சையத் அசன் அசுகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சையத் அசன் அசுகாரி (Syed Hasan Askari) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வரலாற்றாசிரியர் ஆவார். [1] [2] [3] 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதியன்று இவர் இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டம் குய்ச்வா கிராமத்தில் பிறந்தார். இவரது இலக்கியப் பணி இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது இடைக்கால சூபித்துவம், பீகாரின் பிராந்திய வரலாறு மற்றும் இடைக்கால இந்தியாவின் கலாச்சார வரலாற்று அம்சங்களில் இவருடைய இலக்கியம் கவனம் செலுத்தியது. 250 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவற்றில் ஆய்வுக் கட்டுரைகள், முன்னுரைகள், புத்தக மதிப்புரைகளை மொழிபெயர்ப்புகள் முதலியவையும் அடங்கும். இவை பல இதழ்கள், புத்தகங்கள் மற்றும் செயல்முறை ஆணைகளில் வெளியிடப்பட்டுள்ளன. [4] [5] [6] [7] [8]

அங்கீகாரம்[தொகு]

அசுகாரிக்கு 1974 ஆம் ஆண்டில் காலிப் விருதை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது வழங்கினார். [9]

கியானி ஜெயில் சிங் 1985 ஆம் ஆண்டு அசுகாரிக்கு பத்மசிறீ விருதை வழங்கினார்.[10]

கல்வி கௌரவங்கள்[தொகு]

1967 ஆம் ஆண்டு பீகாரில் உள்ள மகத் பல்கலைக்கழகம், அசுகாரிக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Professor Syed Hasan Askari | Historian". prof-s-h-askari. பார்க்கப்பட்ட நாள் 2019-06-13.
  2. "Eminent Personalities". www.kujhwaonline.in. Archived from the original on 2019-12-10. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  3. "State forgets first historian". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  4. "State forgets first historian". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  5. Sufism: Hermeneutics and doctrines. https://books.google.com/books?id=NpIQAQAAIAAJ&dq=Maktub+&+Malfuz+Literature+As+a+Source+of+Socio-Political+History&focus=searchwithinvolume&q=askari. 
  6. Askari. "An Introduction to Twenty Persian Texts on Indo-Persian Music". Humanities Commons.
  7. "Select Bibliography: Sufi Literature in South Asia". Sahapedia. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  8. "The Milli Gazette". www.milligazette.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  9. "Ghalib Institute غالب انسٹی ٹیوٹ: Ghalib Award". Ghalib Institute غالب انسٹی ٹیوٹ. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  10. "Bharat Ratna, Padmavibhushan, Padmashree and other Award winners". www.patnauniversity.ac.in. Archived from the original on 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  11. Iran: Journal of the British Institute of Persian Studies. https://books.google.com/books?id=psJtAAAAMAAJ&dq=Maktub+&+Malfuz+Literature+As+a+Source+of+Socio-Political+History&focus=searchwithinvolume&q=askari. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_அசன்_அசுகாரி&oldid=3687291" இலிருந்து மீள்விக்கப்பட்டது