சைக்கோ (1960 திரைப்படம்)
சைக்கோ (1960 திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | ஆல்பிரட் ஹிட்ச்காக் |
தயாரிப்பு | ஷாம்லே புரொடக்சன்ஸ் |
திரைக்கதை | ஜோசப் ஸ்டீஃபனோ |
இசை | பெர்னார்ட் ஹெர்மன் |
நடிப்பு | ஆண்டனி பெர்கின்ஸ் ஜேனெட் லீ வேரா மைல்ஸ் ஜான் கவின் மார்ட்டின் பால்சம் |
ஒளிப்பதிவு | ஜான் எல் ரஸல் |
படத்தொகுப்பு | ஜார்ஜ் டோமாசினி |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 16, 1960 (நியூயார்க் நகரம்) செப்டம்பர் 8, 1960 (அமெரிக்கா) |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
சைக்கோ 1960 ஆம் ஆண்டு ஆல்பிரட் ஹிட்ச்காக் தயாரித்து இயக்கிய அமெரிக்க உளவியல் திகில் திரைப்படமாகும். இப்படத்தின் திரைக்கதை 1959 ஆம் ஆண்டு வெளியான ராபர்ட் பிளோக் அவர்களின் 'சைக்கோ’ நாவலை அடிப்படையாக்கொண்டு ஜோசப் ஸ்டெபனோ அவர்களால் எழுதப்பட்டது. இப்படத்தில் ஆண்டனி பெர்கின்ஸ், ஜேனெட் லீ, வேரா மைல்ஸ், ஜான் கவின் மற்றும் மார்ட்டின் பால்சம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் ஹிட்ச்காக் ஏற்கனவே இயக்கியிருந்த நார்த் பை நார்த்வெஸ்ட் திரைப்படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக பார்க்கப்பட்டது. மேலும் ‘ஆல்பிரட் ஹிட்ச்காக் பிரசன்ஸ்’ என்ற தொலைக்காட்சி தொடரில் பணிபுரிந்த ஆட்களை கொண்டு இத்திரைப்படம் குறைந்த பொருட்செலவில் கறுப்பு-வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் ஆரம்பத்தில் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்டது. மேலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் பார்வையாளர்களின் ஆதரவு மற்றும் வணிக ரிதியான வெற்றி ஆகியவை மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை மாற்றியமைத்தது. சிறந்த துணை நடிகை (ஜானெட் லீ) மற்றும் சிறந்த இயக்குனர் (ஹிட்ச்காக்) உட்பட இத்திரைப்படம் நான்கு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
தற்போது 'சைக்கோ’ ஹிட்ச்காக்கின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் அவரை உலகமெங்கும் பிரபலப்படுத்தியது.[1] இத்திரைப்படத்தின் நுட்பமான இயக்கம், பதட்டமான சூழல், ஈர்க்கக்கூடிய ஒளிப்பதிவு, மறக்கமுடியாத இசை மற்றும் ஆகச்சிறந்த நடிப்பு ஆகியவற்றின் காரணமாக சர்வதேச திரைப்பட விமர்சகர்கள் மற்றும் அறிஞர்களால் திரைக்கலையின் முக்கிய படைப்பாகப் பாராட்டப்பட்டது.[2]
1980 இல் ஹிட்ச்காக்கின் மரணத்திற்குப் பிறகு, யுனிவர்சல் பிக்சர்ஸ் மூன்று அடுத்தடுத்த பாகங்களை கொண்ட திரைப்படங்களையும், ஒரு மறு ஆக்கம் திரைப்படத்தையும், தொலைக்காட்சிக்காக தயாரித்த ஒரு முன்னோடி திரைப்படத்தையும், தொலைக்காட்சிக்காக 2010 இல் உருவாக்கப்பட்ட 'பேட்ஸ் ஹோட்டல்’ எனப்படும் முன்னோடி தொடரையும் தயாரித்தது. 1992 ஆம் ஆண்டில், அமெரிக்கக் காங்கிரஸ் நூலகம் இத்திரைப்படத்தை "கலாச்சார ரீதியாக, வரலாற்று ரீதியாக அல்லது அழகியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கருதியது. மற்றும் அமெரிக்காவின் தேசிய திரைப்படப் பதிவேட்டின் மூலம் இந்தப்படத்தின் படல மறை பாதுகாப்பதற்காகத் தேர்ந்தெடுத்தது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McCann, Ben. "Psycho turns 60 – Hitchcock's famous fright film broke all the rules". The Conversation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-20.
- ↑ Psycho (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-07-20
- ↑ "Complete National Film Registry Listing - National Film Preservation Board | Programs | Library of Congress". web.archive.org. 2016-10-31. Archived from the original on 2016-10-31. பார்க்கப்பட்ட நாள் 2022-07-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Diverse pix mix picked - Variety". web.archive.org. 2020-08-04. Archived from the original on 2020-08-04. பார்க்கப்பட்ட நாள் 2022-07-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)