சைனோடாண்டிசு இட்டூரி
| சைனோடோன்டிசு இட்டூரி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | மொச்சோகேடே |
| பேரினம்: | சைனோடாண்டிசு |
| இனம்: | சை. இட்டூரி |
| இருசொற் பெயரீடு | |
| சைனோடாண்டிசு இட்டூரி இசுடைன்டாச்னர், 1911 | |
சைனோடாண்டிசு இட்டூரி (Synodontis iturii) தலைகீழான கெளுத்தி மீன் சிற்றினமாகும். காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள இட்டூரி ஆற்றில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2] 1911-இல் இம்மீன் குறித்த விவரத்தினை முதன்முதலில் பிரான்சு இசுடைன்டாச்னர் விவரித்தார்.[3] இட்டூரி ஆற்றில் மட்டுமே காணப்படுவதால் இம்மீன் சிற்றினத்தின் பெயரானது இட்டூரி என வழங்கப்படுகிறது.[4]
விளக்கம்
[தொகு]சைனோடாண்டிசு பேரினத்தின் அனைத்து சிற்றினங்களைப் போல, சி. இட்டூரியின் தலையில் ஒரு தனித்துவமான குறுகிய எலும்பு, வெளிப்புறமாகத் துருத்திக்கொண்டுள்ளது.[5] இம்மீனில் மூன்று இணை தாடி உள்ளன. முக எலும்பு தாடிகள் மேல் தாடையிலும், மேலும் இரண்டு இணை சிபுகத்துக்குரிய தாடிகள், கீழ் தாடையிலும் உள்ளன.[6] கொழுவியத் துடுப்பு பெரியது. வால் துடுப்பு பிளவுபட்டது.[3]
முதுகுபுற துடுப்புகளின் முன் விளிம்புகளும், மார்பு அல்லது முன் துடுப்புகள் முதுகெலும்புகளால் கடினப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முள்ளெலும்புகள் உடலின் வலது கோணத்தில் உயர்த்தப்பட்டுத் தற்காப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுகிறது.[7][8] இந்நோக்கத்திற்காக முதுகெலும்புடன் இணைக்கப்பட்ட பல சிறிய எலும்புகள் துணை வருகிறது. ஒரு முறை உயர்த்தப்படும் இந்த முட்களை, நுனியில் அழுத்தம் கொடுத்து மடிக்க முடியாது.[8]
இந்த மீனின் மேல் தாடையின் முன்பகுதியில் முன் மேல் தாடை பல் அட்டை அமைந்துள்ளது. இதில் குறுகிய, உளி வடிவ பற்கள் பல வரிசைகளில் உள்ளன. கீழ் தாடையில் அசையக்கூடிய பற்களானது நெகிழ்வான, தண்டு போன்ற அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஆங்கில எழுத்தான “எசு” வடிவிலான "கொக்கி"யாக அறியப்படுகிறது.[3][5]
இந்த மீனின் அதிகபட்ச மொத்த நீளம் 20.5 சென்டிமீட்டர்கள் (8.1 அங்) எனவும்,[2] பொதுவாக, சினோடோன்டிசு இனத்தில் சம வயதுடைய ஆண் பெண்களை ஒப்பிடும்போது பெண் மீன்கள் ஆண்களை விடச் சற்று பெரியவை.[9]
வாழ்விடமும் நடத்தையும்
[தொகு]இவை, காங்கோ ஜனநாயகக் மக்களாட்சிக் குடியரசில் மாவாம்பியில் உள்ள இட்டூரி ஆற்றிலில் மட்டுமே காணப்படுகின்றன.[10] இம்மீன்கள் மனித நுகர்வுக்காக அறுவடை செய்யப்படுகிறது.[10] இப்பகுதியில் அடிக்கடி நடைபெறும் போர், சுரங்க செயல்களால் நிகழும் காடழிப்பு, தங்கச் சுரங்கத்திற்காகத் திருப்பி விடப்பட்ட நீரோட்டம் முதலியன இந்த உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.[10]
