சைகு சாயிது விளையாட்டரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு
Sheikh Zayed Cricket Stadium
ملعب الكريكيت الشيخ زايد
Sheikh Zayed Cricket Stadium Abudhabi UAE - panoramio.jpg
அரங்கத் தகவல்
அமைவிடம்அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்
ஆள்கூறுகள்24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056ஆள்கூறுகள்: 24°23′47″N 54°32′26″E / 24.39639°N 54.54056°E / 24.39639; 54.54056
உருவாக்கம்2004
இருக்கைகள்20,000
இயக்குநர்பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம்
குத்தகையாளர்பாக்கித்தான் துடுப்பாட்ட அணி
முடிவுகளின் பெயர்கள்
வடக்கு எல்லை
கூடார எல்லை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு20–24 நவம்பர் 2010:
 பாக்கித்தான் v  தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு28 அக்டோபர் – 2 செப்டம்பர் 2017:
 பாக்கித்தான் v  இலங்கை
முதல் ஒநாப18 ஏப்ரல் 2006:
 பாக்கித்தான் v  இந்தியா
கடைசி ஒநாப21 செப்டம்பர் 2018:
 ஆப்கானித்தான் v  பாக்கித்தான்
முதல் இ20ப10 பெப்ரவரி 2010:
 ஆப்கானித்தான் v  இசுக்காட்லாந்து
கடைசி இ20ப27 அக்டோபர் 2017:
 பாக்கித்தான் v  இலங்கை
As of 21 செப்டம்பர் 2018
Source: கிரிக்கின்ஃபோ

சேக் சயத் அரங்கு (Sheikh Zayed Stadium, அரபு மொழி: ملعب الكريكيت الشيخ زايد) ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி நகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்காகும். இவ்வரங்கு $23 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2004 மே மாதத்தில் திறக்கப்பட்டது.[1] முதலாவது ஆட்டம் இங்கு இசுக்காட்லாந்துக்கும், கென்யாவுக்கும் இடையே முதல்-தரப் போட்டியாக 2004 ஐசிசி கண்டங்களிடைக் கிண்ணத்திற்காக இடம்பெற்றது. 20,000 இருக்கைகள் இங்கு உள்ளன.

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

2006 ஏப்ரலில் இவ்வரங்கில் இந்தியாவுக்கும், பாக்கித்தானுக்கும் இடையில் தொடர் போட்டிகள் 2005 பாக்கித்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரிப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இப்போட்டிகளில் $10 மில்லியன் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதியில் 75% பாக்கித்தானுக்கும், மீதம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sheikh Zayed Cricket Stadium- Abu Dhabi Cricket Club". பார்த்த நாள் 15-09-2015.
  2. "India bat in Abu Dhabi charity match against Pakistan" (10 June 2008). பார்த்த நாள் 8-09-2018.

வெளி இணைப்புகள்[தொகு]