விக்கப்பட்டது