உள்ளடக்கத்துக்குச் செல்

சைக்கீசு பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைக்கீசு பக்கி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
கேப்ரிமுல்கிபார்மஸ்
குடும்பம்:
பக்கி
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
C. mahrattensis
இருசொற் பெயரீடு
Caprimulgus mahrattensis
சைக்கீசு, 1832

சைக்கீசு பக்கி (Sykes's nightjar) அல்லது சிந்து பக்கி (கேப்ரிமுல்கசு மகக்ரட்டென்சிசு) என்பது தெற்காசியாவில் வடமேற்கு பகுதியில் காணப்படும் ஒரு பக்கிச் சிற்றினமாகும்.

இந்தியாவில் பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றிய கர்னல் வில்லியம் என்றி சைக்சின் நினைவாக இந்தப் பக்கியின் சிற்றினப் பெயர் இடப்பட்டுள்ளது.[2]

விளக்கம்

[தொகு]

சைக்கீசு பக்கி குட்டையான வால் கொண்ட சிறிய, வெளிர் சாம்பல் நிற பறவையாகும். வால் மீது மெல்லிய கருப்புத் தடுப்பு, மேல் பகுதியில் சிறிய கரும் புள்ளிகள் காணப்படும். துரு நிற கழுத்துடன் இறக்கைகளில் ஒப்பீட்டளவில் மங்கலான துரு நிறப் புள்ளிகள் கொண்டது. இரவாடி வகையினைச் சார்ந்த இந்த பக்கி, வறண்ட புதர் மற்றும் புல்வெளிகளில் வாழ்கிறது.

பன்னி புல்வெளியில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Caprimulgus mahrattensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22689906A93251979. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689906A93251979.en. https://www.iucnredlist.org/species/22689906/93251979. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Beolens, Bo; Watkins, Michael (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. London: Christopher Helm. pp. 332–333.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைக்கீசு_பக்கி&oldid=3930308" இலிருந்து மீள்விக்கப்பட்டது