உள்ளடக்கத்துக்குச் செல்

சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 2°56′18.4″N 101°39′57.1″E / 2.938444°N 101.665861°E / 2.938444; 101.665861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 PY40 
சைபர்ஜெயா சிட்டி
| எம்ஆர்டி
சைபர்ஜெயா சிட்டி நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்மலாய்: Stesen MRT Cyberjaya City Centre
சீனம்: 赛城中心地铁站
அமைவிடம்சைபர்ஜெயா சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்2°56′18.4″N 101°39′57.1″E / 2.938444°N 101.665861°E / 2.938444; 101.665861
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
பிரசரானா
இயக்குபவர் ரேபிட் கேஎல்
தடங்கள்12  புத்ராஜெயா 
நடைமேடை1 தீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலை
தரிப்பிடம்Parking உண்டு[1]
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடு PY39 
வரலாறு
திறக்கப்பட்டதுபுத்ராஜெயா வழித்தடம் 16.03.2023
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
சைபர்ஜெயா உத்தாரா
குவாசா
 
புத்ராஜெயா வழித்தடம்
 
புத்ராஜெயா சென்ட்ரல்

முடிவிடம்
அமைவிடம்
Map

சைபர்ஜெயா சிட்டி செண்டர் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Cyberjaya City Centre MRT Station அல்லது Cyberjaya City Centre–Limkokwing Station; மலாய்: Stesen MRT Cyberjaya City Centre) என்பது மலேசியா, சிலாங்கூர், சைபர்ஜெயா நகர்ப்பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். சைபர்ஜெயா புறநகர் பகுதிக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 2023-இல் திறக்கப்பட்டது.

 PY39  சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையத்திற்கும்  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம்  PY40  எனும் நிலையக் குறியீட்டைக் கொண்டுள்ளது.[2] கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையமும் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்டுள்ளது.

வரலாறு

[தொகு]

"எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா (SSP) வழித்தட சீரமைப்புக் காணொளி" என்ற தலைப்பில் யூடியூப் வலையொளியில் எம்ஆர்டி நிறுவனத்தால் செப்டம்பர் 15, 2016 அன்று வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் சைபர்ஜெயா சிட்டி செண்டர் (Cyberjaya City Centre) என்று இந்த நிலையத்தின் பெயர் முதன்முதலில் குறிப்பிடப்பட்டது.[3]

அந்தக் காணொளியில், சைபர்ஜெயா சிட்டி செண்டர் எம்ஆர்டி நிலையத்திற்கான தற்காலிக நிலையக் குறியீடு  S35  என்றும் அறிவிக்கப்பட்டது.[2] அதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நிலையத்தின் பெயர் சைபர்ஜெயா சிட்டி செண்டர் எம்ஆர்டி (MRT Cyberjaya Utara) என மாற்றம் செய்யப்பட்டது.[4]

கட்டுமானங்கள்

[தொகு]

சைபர்ஜெயா சிட்டி செண்டர் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானம் S210 (Package S210) உடன்படிக்கையின் கீழ் செயல் படுத்தப்பட்டது. S210 உடன்படிக்கை என்பது அப்போதைய கட்டுமானத்தில் இருந்த  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையத்தின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளையும் உள்ளடக்கியது. நிலையங்களின் கட்டமைப்பு பணிகளுக்கான தொகை மொத்தம் RM 145.8 மில்லியன் மலேசிய ரிசோர்சஸ் நிறுவனத்திடம் (Malaysian Resources Corporation Berhad) (MRCB) செப்டம்பர் 17, 2017-இல் வழங்கப்பட்டது.[5]

செயல்பாடு

[தொகு]

S210 உடன்படிக்கை, நிலையங்களின் கட்டமைப்புகள் மற்றும் அவை தொடர்பான வேலைகளை உள்ளடக்கியது. அவற்றுள் புத்ராஜெயா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமான வேலைகளும் அடங்கும்.[6][4][7]

 PY40  சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2023 மார்ச் 16-ஆம் திகதி திறக்கப்பட்டது.  KC03   PY14  பத்து கன்டோன்மன் கொமுட்டர் நிலையம் தொடங்கி  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான பிற புத்ராஜெயா வழித்தட நிலையங்களுடன் இணைந்து இந்த நிலையமும் செயல்படத் தொடங்கியது. இருப்பினும் இந்த நிலையம் முதலில் சூலை 2022-இல் திறக்க திட்டமிடப்பட்டது.[8][9][10] ஆனாலும் தொடருந்து பெட்டிகளின் சோதனை ஓட்டம் காரணமாக சனவரி 2023-க்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் நிலையத்தின் திறப்புவிழா தாமதமானது.

