உள்ளடக்கத்துக்குச் செல்

சைதாமுயிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைதாமுயிட்டு
Chaidamuite
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுZnFe3+(SO4)2(OH)·4(H2O)
இனங்காணல்
நிறம்பழுப்பு முதல் மஞ்சள் பழுப்பு வரை
படிக இயல்புபோலிகனசதுரப் படிகம் மற்றும் சிறுமணி திரட்சிகள்; போலி ஒற்றைச்சாய்வு
படிக அமைப்புமுச்சராய்வு
பிளப்பு{001} மற்றும் {100}, இல் சரிபிளவு.
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை2.5–3
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்வெளிர் மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும்
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.632 nβ = 1.640 nγ = 1.688
இரட்டை ஒளிவிலகல்δ = 0.056
பலதிசை வண்ணப்படிகமைவலிமை: X= வெளிர் மஞ்சள், நிறமற்றது; Y= வெளிர் மஞ்சள்; z= பழுப்பு மஞ்சள் yellow
2V கோணம்44°
மேற்கோள்கள்[1][2][3][4]

சைதாமுயிட்டு (Chaidamuite) என்பது ZnFe3+(SO4)2(OH)•4(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய துத்தநாக இரும்பு சல்பேட்டு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சைதாமுயிட்டு கனிமத்தைCdm[5]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

சைதாமுயிட்டு முதன்முதலில் சீனாவின் கிங்காய் மாகாணத்தின் சைதாமு படுகையில் உள்ள கிலியன்சான் மலைக்கு தெற்கே உள்ள இயிதீசான் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் நினைவாகவே கனிமத்திற்கு சைதாமுயிட்டு எனப்பெயரிடப்பட்டது. ஈய துத்தநாக படிவில் ஓர் ஆக்சிசனேற்ற கட்டமாக கனிமம் தோன்றுகிறது. அரிய கனிமங்களான கோக்விம்பைட்டு, கோபியாபைட்டு, பட்லரைட்டு மற்றும் சிங்கோபோட்ரியோசென்[4] போன்றவற்றுடன் சேர்ந்து காணப்படுகிறது. சீனாவைத் தவிர அமெரிக்காவின் நெவாடாவிலுள்ள அம்போல்ட்டு மாகாணம் போடோசி மாவட்டத்தின் கெட்செல் சுரங்கத்திலும் கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Li, W.M., and Wang, Q.G. (1990) Determination and Refinement of the Crystal Structure of Chaidamuite (Issue 5). Science in China Series B-Chemistry, 33, 623–630
  2. 2.0 2.1 Mindat.org
  3. Webmineral data
  4. 4.0 4.1 Handbook of Mineralogy
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

உசாத்துணை

[தொகு]
  • Clark, A.M. (1993) Hey's Mineral Index (3rd edition). Alphabetical Index of Mineral Species, Varieties and Synonyms and Chemical Classification. 121 p. Chapman & Hall, New York, NY.
  • Jambor, J.L., and Burke, E.A.J. (1990) New Mineral Names. American Mineralogist, 75, 1431–1437.
  • Li, W., Chen, G., and Peng, Z. (1986) Chaidamuite. Acta Mineralogica Sinica, 6, 109.
  • Li, W.M., and Wang, Q.G. (1990) Determination and Refinement of the Crystal Structure of Chaidamuite (Issue 5). Science in China Series B-Chemistry, 33, 623–630
  • Mandarino, J.A., and de Fourestier, J., (2005) Mineral Species First Found in People's Republic of China. (No. 2). Rocks and Minerals, 80, 114–117.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைதாமுயிட்டு&oldid=4256542" இலிருந்து மீள்விக்கப்பட்டது