உள்ளடக்கத்துக்குச் செல்

சைத்தூன் பானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைத்தூன் பானு
பிறப்புசைத்தூன் பானு
(1938-06-18)18 சூன் 1938
பெசாவர், பாக்கித்தான்
இறப்பு14 செப்டம்பர் 2021(2021-09-14) (அகவை 83)
பெசாவர், பாக்கித்தான்[1]
தொழில்
  • எழுத்தாளர்
  • கவிஞர்
  • பெண்கள் உரிமை ஆர்வலர்
மொழிபஷ்தூ மொழி, உருது
கல்விஉருது, பஷ்தூ மொழி இலக்கியம்
முதுகலை
கல்வி நிலையம்இசுலாமிய கல்லூரி பல்கலைக்கழகம்
வகைநாடகங்கள், சிறுகதைகள், புதினங்கள்
கருப்பொருள்அரசியல், சமூகம், இலக்கியம்
செயற்பட்ட ஆண்டுகள்1958–தற்போது வரை
துணைவர்தாஜ் சயீது [a]
பெற்றோர்பிர் சயீது சுல்தான் மஹ்மூத் ஷா (தந்தை)

சைத்தூன் பானு (Zaitoon Bano; 18 சூன் 1938 – 14 செப்டம்பர் 2021),[1] சைத்தூன் பானோ என்றும் உச்சரிக்கப்படும் இவர், பாக்கித்தானைச் சேர்ந்த பெண்ணிய எழுத்தாளரும், கவிஞரும், முன்னாள் வானொலி ஒளிபரப்பாளரும் ஆவார். இவர் முதன்மையாக பஷ்தூ மொழி மற்றும் உருது மொழிகளில் எழுதுகிறார். சில நேரங்களில், இவர் கதுன்-இ-அவல் (முதல் பெண்மணி) அல்லது "பஷ்தூ புனைகதைகளின் முதல் பெண்மணி" என்றும் குறிப்பிடப்படுகிறார். இது பஷ்தூன் இனப் பெண்களின் உரிமைகளுக்கு இவர் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவருக்கு வழங்கப்பட்ட கௌரவத் தலைப்பாகும். இவர் ஹிந்தாரா (கண்ணாடி) என்ற சிறுகதை உட்பட இருபத்தி நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். இது பஷ்தூ மொழியின் முக்கிய எழுத்துக்களில் ஒன்றாக அமைந்தது. [2][3][4]

இவர், பாக்கித்தானின் பெசாவர் நகரில் உள்ள சுபைத் தேரி கிராமத்தில் பிர் சையத் சுல்தான் மஹ்மூத் ஷாவுக்கு பிறந்தார். இவருக்கு தாஜ் சயீத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும் பஷ்தூ கவிஞரான பிர் சையத் அப்துல் குதுஸ் துண்டாரின் பேத்தி ஆவார். [5][6]

கல்வியும் பின்னணியும்

[தொகு]

சைத்தூன், தனது தொடக்கக் கல்வி மற்றும் மெட்ரிகுலேசன் கல்வியை ஒரு நகரப் பள்ளியிலிருந்து பெற்றார். பின்னர் பஷ்தூ மற்றும் உருது மொழிக்கென அமைந்துள்ள இசுலாமியா கல்லூரிப் பல்கலைக்கழகத்தில்[5] முதுகலை பட்டம்[2] பெற்றார். ஒரு தனித் தேர்வராக தனது கல்வியை முடித்த பின்னர், இவர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் கற்பித்து வந்தார். பின்னர் பாக்கித்தான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சேர்ந்தார். அங்கு இவர் ஒரு தயாரிப்பாளராக பணியாற்றினார். [2]எழுத்துக்களுக்கு அறிமுகமாவதற்கு முன்பு, இவர் பாக்கித்தான் வானொலி [7], அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனமான பாக்கித்தான் தொலைக்காட்சிக் கழகம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

[தொகு]

1958ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது தனது முதல் சிறுகதையான ஹிந்தாரா (மிரர்) என்பதுடன் தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். 1958 மற்றும் 2008க்கு இடையில், இவர் உருது மற்றும் பஷ்தூ மொழிகளில் புனைகதை புத்தகங்களையும் சிறுகதைகளையும் எழுதினார். இவரது வெளியீடுகளில் மாட் பாங்ரீ, கோபூனா (1958), ஜுவாண்டி கமூனா (1958), பெர்க் அர்ஸூ (1980), வக்த் கீ டெஹ்லீஸ் பர் (1980) ஆகியவை அடங்கும். மற்ற வெளியீடுகளில், டா ஷாகு மஸல் ஆகியவை அடங்கும். 2006ஆம் ஆண்டில் மஞ்சீலா என்ற தலைப்பில் பஷ்தூ மொழியில் எழுதி வெளிவந்த ஒரே ஒரு கவிதைத் தொகுப்பையும் இவர் எழுதினார். இவர், எழுதுவதைத் தவிர, ஏராளமான வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் பங்களித்து வருகிறார். [8]

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]

பஷ்தூ மற்றும் உருது புனைகதைகளில் இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக சைத்தூனுக்கு பிரைட் ஆஃப் பெர்ஃபாமன்ஸ் [8], பக்ர்-இ-பெசாவர் விருது உட்பட பதினைந்து தேசிய இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டன. [2][9] 2016 ஆம் ஆண்டில், கைபர் பக்துன்வாவில் பெண்கள் உரிமைகளுக்காக இவர் செய்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக அனைத்துலக பெண்கள் நாள் கொண்டாட்டத்தின் போது "கத்துன்-இ-அவல்" (முதல் பெண்மணி) அல்லது "பஷ்தூ புனைகதையின் முதல் பெண்மணி" என்ற கௌரவ பட்டத்தை நிலையான அபிவிருத்தி இலக்குகளின் குழு இவருக்கு வழங்கியது. [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Pashto, Urdu prolific writer Zaitoon Bano passes away". Associated Press Of Pakistan. 2021-09-14. பார்க்கப்பட்ட நாள் 2021-09-14.
  2. 2.0 2.1 2.2 2.3 Shinwari, Sher Alam (11 May 2019). "Zaitoon Bano, 'first lady of Pashto fiction', says women writers have more freedom than ever before". Images.
  3. Report, Bureau (26 October 2016). "Zaitoon Bano a strong Pakhtun feminine voice". DAWN.COM.
  4. "British Pukhtun Association arranges function". www.thenews.com.pk.
  5. 5.0 5.1 "Tales of the times : The bold and the literary". tribune.com.pk.
  6. "Pushto literature: The will to change". DAWN.COM. 29 August 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "'Radio Pakistan has always promoted arts, culture of provinces' | Pakistan Today". www.pakistantoday.com.pk.
  8. 8.0 8.1 ""Pashtun women still need a strong voice" | Literati | thenews.com.pk". www.thenews.com.pk.
  9. Report, Bureau (19 April 2017). "Senior Pashto writer praised for bold expression". DAWN.COM.
  10. "Zaitun Banu declared Khatun-e-Awal of Pashto fiction". www.thenews.com.pk.

குறிப்புகள்

[தொகு]
  1. died in 2002. See Taj Saeed at Rekhta Foundation
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைத்தூன்_பானு&oldid=3308803" இலிருந்து மீள்விக்கப்பட்டது