சேவை பெறும் உரிமை சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேவை பெறும் உரிமை சட்டம் என்பது இந்திய அரசால் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் அறிமுகம் செய்யப்பட்ட சட்ட முன்வரைவு ஆகும். இதனை சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு எனவும் கூறலாம். இதுவரை 13 இந்திய மாநிலங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.

நோக்கம்[தொகு]

  • மக்கள் தங்களுக்கு தேவையான பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, நிலப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கடவுச்சீட்டு போன்ற 150 சேவைகளை, சேவை பெறும் உரிமை சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் இச்சேவையை பெற வழிவகுக்குகிறது.
  • சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு , ஒவ்வொரு அரசு ஊழியரும் துறை செய்ய வேண்டிய கடமை என்ன, அந்தக் கடமையைச் செய்துமுடிக்கக் குறைந்தபட்சம் எத்தனை அலுவலக வேலைநாள்கள் தேவையாக இருக்கும் என்பதை மக்கள் சாசனமாக அறிவிக்க வேண்டும்; அத்துடன், ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசும் தனித்தனியாக பொதுமக்கள் குறைதீர் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என கூறுகிறது.

அபராதம்[தொகு]

இச்சட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுத் துறைகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகியன அனைத்தும் இந்தச் சட்ட வரம்புக்குள் வருகின்றன. அரசுத் துறைகளில் ஒவ்வொரு சேவைக்கும் கால அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. தகுந்த காரணமின்றி சேவையை மறுத்த அல்லது தாமதித்த அரசு அதிகாரியின் ஊதியத்திலிருந்து, 500 முதல், 50,000 ரூபாய் வரை, அபராதமாக பிடித்தம் செய்து, மனுதாரருக்கு நஷ்டயீடாக வழங்கப்படுகிறது, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கிறது.

நிறைவேற்றியுள்ள மாநிலங்கள்[தொகு]

  • மத்தியப் பிரதேசம் - 2010
  • உத்தரப் பிரதேசம் - ஜனவரி,2011
  • பீகார் - மே, 2011
  • பஞ்சாப் - ஜூலை,2011
  • ஜம்மு காஷ்மீர் - ஜூலை,2011
  • இமாச்சலப் பிரதேசம் - ஆகஸ்ட்,2011
  • ராஜஸ்தான் - ஆகஸ்ட்,2011
  • சத்தீஸ்கர் - செப்டம்பர்,2011
  • தில்லி - செப்டம்பர்,2011
  • உத்தரகண்ட் - அக்டோபர்,2011
  • ஜார்க்கண்ட் - நவம்பர்,2011
  • கர்நாடகம் - நவம்பர்,2011
  • கேரளம் - ஜூலை,2012


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவை_பெறும்_உரிமை_சட்டம்&oldid=1379890" இலிருந்து மீள்விக்கப்பட்டது