சே. மா. செல்லத்தம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எக்ஸ். எம். செல்லத்தம்பு
X. M. Sellathambu

நா.உ.
XMSellathambu.jpg
வவுனியா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1970–1977
முன்னவர் தா. சிவசிதம்பரம்
பின்வந்தவர் தா. சிவசிதம்பரம்
முல்லைத்தீவு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1983
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 20, 1917(1917-10-20)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி
வாழ்க்கை துணைவர்(கள்) மேரி ஜோசஃபின் (இ. 14-01-2004)
பிள்ளைகள் மகேந்திரன், இந்திராணி, ராஜன்
இனம் இலங்கைத் தமிழர்

சேவியர் மார்க் செல்லத்தம்பு (Xavier Mark Sellathambu, 20 அக்டோபர் 1917 - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

செல்லத்தம்பு 1917 அக்டோபர் 20 இல் பிறந்தார்.[1] மேரி ஜோசபின் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[2]

அரசியலில்[தொகு]

செல்லத்தம்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வவுனியா தேர்தல் தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 273 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ் காங்கிரசு வேட்பாளர் தா. சிவசிதம்பரத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[3]

செல்லத்தம்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 1977 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4] He was Chief Opposition Whip from 1977 to 1983.[5]

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 21 இல் செல்லத்தம்பு முல்லைத்தீவு தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்[6].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._மா._செல்லத்தம்பு&oldid=3083115" இருந்து மீள்விக்கப்பட்டது