சே. ப. நரசிம்மலு நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பி. நரசிம்மலு நாயுடு
S. P. Narasimhalu Naidu
SPNarasimhalu Naidu.jpg
பிறப்புஏப்ரல் 12, 1854(1854-04-12)
ஈரோடு, தமிழ்நாடு
இறப்புசனவரி 22, 1922(1922-01-22) (அகவை 67)
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுநூலாசிரியர், பதிப்பாசிரியர்
பெற்றோர்அரங்கசாமி நாயுடு, இலட்சுமி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
எத்திராஜ் அம்மாள், மீனாட்சி அம்மாள்

சேலம் பகடால நரசிம்மலு நாயுடு (ஏப்ரல் 12, 1854 – சனவரி 22, 1922 [1] [2] [3]) தமிழறிஞர், பேச்சாளர், சமூக சேவையாளர், பதிப்பாளர். கொங்கு நாட்டு சேலம் நகரில் பிறந்தவர். தென்னிந்திய சரிதம், பலிஜவாரு புராணம், தலவரலாறுகள், ஆரிய தருமம் முதலிய உரைநடை நூல்கள் உட்பட 94 நூல்களை தமிழில் எழுதிப் பதிப்பித்தவர்.[4] தெலுங்கிலும் நூல்களைப் பதிப்பித்தவர்.[5] தமிழில் பயண இலக்கியங்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். கோயம்புத்தூரில் ஆரம்பகால தொழிற்துறைகளைக் கட்டி எழுப்பியவர்களில் ஒருவர். பல பொதுத் துறைகளை நிறுவியவர்.[6][7]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நரசிம்மலு நாயுடு அரங்கசாமி நாயுடுவுக்கும் இலக்குமி அம்மையாருக்கும் பிறந்தவர். சேலம் கல்லூரியில் கல்வி பயின்றார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல புலமை பெற்றார்.[8]

படிக்கும் பருவத்திலேயே “யாப்பிலக்கண வினா விடை“ என்ற நூலை எழுதி, தமது தமிழாசிரியர் அமிர்தம்பிள்ளையின் உதவியோடு வெளியிட்டார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலே மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த கணிதம் என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். நாயுடு தென்னகத்தின் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, பல சுவடிகளையும் கல்வெட்டுகளையும் ஆய்ந்து ”தட்சண இந்திய சரித்திரம்” என்னும் நூலை சுமார் ஆயிரம் பக்கங்களில் வெளியிட்டார். இந்த நூலில் “விசயசூசிகை“ என்ற தலைப்பில் 34 பக்கங்களில் பொருளடக்கம் தந்துள்ளார்.[4]

இந்து சமய தத்துவம், சமயத் தலைவர்களின் வரலாறு, இறைவன் இலக்கணம், ஆன்ம இலக்கணம், பக்தியியல்பு, வேதம், புராணம், ஆகமம், இதிகாசம் ஆகியவை பற்றி விரிவாக கூறும் ”ஆர்ய சத்திய வேதம்” என்ற நூலையும் எழுதினார்.[4]

வங்க வேதியர் ராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்ம சமாசத்தில் பங்கேற்றுப் பணியாற்றினார். பெண்களுக்கு எனத் தனிப் பள்ளியை நிறுவினார். இதன் கொள்கைகளை வலியுறுத்தி “நீதிக் கும்மி“ என்ற நூலை எழுதினார்.[4][5]

சுதேசாபிமானி, கோவை அபிமானி, கோவை கலாநிதி ஆகிய பத்திரிகைகளை இருபதாண்டுகளுக்குமேல் நடத்தினார்.[4]

கோவையில் முதல் நூற்பாலை தோன்ற இவரே தன் நிலத்தின் ஒரு பகுதியை தந்தார். கோவை மாநகராட்சி மன்றம் நடைபெறுகின்ற விக்டோரிய மண்டபம் விக்டோரிய மகாராணியின் 50 ம் ஆண்டு பொன்விழா நினைவாக இவர் கட்டினார்.[4]

ஆங்கில அரசு இவரது பொதுப்பணியை பாரட்டி இவருக்கு “ராவ்பகதூர்“ பட்டம அளிக்க முன்வந்தது. ஆனால் அதை மறுத்துவிட்டார். ஏழை பால்ய விதவைப் பெண்களுக்கு கல்வியளித்து அவர்களுக்கு புனர்விவாகம் செய்விக்க அறக்கட்டளை ஒன்றை அமைத்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://kalaisoolai.blogspot.in/2013/08/blog-post_3005.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-06-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-11 அன்று பார்க்கப்பட்டது.
  3. எஸ்.பி.நரசிம்மலு நாயுடு, பக்கம்:115, கோயமுத்தூர் ஒரு வரலாறு, ஆசிரியர்: சி. ஆர். இளங்கோவன், ஸ்ரீகாந்த் பப்பிளிகேஷன்ஸ், கோவை-641002
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Thinnai". 6 சூலை 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 "சுவையான சிறுவாணி தண்ணீர்! கோவை வந்த வரலாறு தெரியுமா? –". மக்கள் குரல். 6 சூலை 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. "A man who made this city his own". தி இந்து. 6 ஆகத்து 2005. 9 சூலை 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. A Catalogue of the Tamil Books in the Library of the British Museum, by Lionel David Barnett, George Uglow Pope, British Museum Department, Oriental Printed Books and Manuscripts, p. 208.
  8. சிற்பி பாலசுப்ரமணியம் . இலக்கிய சிற்பிகள்

வெளி இணைப்புகள்[தொகு]

  • "A reformer journalist". தி இந்து. 9 சூலை 2016 அன்று பார்க்கப்பட்டது.