உள்ளடக்கத்துக்குச் செல்

சையத் உசைன் சாகிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையத் உசைன் சாகிர்
பிறப்புஇந்தியா
பணிவேதியியலர்
அரசியல்வாதி
விருதுகள்பத்ம பூசண்

சையத் உசைன் சாகிர் (Syed Husain Zaheer) ஒர் இந்திய [1] வேதியியலாளர் ஆவார். நாட்டின் பெரிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்| அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின்]] பொது இயக்குநராகவும் ஒர் அரசியல்வாதியாகவும் பணிபுரிந்தார். பொது இயக்குநராக பதவியேற்பதற்கு முன்னர் அந்நிறுவனத்தின் ஒரு பிரிவாக இயங்கிக் கொண்டிருந்த இந்திய வேதித்தொழில்நுட்ப நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தார். இப்பணிக்காலத்தில் அங்கு உயிர்வேதியியல் துறை [2] என்ற ஒரு புதிய பிரிவை ஏற்படுத்தினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கான்பூர், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆளுநர் குழுவின் தலைமைப் பொறுப்பு வகித்தார் [3]. இவருடைய அறிவியல் தொண்டை பாராட்டும் விதமாக, நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருதை 1972 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About the Foundation". Zaheer Foundation. 2016. Archived from the original on ஏப்ரல் 8, 2016. Retrieved April 12, 2016.
  2. D. P. Burma (2011). From Physiology and Chemistry to Biochemistry. Pearson Education India. pp. 152–. ISBN 978-81-317-3220-5.
  3. Prof. S P Mehrotra (10 November 2015). The Fourth IIT: History of IIT Kanpur. Penguin Books Limited. pp. 218–. ISBN 978-93-5214-192-0.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. Retrieved January 3, 2016.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_உசைன்_சாகிர்&oldid=4190620" இலிருந்து மீள்விக்கப்பட்டது