உள்ளடக்கத்துக்குச் செல்

சைப்ரசின் புவியியல்

ஆள்கூறுகள்: 35°N 33°E / 35°N 33°E / 35; 33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைப்ரசு
சைப்ரசு- செயற்கைக்கோள்படம், 2013
புவியியல்
அமைவிடம்Mediterranean Sea
ஆள்கூறுகள்
35°N 33°E / 35°N 33°E / 35; 33
Largest cityNicosia
பரப்பளவு9,251 km2 (3,572 sq mi)
கரையோரம்648 km (402.6 mi)
உயர்ந்த ஏற்றம்1,952 m (6,404 ft)
உயர்ந்த புள்ளிMount Olympus
நிர்வாகம்
தலைநகரும் பெரிய நகரமும்Nicosia
Area covered8,997 km2 (3,474 sq mi)
Turkish Republic of Northern Cyprus
(de facto northern administration)
(Self-styled and only recognised by Turkey)
தலைநகரும் பெரிய நகரமும்North Nicosia
பரப்பளவு3,355 km2 (1,295 sq mi)
தலைநகரும் பெரிய settlementEpiskopi Cantonment
Area covered254 km2 (98 sq mi)
மக்கள்
மக்கள்தொகை788,457 (2007)
அடர்த்தி85 /km2 (220 /sq mi)
இனக்குழுக்கள்Greek Cypriots; Turkish Cypriots; Armenian Cypriots; Maronite Cypriots

சைப்பிரசு மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இத்தாலியின் சிசிலி மற்றும் சார்தீனியாத் தீவுகளை அடுத்து மத்திய தரைக்கடல் பகுதியின் மூன்றாவது மிகப்பெரிய தீவாகும். நிலப்பரப்பின் அடிப்படையில் உலகின் 80 ஆவது பெரிய தீவாகும். ஆசியா அல்லது யுரேசிய முக்கிய நிலப்பகுதியில் பகுதியான ஆனடோலிய தீபகற்பத்தின் தெற்கு அனத்தோலியா பகுதியில் துருக்கியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. எனவே மேற்காசியாவும் [1] அல்லது மத்திய கிழக்காசியாவும் உள்ளடங்கியிருக்கலாம்.[2] சைப்ரசு தெற்கு ஐரோப்பாவின் மிக அண்மையிலும்,வடக்கு ஆப்பிரிக்காவிலும் அமைந்துள்ளது. கிரேக்கம் மற்றும் அனட்டோலியர்களிடம் நீண்டகாலம் மாற்றி மாற்றி கையகப்பட்டிருந்தது. மேலும் லெவாந்தையர்கள், பைசாந்தியர்கள், துருக்கி, மேற்கு ஐரோப்பா ஆகியவற்றினாலும் செல்வாக்கு செலுத்தப்பட்டிருந்தது.

சைப்பிரசு தீவின் பெரும்பாலான அதன் பரப்பில் திரூடாஸ் மலைகளும் கைரெனிய மலைகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவ்விரண்டு மலைத்தொடர்களுக்கிடையில் மத்திய சமவெளியும் மிசோரியாவும் உள்ளன, திரூடாஸ் மலையானது சைப்பிரசு தீவின் தெற்கு மற்றும் மேற்குப்பகுதி முழுமையும் பரவியுள்ளது. அதாவது தீவின் பாதிப்பகுதியை இம்மலையே ஆக்கிரமித்துள்ளது. குறுகலான கைரெனிய மலையானது வடக்கு கடற்கரைவரை பரவியுள்ளது. கைனெரீய மலையானது திரூடாஸ் மலையைப் போல உயரமானதில்லை. மேலும் இம்மலை குறைந்த பரப்பினையே கொண்டது. இவ்விரு மலைகளும் தாரசு மலைகளுக்கு இணையாக துருக்கிய மையநிலப்பகுதி வரை பரவியுள்ளது, மேலும் வடக்கு சைப்பிரசுவிலிருந்து பார்த்தால் தெரியும்படி அமைந்துள்ளன.கடற்கரை தாழ்நிலங்கள் தீவைச் சுற்றிலும் மாறுபட்ட அகலங்களில் பரவியுள்ளன.

புவியியல் அடிப்படையில் சைப்பிரசு தீவானது நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. தீவின் 60 விழுக்காடு நிலப்பரப்பைக் கொண்டுள்ள சைப்பிரசு குடியரசு மட்டுமே தேசிய அளவில் அங்கீகரிப்பட்டுள்ள அரசாங்கமாக விளங்குகிறது. இது 2004 மே முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உள்ளது. வடக்கு சைப்பிரசின் துருக்கியக் குடியரசு அரசாங்க ரீதியாக துருக்கியால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும். இது நிலப்பரப்பில் 36 விழுக்காடு பரவியுள்ளது அதாவது தீவின் மூன்றிலொரு நிலப்பகுதியாகும். ஐக்கிய நாடுகள் சபை இரண்டு பகுதிகளுக்கிடையே நிலப்பரப்பான பசுமைக்கோட்டினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இது தீவின் 4 விழுக்காடு பகுதியாகும். அடுத்ததாக அக்ரோத்திரி, டெகேலியா ஆகிய இரண்டு பகுதிகளும் சைப்ரஸ் தீவில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குற்பட்ட இரணுவத்தளப் பகுதிகளாகும்(Sovereign Base Areas). சைப்ரசுக்கு ஐக்கிய இராச்சியம் பொதுநலவாய குடியரசாக விடுதலை கொடுத்த பொழுது, இவ்விரண்டு தளங்களையும் மத்தியதரைக் கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக தன்னகத்தே இருத்திக்கொண்டது. இவை தீவில் தெற்கு கடற்கரைப்பகுதியை ஒட்டி 254 கி. மீ -இல் அமைந்துள்ளன. இவை தீவின் 2.8 விழுக்காடு பரப்பளவானதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://millenniumindicators.un.org/unsd/methods/m49/m49regin.htm#asia UN
  2. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cy.html பரணிடப்பட்டது 2018-12-26 at the வந்தவழி இயந்திரம் CIA World Factbook
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைப்ரசின்_புவியியல்&oldid=3905111" இலிருந்து மீள்விக்கப்பட்டது