சையது புத்ரா சாலை
| சையது புத்ரா சாலை | |
|---|---|
| Jalan Syed Putra Lornie Drive | |
| வழித்தடத் தகவல்கள் | |
| பயன்பாட்டு காலம்: | 1905 தொடக்கம் – |
| வரலாறு: | கட்டுமான நிறைவு: 1908 |
| முக்கிய சந்திப்புகள் | |
| வடக்கு முடிவு: | கோலாலம்பூர் கினபாலு வட்டச்சுற்று வழி |
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1 துன் சம்பந்தன் சாலை | |
| தெற்கு முடிவு: | செபுத்தே |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | பிரிக்பீல்ட்ஸ் பெட்டாலிங் ஜெயா சா ஆலாம் கிள்ளான் |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
சையது புத்ரா சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 2 (ஆங்கிலம்; Federal Route 2 அல்லது Lornie Drive); மலாய்: Jalan Syed Putra) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தின் முக்கிய நெடுஞ்சாலை ஆகும். இந்தச் சாலை லோர்னி டிரைவ் என்று முன்பு அழைக்கப்பட்டது.
இந்தச் சாலைக்கு மறைந்த பெர்லிஸ் புத்ரா துவாங்கு சையத் புத்ரா அவர்களின் பெயரிடப்பட்டது, இவர் 1960-ஆம் ஆண்டில் இருந்து 1965-ஆம் ஆண்டு வரை மலேசியாவின் 3-ஆவது பேரரசராகவும்; 1945-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரையில் பெர்லிஸ் மாநிலத்தின் அரசராகவும் பதவியை வகித்தவர் ஆவார். பெர்லிஸ் மாநிலத்தின் அரசர்களை இராஜா (Raja) என்று அழைக்கிறார்கள்.[1]
பெர்லிஸ் புத்ரா மலேசிய அரசராகப் பதவி வகித்த போது கோலாலம்பூர் இசுதானா நெகாரா (Istana Negara) எனும் அரச அரண்மனையில் வசித்து வந்தார். அந்த அரண்மனை அமைந்திருந்த சாலைக்கு அவரின் பெயரே வைக்கப்பட்டது.[2]
வரலாறு
[தொகு]பிரித்தானிய நிர்வாகத்தின் போது தற்போதைய சையத் புத்ரா சாலை; லோர்னி டிரைவ் என்று அழைக்கப்பட்டது. 1920-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூரில் வசிக்கும் பிரித்தானிய முதல்வர்களில் (British Resident) ஒருவரான ஜேம்ஸ் லோர்னியின் (James Lornie) நினைவாக லோர்னி டிரைவ் என்று பெயரிடப்பட்டது.
அப்போதைய பிரித்தானிய ரெசிடென்ட் பதவி என்பது இன்றைய மந்திரி பெசார் பதவிக்கு இணையானதாகும்.
பொது
[தொகு]சையது புத்ரா சாலையின் கிழக்கு முனையில் விசுமா துன் சம்பந்தன் (Wisma Tun Sambanthan) கட்டிடம் உள்ளது.[3] இது அப்பகுதியில் உள்ள மற்ற கட்டமைப்புகளை விட உயரமாக உள்ளது. கட்டிடத்தைச் சுற்றி சிறிய வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன.[4]
சையது புத்ரா சாலை தற்போது துன் சம்பந்தன் சாலையுடன் வேறு சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
கிள்ளான் ஆறு, சையது புத்ரா சாலை மருங்கில் ஓடுகிறது. நவீன வளர்ச்சிக்கு ஏற்றவாறு கிள்ளான் ஆற்றோரத்தில் அழகிய நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காட்சியகம்
[தொகு]சையது புத்ரா சாலை காட்சிப் படங்கள்
விளக்கம்
[தொகு]- மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)
- மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway; மலாய்: Laluan Malaysia)
- மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia)
மேலும் காண்க
[தொகு]- கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1
- கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2
- வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு
- சுங்கை பீசி விரைவுச்சாலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Official Portal of The Parliament of Malaysia - List of His Majesty The Yang Di-Pertuan Agong". www.parlimen.gov.my (in ஆங்கிலம்). Retrieved 20 February 2025.
- ↑ "In August 1957, after choosing the title of Yang di-Pertuan Agong the Conference of Rulers convened to vote for the first holder of the throne". Istana Negara, Kuala Lumpur. Retrieved 21 February 2025.
- ↑ "Wisma Tun Sambanthan - The Skyscraper Center". www.skyscrapercenter.com. Retrieved 2 October 2025.
- ↑ "Jalan Syed Putra, Kuala Lumpur". Penang Travel Tips (in ஆங்கிலம்). Retrieved 2 October 2025.