அமைவு

[தொகு]

சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையம்; சிலாங்கூர் மாவட்டங்களில் ஒன்றான சிப்பாங் மாவட்டத்தில் சைபர்ஜெயா நகரத்தின் வடக்குப் பகுதியில் ஏறக்குறைய 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு மிக அருகில சைபர்ஜெயா (Cyberjaya) உள்ளது.

சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் சைபர்ஜெயா சிட்டி சென்டர், சைபர் 4, சைபர் 6, லிம் கோக் விங் படைப்பாற்றல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Limkokwing University of Creative Technology), தி பிளேஸ், பெர்டோனாஸ் பெர்சியாரான் ஏபெக், டெலிகோம் மலேசியா சைபர்ஜெயா செயற்கைக்கோள் நிலையம் (Stesen Satelit Bumi Telekom Malaysia Cyberjaya), மியாசாட் செயற்கைக்கோள் அமைப்பு (MEASAT Satellite Systems) மற்றும் அஸ்ட்ரோ சைபர்ஜெயா ஒளிபரப்பு மையம் (Astro) ஆகியவை உள்ளன.[11][12]

கட்டமைப்பு

[தொகு]

ரேபிட் கேஎல் வெளியிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து வரைபடத்தின் அடிப்படையில்,  PY40  சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையம் தெரு மட்டத்தில், தற்காலிக வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.[12]

மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் இந்த  PY40  சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையம் கொண்டுள்ளது.[12]; அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுப் பாதைகள்; நிலையத்தைச் சுற்றியுள்ள தரை மேற்பரப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு தொகுதிகள்; அவர்களுக்கு ஏற்ற வகையில் கழிவறைகள்; சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை மின்தூக்கி பொத்தான்கள்; மின்தூக்கி பொத்தான்களில் பிரெய்லி எழுத்துப் பதிவுகள்; மற்றும் சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலைச் சேவை மையங்கள்[12] போன்றவை அடங்கும்.

பயனர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக; பொது கழிவறை வசதிகள், ஆண்கள் பெண்களுக்கான வழிபாட்டு அறைகள் (Surau), வாடிக்கையாளர் சேவை மையங்கள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. நிலையத்தின் நுழைவாயில் மட்டத்தில் உள்ள தற்சேவை பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலம் பயனர்கள் தங்களின் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.[12]

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]

இந்த நிலையத்தில் ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது.[13]

 புத்ராஜெயா  — சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்
நுழைவாயில் அமைவிடம் இலக்கு தோற்றம்
A APEC நடைபாதை ஊனமுற்றவர் அணுகல் பேருந்து போக்குவரத்து Hentian untuk kenderaan peribadi, e-panggilan dan teksi நகரப் பேருந்துகள் நிறுத்தம் (T506  T507 ), வாடகை வாகனங்கள் நிறுத்தம்; தனியார் வாகனங்கள் நிறுத்தம்; வாடகை வாகன சவாரி அழைப்பு; பயனர்களுக்கான அணுகல் வசதிகள்.
     (கட்டுமான இடைநிறுத்தம்)

பேருந்து சேவைகள்

[தொகு]

சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையயத்தின் ஊட்டி பேருந்து சேவை முனையம், நிலையத்தின் வடக்கு மையத்தில் (பேருந்து நிறுத்தக் குறியீடு - SP414) அமைந்துள்ளது. இந்த மையத்தில் இரண்டு ஊட்டி பேருந்து வழித்தடங்கள் உள்ளன.[14]

சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையத்தின் பேருந்து சேவைகள்
பேருந்து தொடக்கம் இலக்கு
T506   PY40  சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையம் சைபர் 10 (→) APEC நடைபாதை (→) பெர்சியாரான் ரிம்பா பெர்மாய் (→) பெர்சியாரான் சிப்பாங் (→) பெர்சியாரான் லாமான் வியூ (→) பெர்சியாரான் சிப்பாங் தெக்னோகிராட் சாலை 2 (→) லிம் கோக் விங் படைப்பாற்றல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (→) 503  T504  T505 
T507   PY40  சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையம் சைபர்ஜெயா போக்குவரத்து முனையம் (→) தெக்னோகிராட் சாலை 6 (→) 503  T504  T505 

காட்சியகம்

[தொகு]

சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cyberjaya Utara - MRT USER RM 4.50 (per day per entry) RM 11.00 (maximum per day / overnight charges)". www.mymrt.com.my. 6 March 2023. Retrieved 26 November 2025.
  2. 2.0 2.1 "Klang Valley Integrated Transit Map" [Peta Transit Berintegrasi Lembah Klang] (PDF). MyRapid (in ஆங்கிலம்). Suruhanjaya Pengangkutan Awam Darat. 2021. Retrieved 20 February 2022.
  3. MRT Corp Malaysia (15 September 2016). "MRT Sungai Buloh- Serdang- Putrajaya (SSP) Line Alignment Video" [Video Jajaran Laluan MRT Sungai Buloh- Serdang- Putrajaya (SSP).]. Youtube (in ஆங்கிலம்). Retrieved 21 January 2020.
  4. 4.0 4.1 M. Hafidz Mahpar (6 November 2016). "MRT Corp: All elevated station contracts for SSP Line awarded" (in en). The Star (Malaysia). https://www.thestar.com.my/business/business-news/2017/11/06/mrt-corp---all-elevated-station-contracts-for-ssp-line-awarded. 
  5. "Awarded Contracts" [Penganugerhan Kontrak]. MRT Corp (in ஆங்கிலம்). Malaysia. Retrieved 2021-12-12.
  6. SunBiz (8 March 2019). "Uni Wall APS secures RM32.14m MRT subcontract from Ahmad Zaki". thesundaily.my (in ஆங்கிலம்). The Sun. Retrieved 8 March 2023.
  7. "Awarded Contracts" [Penganugerhan Kontrak]. MRT Corp (in ஆங்கிலம்). Malaysia. Retrieved 2021-12-12.
  8. "SSP MRT line 41% done: MRT Corp" (in en) இம் மூலத்தில் இருந்து 7 Mei 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190507082926/https://www.thesundaily.my/local/ssp-mrt-line-41-done-mrt-corp-CE446422. 
  9. Bernama (4 October 2021). "MRT Laluan Putrajaya Fasa 2 siap 93.52 peratus serta dijangka beroperasi January 2021". bernama.com (Bernama). https://www.bernama.com/bm/ekonomi/news_pemerkasa.php?id=2010281. 
  10. Bernama (7 June 2022). "MRT laluan Putrajaya Fasa 2 dijangka operasi tahun depan". Harian Metro (New Straits Times Press). https://www.hmetro.com.my/mutakhir/2022/06/849659/mrt-laluan-putrajaya-fasa-2-dijangka-operasi-tahun-depan-metrotv. 
  11. "Pangkalan Data Nama Geografi dan Gazetir Kebangsaan". MyGeoName. Jabatan Ukur dan Pemetaan Malaysia. Retrieved 2022-01-06.
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 "Maklumat mengenai Stesen MRT Taman Naga Emas". www.mymrt.com.my. Mass Rapid Transit Corporation (MRT Corp) Sdn. Bhd. Retrieved 29 November 2022.
  13. "Persiaran Sierra Utama (16 Sierra) - MRT Corp". www.mymrt.com.my. 31 March 2021. Retrieved 7 November 2025.
  14. "Prasarana Bus Movements". myrapidbus.prasarana.com.my. Retrieved 7 November 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]