உள்ளடக்கத்துக்குச் செல்

சைமன் ஜான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைமன் ஜான்சன்
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர்
பதவியில்
மார்ச்சு 2007 – ஆகத்து 31, 2008
குடியரசுத் தலைவர்ரோட்ரிகோ ராடோ
டொமினிக் ஸ்ட்ராஸ்-கான்
முன்னையவர்ரகுராம் கோவிந்தராஜன்
பின்னவர்ஒலிவியர் பிளான்சார்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 16, 1963 (1963-01-16) (அகவை 61)
கல்விஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (இளங்கலை)
மான்செஸ்டர் பல்கலைக்கழகம் (முதுகலை)
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (முனைவர்)
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2024)
சைமன் ஜான்சன்
துறைஅரசியல் பொருளாதாரம்
வளர்ச்சி பொருளாதாரம்
ஆய்வுக் கட்டுரைகள்

சைமன் எச். ஜான்சன் (Simon Johnson)(பிறப்பு சனவரி 16,1963) ஒரு இங்கிலாந்து-அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஆவார்.[1] இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் சுலோன் மேலாண்மை பள்ளியில் தொழில்முனைவோர் பேராசிரியராகவும் ரொனால்ட் ஏ. கர்ட்சு மற்றும் பன்னாட்டுப் பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் நிறுவனத்தில் மூத்த சக ஊழியராகவும் உள்ளார்.[2][3] டியூக் பல்கலைக்கழகத்தின் புக்வா வணிகப் பள்ளி பொருளாதாரப் பேராசிரியர் உட்படப் பல்வேறு கல்வி மற்றும் கொள்கை தொடர்பான பதவிகளை வகித்துள்ளார்.[4] மார்ச் 2007 முதல் ஆகத்து 2008 இறுதி வரை, இவர் பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநராக இருந்தார்.[5]

2024ஆம் ஆண்டில், ஜான்சன், தாரோன் அசெமோகுலு மற்றும் ஜேம்சு ஏ. இராபின்சனுடன் நாடுகளுக்கிடையேயான செழுமைக்கான ஒப்பீட்டு ஆய்வுகளுக்காக பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசு வழங்கப்பட்டது.[6]

கல்வி

[தொகு]

ஜான்சனின் தனது முதல் பட்டத்தினை (இளங்கலைப் பட்டம்) ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பெற்றார். இதைத் தொடர்ந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தினையும் இறுதியாக 1989ஆம் ஆண்டில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்தினையும் பெற்றார். இவரது ஆய்வு பணவீக்கம், இடைநிலை மற்றும் பொருளாதாரச் செயல்பாடு என்ற பொருண்மையின் கீழ் இருந்தது.[7][8]

தொழில் வாழ்க்கை

[தொகு]

நவம்பர் 2020-இல், அமெரிக்கக் கருவூலத் துறை மற்றும் பெடரல் ரிசர்வ் தொடர்பான இடைக்கால முயற்சிகளை ஆதரிப்பதற்காக ஜோ பிடன் குடியரசு மாற்றம் அமைப்பில் மறு ஆய்வுக் குழுவில் ஜான்சன் ஒரு தன்னார்வ உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[9]

ஒருங்கிணைப்பு பணிகள்

[தொகு]

தேசியப் பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகவும், பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராகவும், சமூக மற்றும் பொருளாதார ஆராய்ச்சி மையத்தின் பன்னாட்டுப் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[10] இவர் காங்கிரசின் நிதிநிலை அலுவலகத்தின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[5] 2006 முதல் 2007 வரை இவர் பன்னாட்டு பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் நிறுவனத்தில் வருகையாளராக இருந்தார். இங்கு இவர் தற்போது மூத்த பொருளாதார உறுப்பினராக உள்ளார்.[5] இவர் நான்கு கல்வி பொருளாதார இதழ்களின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[5] 2007 முதல் திட்ட ஆட்சிக்குழுவில் பங்களித்து வருகிறார்.

ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள்

[தொகு]

சைமன் ஜான்சன் 2010ஆம் ஆண்டு 13 வங்கியாளர்கள்: வோல் ஸ்ட்ரீட் கையகப்படுத்தல் மற்றும் அடுத்த நிதி மெல்டவுன் (13 Bankers: The Wall Street Takeover and the Next Financial Meltdown)(பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0307379054) ஜேம்சு குவாக் உடன் இணைந்து எழுதினார். இவர் பொருளாதார வலைப்பதிவா-அடிப்படை சூழ்நிலை (The Baseline Scenario) தொடர்ந்து ஜேம்சு குவாக்குடன் பங்களித்துள்ளார்.[11] பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0307379054 சைமன் ஜான்சன், வெள்ளை மாளிகை எரிதல்: எங்கள் தேசியக் கடன் மற்றும் அது ஏன் உங்களுக்கு முக்கியமானது (White House Burning: Our National Debt and Why It Matters to You)(2013); துள்ளல் தொடர்கிறது அமெரிக்கா: எப்படி திருப்புமுனை அறிவியல் பொருளாதார வளர்ச்சியையும் அமெரிக்கக் கனவையும் புதுப்பிக்க முடியும் (Jump-Starting America: How Breakthrough Science Can Revive Economic Growth and the American Dream) 2019-இல் ஜொனாதன் குருபெருடன் இணைந்து எழுதினார். 2023-இல் தொழில்நுட்பம் மற்றும் செழிப்பு மீதான எங்கள் ஆயிரம் ஆண்டு போராட்டம் (Power and Progress: Our Thousand-Year Struggle Over Technology and Prosperity) எனும் நூலை தாரோன் அசெமோக்லுடன் இணைந்து எழுதினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. U.S. Public Records Index Vol 1 (Provo, UT: Ancestry.com Operations, Inc.), 2010.
  2. "Simon Johnson On Bank Bailout Plan". NPR.org.
  3. "Simon Johnson". PIIE. March 2, 2016.
  4. LA Times, 29 November 1991, "Muscovites: Want Shares In Boeing For 44 ½?"
  5. 5.0 5.1 5.2 5.3 "Simon Johnson's biography at MIT".
  6. "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2024". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-14.
  7. "Simon Johnson -- Biographical Information". www.imf.org. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
  8. "Inflation, intermediation and economic activity". MIT library.
  9. "Agency Review Teams". President-Elect Joe Biden. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  10. "List of Center for Economic Policy Research Fellows".
  11. "About". September 25, 2008.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_ஜான்சன்&oldid=4119357" இலிருந்து மீள்விக்கப்பட்டது