சையத் அகமது பாஷா குவாத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையத் அகமது பாஷா குவாத்ரி
தெலங்காணா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2018
முன்னவர் மும்தாஜ் அகமது கான்
தொகுதி யாகுத்புரா
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2004 - 2018
முன்னவர் அசதுத்தீன் ஒவைசி
தொகுதி சார்மினார்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
பெற்றோர் சையத் முர்தாசா பாஷா குவாத்ரி[1]
பணி அரசியல்வாதி

சையத் அகமது பாஷா குவாத்ரி (Ahmed Pasha Quadri) இவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் யாகுத்புரா சட்டமன்ற உறுப்பினர். [2] இவர் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியை சேர்ந்தவர். இவர் மறைந்த சுல்தான் சலாவுதீன் ஒவைசியின் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அகமது பாஷா குவாத்ரி 2004 ஆம் ஆண்டு சார்மினாரில் இருந்து சட்டமன்றத்திற்கு சென்றார். இதை தொடர்ந்து 2009, 2014 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றியை தக்க வைத்துக் கொண்டார். தற்போது குவாத்ரி அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் பொதுச் செயலாளராக உள்ளார்.

சர்ச்சை[தொகு]

மகாத்மா காந்திக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சை பேசியதக 2013இல் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. [3] "நிசாம்கள் ஐதராபாத்தில் மாநில சட்டசபை கட்டிடத்தை கட்டினர். ஆனால் என்ன நடந்தது என்று பாருங்கள். அவர்கள் அங்கு மகாத்மா காந்தியின் சிலையை நிறுவியுள்ளனர். யார் அதை கட்டினார்கள், யார் அங்கு நிறுவப்பட்டிருக்கிறார்கள்" என்று இவர் கூறினார். "நாங்கள் அனைத்து குறிப்பிடத்தக்க கட்டமைப்புகளையும் கட்டியுள்ளோம். இந்தியாவில், நீங்கள் என்ன செய்தீர்கள்?, நாங்கள் செங்கோட்டை, தாஜ்மஹால், குதுப் மினார், மக்கா மஸ்ஜித் மற்றும் சார்மினார் ஆகியவற்றைக் கட்டினோம். இந்துஸ்தானில் நீங்கள் என்ன கட்டினீர்கள்?” என்றும் இவர் கூறினார்.[4]

குறிப்புகள்[தொகு]