உள்ளடக்கத்துக்குச் செல்

சைபீரிய அசுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைபீரிய அசுக்கி என்பது உழைக்கும் நாய் இனங்களில் ஒன்றாகும். இவைகள் இழுநாய்களாக பயன்படுகின்றன.

சைபீரிய அசுக்கி
கறுப்பு வெள்ளை அசுக்கி
பிற பெயர்கள் ச்சுக்ச்சா[1]
செல்லப் பெயர்கள் அசுக்கி
சைபு
தனிக்கூறுகள்
எடை ஆண் 45–60 pounds (20–27 kg)
பெண் 35–50 pounds (16–23 kg)
உயரம் ஆண் 21–23.5 அங்குலங்கள் (53–60 cm)
பெண் 20–22 அங்குலங்கள் (51–56 cm) [2]
குட்டிகளின் எண்ணிக்கை 4–8 குட்டிகள்
வாழ்நாள் 12–14 ஆண்டுகள்[3]
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

தோற்றம்[தொகு]

கம்பளி போன்ற தோலுடனும் முக்கோண செவிகளுடனும் உடலில் பல்வேறு குறிகளைக் கொண்ட இவ்வகை நாயினம் வடகிழக்கு ஆசியாவின் சைபீரியாவில் வாழும் ச்சுக்சி மக்களினால் இழுநாய்களாக பயன்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சைபீரிய ஆர்ட்டிக் பகுதியின் குளிர்மையான தட்பவெப்பத்திற்கேற்ப தடிமனான தோலுடனும் கம்பளிமுடியுடனும் சுறுசுறுப்பான பண்புடனும் இந்நாய்கள் இருக்கின்றன. குரைத்தலைக் காட்டிலும் இவை மிகுதியாக ஊளையே இடும். [4]

அறிமுகம்[தொகு]

வில்லியம் கூசக் என்கிற உருசிய மயிர் வணிகர் சைபீரிய அசுக்கி நாயினத்தை முதன் முறையாக அலாசுக்கா மாகாணத்தில் போட்டி ஒன்றின் போது இழுநாய்களாக அறிமுகப்படுத்தியதாகத் தெரிகிறது. அறிமுகத்திற்கு பிறகு, ஆராய்ச்சிகளில் பனிச்சறுக்கு பந்தயங்களிலும் இந்நாய்கள் இழுநாய்களாக பயன்பட்டன. தற்போது செல்லப் பிராணியாக வீட்டிற்குள் வைத்து வளர்க்கப்படுகிறது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Siberian husky". பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
  2. https://images.akc.org/pdf/breeds/standards/SiberianHusky.pdf
  3. Sheldon L. Gerstenfeld (1 September 1999). ASPCA Complete Guide to Dogs. Chronicle Books. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8118-1904-6.
  4. "சைபீரிய அசுக்கி ஒரு அறிமுகம்".
  5. "இழுநாய் ஓட்டப்பந்தய வரலாறு".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபீரிய_அசுக்கி&oldid=3759482" இலிருந்து மீள்விக்கப்பட்டது