சைபீரிய கத்தூரி மான்
| சைபீரிய கத்தூரி மான் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | ஆர்ட்டியோடேக்டைலா
|
| குடும்பம்: | மோசிடே
|
| பேரினம்: | மோசசு
|
| இனம்: | மோ. மோசிபெரசு
|
| இருசொற் பெயரீடு | |
| மோசசசு மோசிபெரசு லின்னேயஸ், 1758 | |
| சைபீரிய கத்தூரி மானின் பரவல் | |
சைபீரிய கத்தூரி மான் (Siberian musk deer-Moschus moschiferus) என்பது வடகிழக்கு ஆசியா மலைக் காடுகளில் காணப்படும் ஒரு கத்தூரி மானாகும். இது தெற்கு சைபீரியா தைகாவில் மிகவும் பொதுவானது. ஆனால் மங்கோலியா, உள் மங்கோலியா, மஞ்சூரியா, கொரிய தீபகற்பத்தின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
இவற்றின் சிறிய வடிவம் பாறை நிலப்பரப்பில் உள்ளச் சிறிய தடுப்புகளில் மறைந்து வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பி விடுகிறது. மேலும் வேட்டைவிலங்குகளைவிட வேகமாக ஓடக்கூடியது. நீண்ட பல்லினைக் கொண்டிருந்தாலும் இவைத் தாவர உண்ணிகளாகும். இவற்றின் முக்கிய ஊட்டச்சத்துக்கள் லைக்கன்களாகும்.[3]
இதன் கத்தூரி சுரப்பிக்காக தீவிரமாக வேட்டையாடுவதால் இதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அடுத்த மூன்று தலைமுறைகளில் மக்கள் தொகை 30% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு நாட்டிலும் மேற்கோள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாக கத்தூரி மான்களின் எண்ணிக்கையை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடருகுகின்றன.[1]
வகைப்பாட்டியல்
[தொகு]- சைபீரியா, வடக்கு மங்கோலியா, உருசியா, வட சீனா, கொரியா-மோ. மோ. மோசிபெரசு'[1]'
- தூரகிழக்கு உருசியா -மோ. மோ. துரோவி
- வெர்கோயான்சுக் தடைப்பாறை-மோ. மோ. ஆர்க்டிகசு
- சக்கலின்-மோ. மோ. சாக்கலினென்சிசு
- கொரியா-மோ. மோ. பர்விப்சு
பரிணாமம்
[தொகு]மேல் மற்றும் நடு பிளிச்டோசீன் காலத்தில் இந்த கத்தூரி மான் தோன்றியதாகவும், இவை சீனா தூர கிழக்கு உருசியப் பகுதியிலிருந்து தோன்றியிருக்கலாம் என அறியப்படுகிறது. குவாட்டர்னரி காலத்தில் கண்டத்தில் இருந்து பிரிவதற்கு முன்பு சகலின் தீவிலும் கத்தூரி மான் வசித்து வந்தது.[4]
முதிர்ச்சியும் இனச்சேர்க்கையும்
[தொகு]சைபீரிய கத்தூரி மான் முதிர்ச்சியடைய சுமார் ஒரு வருடம் ஆகும். சராசரியாக ஒரு மான் 10 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது.
இனப்பெருக்க காலத்தில், ஆண் மான் கொம்புகளுக்கு பதிலாக தந்தங்கள் வளர்கின்றது.[3] இந்த தந்தங்கள் மற்ற ஆண்களுடன் போட்டியிடவும், பெண்களை ஈர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன. நீளமான மற்றும் வலுவான தந்தங்கள் மிகவும் அச்சுறுத்தும் நிலைப்பாட்டை உருவாக்கி, அந்த ஆணின் சந்ததியினர் ஆரோக்கியமாக மாறக்கூடும் என்பதால் பெண்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும்.
