சையதா பில்கிராமி இமாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையதா பில்கிராமி இமாம்
பிறப்பு9 நவம்பர் 1941 (1941-11-09) (அகவை 82)
,ஐதராபாத்து, பிரித்தானிய இந்தியா
தொழில்எழுத்தாளர், விளம்பர வல்லுநர், 6 ஆண்டுகளாக இந்திய அரசின் சிறுபான்மையினருக்கான தேசிய மற்றும் ஹஜ் ஆணையங்களில் உறுப்பினர்
தேசியம்இந்தியர்

சையதா பில்கிராமி இமாம் (பிறப்பு 9 நவம்பர் 1941) [1] இந்தியாவின் புது தில்லியை தளமாகக் கொண்ட ஒரு எழுத்தாளரும் பொது சேவை, சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளில் சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டுவருபவரும் பொதுநல ஆர்வலருமாவார். மேலும் இந்தியாவின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் (NCM) உறுப்பினராக இருந்துள்ளார், ஹைதராபாத் கலாச்சாரத்தை விவரிக்கும் தி அன்டோல்ட் சார்மினார் என்ற புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார்.[2]

இந்தியாவின் மிகப் பெரிய விளம்பர நிறுவனமான ஜே. வால்டர் தாம்ஸ்பன் (JWT) இல் அதன் துணைக் கண்டத்தின் நிர்வாக படைப்பு நிர்வாகியாகப் பணிபுரிந்துள்ள இவர், அந்நிறுவனத்தின் துணை விளம்பர நிறுவனமான ஒப்பந்தம் இந்தியாவைத்(contract - india)  உருவாக்கவும் உதவியுள்ளார். மார்ச் 2013 ஆம் ஆண்டில் இந்திய தேசிய ஹஜ் கமிட்டியின் உறுப்பினராக வெளியுறவு அமைச்சகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு எழுத்தாளராக சையதா, பென்குயின், மேக்மில்லன் மற்றும் ரோலி புக்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். ஹைதராபாத் கலாச்சாரத்தை விவரிக்கும் 'தி அன்டோல்ட் சார்மினார்' மற்றும்  'ரைட்டிங்ஸ் ஆன் ஹைதராபாத்' ஆகியவை பென்குயின் பதிப்பகத்தின் வழியாகவும் . 'தி மேக்கிங் ஆஃப் அட்வர்டைசிங்' (ISBN 9780333939161) புத்தகம் மேக்மில்லன் பதிப்பகத்தின் வழியாகவும் , மோடிகேர் அறக்கட்டளைக்காக எழுதப்பட்ட 'தி பாசிட்டிவ் சைட்' (எய்ட்ஸ் காரணத்திற்கான உதவியில்) ISBN 9781456741860 புத்தகம் ரோலி புக்ஸ் பதிப்பகத்தின் வழியாகவும் வெளியிட்டுள்ளார்.

மரியாதைகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

சையதா, தனது இலக்கியப் பங்களிப்புகள் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்காக பல்வேறு விருதுகளையும் மரியாதைகளையும் பெற்றுள்ளார். கான் திரைப்பட விழா மற்றும் நியூயார்க் திரைப்பட விழா போன்ற திரைப்பட விழாக்களில்அவரது சில படைப்புகள் திரையிடப்பட்டுள்ளது.[1] ஒரு விளம்பர நிபுணராக, புனேயில் உள்ள மாற்ற மேலாண்மை நிறுவனம் வழங்கிய "இந்திரா சிறந்த சாதனையாளர் விருது" உட்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Syeda Bilgrami Imam – Curriculum Vitae". National Commission for Minorities. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Ramamoorthy, Mangala (24 June 2008). "Charminar anew". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110114212706/http://www.hindu.com/mp/2008/07/24/stories/2008072450290300.htm. பார்த்த நாள்: 2 March 2013. 
  3. "Syeda Bilgrami Imam". National Commission for Minorities. Archived from the original on 4 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையதா_பில்கிராமி_இமாம்&oldid=3741910" இலிருந்து மீள்விக்கப்பட்டது