சையத் ஆசிப் இப்ராகிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சையத் ஆசிப் இப்ராகிம் ஐ.பி.எஸ்.
இந்திய உளவுத்துறையின் இயக்குனர்
பதவியில்
1 ஜனவரி 2013 – 31 டிசம்பர் 2014
பிரதமர் மன்மோகன் சிங்
நரேந்திர மோதி
முன்னவர் நேஹ்சல் சந்து
பின்வந்தவர் தினேஷ்வர் சர்மா
தனிநபர் தகவல்
பிறப்பு 28 செப்டம்பர் 1953 (1953-09-28) (அகவை 68)
மத்திய பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியன்
பணி உளவுத்துறை அதிகாரி / இந்தியக் காவல் பணி

சையத் ஆசிப் இப்ராகிம் (பிறப்பு: 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 28) ஓர் இந்திய இராஜதந்திரி மற்றும் இந்தியாவின் முக்கிய உள்நாட்டு உளவு அமைப்பான இந்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனர் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2014 டிசம்பர் 31 வரை இந்திய உளவுத்துறையின் இயக்குநராக இருந்தார்.. [1][2] இந்த பதவியை வகித்த இந்தியாவின் முதல் முஸ்லிம் இவர்.[3] இவர் இந்தியக் காவல் பணி மத்தியப் பிரதேச குழு (ஐ.பி.எஸ்) அதிகாரியாக உள்ளார். இவர் 1977 ஆண்டு குழுவை சேர்ந்தவர்.

மேற்கு ஆசிய நாடுகளின் அரசாங்கங்களுடனும், குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானுடன் "பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்ப்பது" குறித்த சாசனத்தோடு இந்தியப் பிரதமரின் சிறப்பு தூதராக ஜூன் 2015 இல் நியமிக்கப்பட்டார். [4]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]