ஆண் மற்றும் பெண் மான்கள் இனப்பெருக்கம் செய்தவுடன், பெண்கள் 6 மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும். பெண்கள் பொதுவாக மே முதல் சூன் மாதங்களுக்கு இடையில் 1 முதல் 3 குட்டிகளைப் பெற்றெடுக்கலாம்.[5]
நடத்தை
[தொகு]கத்தூரி, மான்களின் பிரதேசத்தைக் குறிக்கும். அத்துமீறி நுழையும் மான்களை எல்லையைத் தாண்ட வேண்டாம் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறது. தங்கள் பிரதேசங்களைக் குறிக்கும் போது, கத்தூரி மான் விழுந்த கிளைகள், மர தடி, தாவர தண்டுகளை சேகரித்து அவற்றை ஒரு வட்டத்தில் வைக்கிறது. வட்டத்தைச் சுற்றி பல்வேறு கிளைகளை வைக்கும்போது, மான் பெரும்பாலும் ஒரு வாசனை பரிசோதனையைச் செய்து, அதன் உடலின் பின்புறத்தை குறிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி திருப்பும். சைபீரிய கத்தூரி மான் தன் பிராந்தியத்தை குறிக்கும் மற்றொரு வழி, ஏற்கனவே குறிக்கப்பட்ட பிரதேசங்கள் அல்லது உரிமை கோரப்படாத பிரதேசங்களில் மலம் கழிப்பதாகும்.[6]
வாழ்விடமும் உணவுப் பழக்கமும்
[தொகு]பெரும்பாலான சைபீரிய கத்தூரி மான்கள் பொதுவாக இரவாடுதல் வகையினைச் சேர்ந்தது. மலைப்பாங்கான டைகாவில் வசிக்கின்றன. மேலும் உணவுகள் ஏராளமாக இருக்கும் புதர் மூடப்பட்ட சரிவுகளில் காணப்படுகின்றன. சைபீரியப் புலி, அமுர் சிறுத்தை, பனிச் சிறுத்தை, ஐரோவாசியச் சிவிங்கிப் பூனை, ஓநாய், சிவப்பு நரி, பழுப்பு கரடி, ஆசிய கருப்பு கரடி, வால்வரின், மஞ்சள்-தொண்டை மார்டன் போன்ற பல வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து கத்தூரி மான் மறைவதற்கு பாறையிடைப் பிளவுகளையும் பாறைகளையும் பயன்படுத்துகிறது.
கத்தூரி மான்கள் எளிதில் செரிமானம் செய்யக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை விரும்புகின்றன. இவை புரதம் நிறைந்தவை மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளன. குளிர்காலத்தில், கத்தூரி மான் புரதங்கள் குறைவாக இருக்கும் ஆனால் அதிக ஆற்றல் கொண்ட மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைக்கூட குளிர்காலத்தில் உண்டு உயிர்வாழ முடியும்.[7]
இவற்றின் உணவில் பெரும்பாலானவை லைக்கன்கள், பைன் ஊசிகள், இலைகள் மற்றும் மரங்களின் பட்டைகள் ஆகும். குளிர்காலத்தில், கத்தூரி மான்களின் உணவில் 99 சதவீதம் லைக்கன்கள் ஆகும். சைபீரிய கத்தூரி மான் எளிதில் செரிமானம் செய்யக்கூடிய சத்தான உணவுகளை விரும்புகிறது.
சிறப்பியல்புகள்
[தொகு]
இந்த சிற்றினம் பெரும்பாலும் இரவாடி வகையினவாக உள்ளது. குறுகிய தூரங்களில் மட்டுமே இடம்பெயர்கின்றன. இது 2,600 மீ (8,500 ) க்கும் அதிகமான உயரமான வாழிடத்தினை விரும்புகிறது. முதிர்ச்சியடைந்த் மான்கள் அளவில் சிறியவை. இவற்றின் எடை 7 முதல் 17 கிலோ வரை இருக்கும் .
சைபீரிய கத்தூரி மான் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் மூலம் பாதிக்கப்படக்கூடியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது இதன் கத்தூரி சுரப்பிக்காக வேட்டையாடப்படுகிறது. கத்தூரி ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு 45,000 டாலர் வரை விலை பெறுகிறது. ஒரு வயது வந்த ஆணிடமிருந்து ஒரு சில பத்து கிராம் கத்தூரி மட்டுமே பிரித்தெடுக்க முடியும். மானைக் கொல்லாமல் சுரப்பியை அகற்ற முடியும், ஆனால் இது அரிதாகவே செய்யப்படுகிறது. 2016ஆம் ஆண்டில், கொரிய நிறுவனமான சூம் பயோடெக் சைபீரிய கத்தூரி மானை நகலெடுக்க செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.[8]
சைபீரிய கத்தூரி மானின் மிகவும் குறிப்பிடத்தக்க பண்புகள் அதன் தந்தங்கள் மற்றும் கங்காரு போன்ற முகம் ஆகும். ஆண்களில் கொம்புகளுக்கு பதிலாக பற்களை காட்சிப்படுத்த வளர்க்கிறார்கள்.[9][10]
ஒரு தனித்துவமான துணையினமானது சக்கலின் தீவில் சுற்றித் திரிகிறது.
