சைத்ரா ரெட்டி
தோற்றம்
சைத்ரா ரெட்டி | |
---|---|
![]() சைத்ரா ரெட்டி | |
பிறப்பு | சைத்ரா லதா ரெட்டி 23 சூலை 1995[1] பெங்களூரு, கருநாடகம் |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2014–முதல் |
வாழ்க்கைத் துணை | இராகேசு சாமலா[2][3] |
யூடியூப் தகவல் | |
தகவலோடைகள் | Chaitra Reddy |
செயலில் இருந்த ஆண்டுகள் | 2022-முதல் |
சந்தாதாரர்கள் | 1.5 மில்லியன் |
மொத்தப் பார்வைகள் | 350 மில்லியன் |
27 ஆகத்து 2023 அன்று தகவமைக்கப்பட்டது | |
சைத்ரா ரெட்டி (Chaitra Reddy) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாகக் கன்னடம், தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ரக்டு திரைப்படத்தில் அறிமுகமானார்.[4] இவர் முக்கியமாகக் கயல் தொலைக்காட்சித் தொடரில் (2021) கயல் என்ற கதாபாத்திரத்திற்காக அறியப்படுகிறார்.
வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]கன்னடத் தொலைக்காட்சித் துறையில் சைத்ரா தனது நடிப்பு வாழ்க்கையை அவனு மாதே சிரவாணி என்ற தொலைக்காட்சித் தொடருடன் தொடங்கினார். இதில் இவர் 2014-இல் சிரவாணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் 2019-ஆம் ஆண்டு மகேசு கவுடா இயக்கிய கன்னடத் திரைப்படமான ரக்டு-வில்[4] அறிமுகமானார். 2022-ஆம் ஆண்டில், வலிமை திரைப்படத்தில் லதாவாக நடித்ததன் மூலம் இவர் கவனத்தைப் பெற்றார்.[5]
திரைப்படவியல்
[தொகு]திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் | குறிப்பு |
---|---|---|---|---|---|
2019 | ரக்டு | நந்தினி | கன்னடம் | முன்னணி நடிகையாக திரைப்பட அறிமுகம் | [6] |
2022 | வலிமை | லதா | தமிழ் | துணைப் பாத்திரம் | |
விசமக்காரன் | தரங்கிணி | முன்னணிப் பாத்திரம் | [7] |
தொலைக்காட்சி
[தொகு]ஆண்டு | பெயர் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் | குறிப்பு |
---|---|---|---|---|---|
2014-2016 | அவனு மாதே ஷ்ராவணி | சிராவணி | கன்னடம் | முன்னணி நடிகையாக தொலைக்காட்சி அறிமுகம் | |
2016-2017 | கல்யாணம் முதல் காதல் வரை | பிரியா | தமிழ் | முன்னணி வேடம்; நடிகை பிரியா பவானி சங்கருக்குப் பதிலாக | |
2017-2021 | யாரடி நீ மோகினி | சுவேதா | எதிர்மறை பாத்திரம் | ||
2019-2020 | சுபத்ரா பரிணயம் | சுபத்ரா | தெலுங்கு | முன்னணிப் பாத்திரம் | |
2021–தற்போது வரை | காயல் | கயல்விழி முத்துவேல் | தமிழ் | [8] | |
2023 | மாயா தோட்டா | மாயா | |||
2024 | ரஞ்சிதமே (பருவம் 3) | போட்டியாளர் | வெற்றியாளர் | ||
2024 | டாப் குக்கு டூப் குக்கு (பருவம் 1) | போட்டியாளர் | 2வது |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Here's how actress Chaitra Reddy celebrated her 28th birthday". Times of India. 3 August 2023. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/heres-how-actress-chaitra-reddy-celebrated-her-28th-birthday/articleshow/102376944.cms.
- ↑ "TV actress Chaitra Reddy engaged to filmmaker Rakesh Samala". Times of India. 23 October 2020. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/tv-actress-chaitra-reddy-engaged-to-filmmaker-rakesh/articleshow/78827785.cms.
- ↑ Padmashree Bhat (10 November 2020). "ಅರಿಷಿಣ, ಮೆಹೆಂದಿ ಸಂಭ್ರಮದಲ್ಲಿ 'ಅವನು ಮತ್ತೆ ಶ್ರಾವಣಿ' ಧಾರಾವಾಹಿ ನಟಿ; ನಾಳೆ ಚೈತ್ರಾ ರೆಡ್ಡಿ ಕಲ್ಯಾಣ!". Vijaya Karnataka. https://vijaykarnataka.com/tv/news/avanu-mathe-shravani-serial-actress-chaitra-reddy-marriage-with-rakesh-samala/articleshow/79149850.cms. பார்த்த நாள்: 25 August 2023.
- ↑ 4.0 4.1 "ರಗಡ್ ಲುಕ್ನಲ್ಲಿ ಮರಿ ಟೈಗರ್ ವಿನೋದ್". Vijaya Karnataka. 24 November 2017. https://vijaykarnataka.com/entertainment/gossip/tiger-prabhakar-in-ragd-movie/articleshow/61764392.cms. பார்த்த நாள்: 26 August 2023.
- ↑ "TV Actor Chaitra Reddy Over The Moon After Huge Appreciation For Her Role in Valimai". News18.com. 25 February 2022. Retrieved 21 August 2023.
- ↑ "Rugged Movie Review {2.0/5}: Critic Review of Rugged by Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movie-reviews/rugged/movie-review/68628712.cms.
- ↑ "The film Vishamakaran hinges on manipulation". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/the-film-vishamakaran-hinges-on-manipulation/articleshow/80465746.cms.
- ↑ "Kayal tops the TRP charts, here's a look at the top 5 Tamil TV shows". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/kayal-tops-the-trp-charts-heres-a-look-at-the-top-5-tamil-tv-shows/articleshow/99485723.cms.