இம்மீன்கள் பூச்சியின் இளம் உயிரிகள், பாசிகள், வயிற்றுக்காலிகள், ஈரோட்டுடலி, கடற்பாசிகள், ஓட்டுமீன்கள், பிற மீன்களின் முட்டைகளை உணவாக உட்கொள்கின்றன.[11] சைனோடோன்டிசின் பெரும்பாலான சிற்றினங்களின் இனப்பெருக்க முறைகள் குறித்து அறியப்படவில்லை. ஆனால் கருவுற்ற மீன்கள் இடும் கருமுட்டைகளின் எண்ணிக்கை குறித்து சிலதகவல்கள் உள்ளன.[12] சினை விடுதல் பருவ வெள்ளப்பெருக்கு மாதங்களான சூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையிலான ஏற்படுகிறது. இக்காலங்களில் ஆண் பெண் மீன்கள் இணையாக ஒன்றாக நீந்தும் பழக்கமுடையன. மீனின் முதல் ஆண்டில் வளர்ச்சி விகிதம் அதிகமாகவும், பின்னர் வயது அதிகரிக்கும் போது குறைந்து காணப்படும்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Moelants, T. (2010). "Synodontis iturii". IUCN Red List of Threatened Species 2010: e.T182077A7787056. doi:10.2305/IUCN.UK.2010-3.RLTS.T182077A7787056.en. https://www.iucnredlist.org/species/182077/7787056. பார்த்த நாள்: 20 November 2021.
- 1 2 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2016). "Synodontis iturii" in FishBase. June 2016 version.
- 1 2 3 "Synodontis iturii Steindachner, 1911". Planet Catfish. 24 Nov 2008. Retrieved 6 November 2016.
- ↑ Scharpf, Christopher; Kenneth Lazara (12 Sep 2016). "Order SILURIFORMES: Families MALAPTERURIDAE, MOCHOKIDAE, SCHILBEIDAE, AUCHENOGLANIDIDAE, CLAROTEIDAE and LACANTUNIIDAE". The ETYFish Project. Archived from the original on 14 அக்டோபர் 2016. Retrieved 6 November 2016.
- 1 2 Cuvier, Georges (1934). The Animal Kingdom Arranged in Conformity with its Organization, Volume 10. Translated by Griffith, Edward. London: Whittaker and Co. p. 406.
- ↑ Boulenger, George Albert (1909). Catalogue of the fresh-water fishes of Africa in the British museum (Natural history). London: British Museum. p. 391.
- ↑ Nelson, Joseph; T. Grande; M. Wilson (2016). Fishes of the World (Fifth ed.). John Wiley and Sons. p. 227.
- 1 2 Scherge, M.; S. Gorb; S. Gorb. Biological Micro- and Nanotribology. Springer Science & Business Media. pp. 97–98.
- 1 2 H. M. Bishai; Y. B. Abu Gideiri (1965). "Studies on the biology of genus Synodontis at Khartoum". Hydrobiologia 26 (1–2): 85–97. doi:10.1007/BF00142257. https://archive.org/details/hydrobiologia_1965_26_1-2/page/85.
- 1 2 3 Moelants, T. (2010). "Synodontis iturii". IUCN Red List of Threatened Species 2010: e.T182077A7787056. doi:10.2305/IUCN.UK.2010-3.RLTS.T182077A7787056.en. https://www.iucnredlist.org/species/182077/7787056. பார்த்த நாள்: 15 January 2018.
- ↑ Wright, J.J.; L.M. Page (2006). "Taxonomic Revision of Lake Tanganyikan Synodontis (Siluriformes: Mochokidae)". Florida Mus. Nat. Hist. Bull. 46 (4): 99–154.
- ↑ John P. Friel; Thomas R. Vigliotta (March 2, 2009). "Mochokidae Jordan 1923: African squeaker and suckermouth catfishes". Tree of Life Web Project]. Retrieved 19 October 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கியினங்களில் Synodontis iturii பற்றிய தரவுகள்