மக்கள் தொகைப் போக்கு
[தொகு]உலக மக்கள் தொகை 230,000 குறைந்து வருகிறது▼
- உருசிய கூட்டமைப்பு, சக்கலின் எண்ணிக்கை: 600-500 குறைந்து வருகிறது▼
- உருசிய கூட்டமைப்பு, கிழக்கு சைபீரிய மக்கள் தொகை: 27,000-30,000 வீழ்ச்சி▼
- உருசியா கூட்டமைப்பு, தூர கிழக்கு மக்கள் தொகை: 150,000 குறைந்து வருகிறது▼
- மங்கோலியா: 44,000 வீழ்ச்சி▼
- சீனா: அறியப்படாத சரிவு▼
- கொரியா மக்களாட்சிக் குடியரசு: அறியப்படாத சரிவு▼
- கொரியா குடியரசு: தெரியாத சரிவு [11]▼
கத்தூரி வேதியியல் கலவை
[தொகு]சைபீரிய கத்தூரி மானின் முன்தோற் சுரப்பி சுரப்பி சுரப்புகள் தனிக் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பினோல்கள் (10% மெழுகு (38%) மற்றும் ஸ்டெராய்டுகளால் ஆனவை. கொலஸ்டனால், கொழுப்பு, ஆண்ட்ரோஸ்டிரோன், Δ4-3α-ஹைட்ராக்ஸி-17-கீட்டோஆண்ட்ரோஸ்டின், 5β, 3α-ஹைட்ராக்ஸி-17, கீட்டோஆன்ட்ரோஸ்டேன், 5α, 3β, 17α-டைஹைட்ராக்ஸிஆண்ட்ரோஸ்டேன், 5β-3α, 17β-டைஹைட்ராக்ஸிஆண்டிரோஸ்டேன் மற்றும் 5β, 5α-3α மற்றும் 17α-டிஹைட்ராக்ஸிஅண்ட்ரோஸ்டேன் ஆகியவை ஸ்டீராய்டு பகுதியிலிருந்து தனிமைப்படுத்தப்படலாம். 3-மெத்தில்பென்டேடிகானோன் (மசுகோன்) சுரக்கும் கொழுப்புகளில் அடையாளம் காணப்படவில்லை.[12]
அச்சுறுத்தல்கள்
[தொகு]சைபீரிய கத்தூரி மான்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சீனாவில் தொடங்கியது. இங்கு மான்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக சிச்சுவான் சமவெளிகளில், 1950களில் உள்நாட்டு வர்த்தகத்தில் கத்தூரி உற்பத்தி 80% ஆக இருந்தது.[5] கத்தூரி மான்களின் புதிய காட்சிகள் பின்னர் மேல் வடகிழக்கு ஆசியா மற்றும் உருசியாவில் காணப்பட்டன. மான்கள் காணப்பட்ட இந்த இடங்களில் கத்தூரி சந்தைகள் திறக்கப்பட்டன. 1980களுக்குப் பிறகு, இவற்றின் கத்தூரி சுரப்பிகளை வேட்டையாடுவதால் உற்பத்தி சீராகக் குறையத் தொடங்குகிறது. சுரண்டல் கத்தூரி மான்களின் எண்ணிக்கையை கடுமையாகக் குறைக்கும் வரை மான்களின் கத்தூரியை அதிக அளவில் அறுவடை செய்யும் சுழற்சி தொடர்ந்தது.
காடழிப்பு மூலம் வாழ்விட இழப்பு ஏற்படுவது மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளது. நீண்ட காலத்திற்கு, சீனா அதன் காடுகளை மறு நடவு செய்ய முடிந்ததை விட அதிகமாக வெட்டியது. வர்த்தகத்தில் மரக்கன்றுகளை அறுவடை செய்வதற்காக கடந்த 25 ஆண்டுகளில் சீனாவின் வன வளங்களில் 200 மில்லியன் செமீ 3 வெட்டப்பட்டன.[5] இம்மான்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வாழ முடியும் என்பதால், காடழிப்பு என்பது கத்தூரி மானின் நீண்டகால உயிர்வாழ்வுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.
சைபீரிய கத்தூரி மான் பாதிக்கப்படக்கூடியதாக கருதப்படுகிறது. ஆனால் மெதுவாக இதன் ஆபத்து குறைந்து வருகிறது. உருசியாவில், சைபீரிய கத்தூரி மான் மங்கோலிய விலங்கு இராச்சியத்தின் (2000) சட்டத்தின் பகுதி 7.1 இன் கீழ் மிகவும் அரிதானதாக பாதுகாக்கப்படுகிறது. 1995 மங்கோலிய வேட்டைச் சட்டத்தின் கீழ்[1] சைபீரிய கத்தூரி மான்களின் எண்ணிக்கையில் சுமார் 13% பங்கைக் கொண்ட தேசிய பூங்காக்களின் கீழ் கத்தூரி மான்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில், கத்தூரி வர்த்தகம் சி.ஐ.டி.யி.எசு. மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. கத்தூரி தொடர்பான அனைத்து வர்த்தகங்களும் மான்களின் உயிர்வாழ்வை சுரண்டுவதைத் தவிர்ப்பதற்காக கடுமையான ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை. [13]
குறிப்புகள்
[தொகு]- ↑ ஆப்கானித்தான், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், பாக்கித்தானின் மான்கள் மட்டுமே. மற்ற அனைத்து பகுதியின் மான்கள் அட்டவணை பின் இணைப்பு IIஇல் சேர்க்கப்பட்டுள்ளன
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Nyambayar, B.; Mix, H.; Tsytsulina, K. (2015). "Moschus moschiferus". IUCN Red List of Threatened Species 2015. doi:10.2305/IUCN.UK.2015-2.RLTS.T13897A61977573.en. https://www.iucnredlist.org/species/13897/61977573. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. Retrieved 2022-01-14.
- ↑ 3.0 3.1 Fessenden, M. (2014). "Fanged deer not extinct, still roaming the mountains of Afghanistan". smithsonianmag.com.
- ↑ "The musk deer, Moschus moschiferus, in USSR". IUCN (in ஆங்கிலம்). 2016-01-29. Retrieved 2021-03-27.
- ↑ 5.0 5.1 5.2 Qi, W.-H., Li, J., Zhang, X.-Y., Wang, Z.-K., Li, X.-X., Yang, C.-Z., Fu, W. and Yue, B.-S. (2011) 'The reproductive performance of female forest musk deer () in captivity', Theriogenology, 76(5), pp. 874–881. doi: 10.1016/j.theriogenology.2011.04.018.
- ↑ Maksimova, D. A., Seryodkin, I. V., Zaitsev, V. A., & Miquelle, D. G. (2014).
- ↑ Wang, W., Zhou, R., He, L., Liu, S., Zhou, J., Qi, L., Li, L. and Hu, D. (2015) 'The progress in nutrition research of musk deer: Implication for conservation', Applied Animal Behaviour Science, 172, pp. 1–8.
- ↑ Zastrow, Mark (8 February 2016). "Inside the cloning factory that creates 500 new animals a day". New Scientist. https://www.newscientist.com/article/2076681-inside-the-cloning-factory-that-creates-500-new-animals-a-day/.
- ↑ National Geographic Channel.
- ↑ "Fanged Deer Not Extinct, Still Roaming the Mountains of Afghanistan | Smart News | Smithsonian Magazine"."Fanged Deer Not Extinct, Still Roaming the Mountains of Afghanistan | Smart News | Smithsonian Magazine".
- ↑ "Factsheet: Siberian Musk Deer (Musk deer (Artiodactyla Moschidae) > Moschus moschiferus)". Archived from the original on 2012-12-07. Retrieved 2013-06-16.
- ↑ Musk deer (Moschus moschiferus): Reinvestigation of main lipid components from preputial gland secretion.
- ↑ Yang, Q., Meng, X., Xia, L. and Feng, Z. (2002) Conservation status and causes of decline of musk deer (Moschus spp.) in china. Available at: "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-05-06. Retrieved 2016-04-13.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
வெளியிணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Moschus moschiferus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Huffman, Brent. "Species profile: Moschus moschiferus, Siberian musk deer". www.UltimateUngulate.com. Archived from the original on 2010-10-16. Retrieved 2010-02-17.
- "Species profile: Siberian Musk Deer - Moschus moschiferus". United Nations Environment Programme — World Conservation Monitoring Centre. Archived from the original on 2010-04-28. Retrieved 2010-02-17.