சேவல் சீப்பு மலை
கோழிக்கொண்டை மலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,776 m (9,108 அடி)[1] |
புடைப்பு | 217 m (712 அடி) |
ஆள்கூறு | 51°14′12″N 115°43′30″W / 51.23667°N 115.72500°W |
புவியியல் | |
அமைவிடம் | பான்ஃப் தேசியப் பூங்கா ஆல்பர்ட்டா, கனடா |
மூலத் தொடர் | சாவ்பேக் மலைத்தொடர் கனடா பாறைகள் |
அமைப்பியல் வரைபடம் | தேசிய நிலப்பரப்பு அமைப்பு |
கோழிக்கொண்டை மலை (Cockscomb Mountain (Alberta)) என்பது கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மலையாகும்.[1] மலை உச்சியின் வெளிப்புறமானது சேவலின் கொண்டையை ஒத்து இருப்பதால் 1921 ஆம் ஆண்டு முதல் இம்மலைக்கு சேவல்சீப்பு மலை எனப் பெயரிடப்பட்டது. இது ஆல்பர்ட்டாவில் உள்ள சாபேக் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த மலையானது பிரீகேம்ப்ரியன் முதல் ஜுராசிக் காலகட்டங்களில் படிந்த படிந்த பாறைகளால் உருவானது. ஆழமற்ற கடல்களில் தோன்றிய, வண்டல் பாறை கிழக்கே தள்ளப்பட்டது மற்றும் லாரமைடு பாறையாக்கத்தின் போது இளைய பாறையின் மேலிருந்தது.[2]
காலநிலை
[தொகு]கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில், கோழிக்கொண்டை மலையானது உபவடதுருவ காலநிலை மண்டலத்தில் குளிர், பனிப்பொழிவு மற்றும் மிதமான கோடைகாலங்களுடன் அமைந்துள்ளது.[3] வெப்பநிலை −20°செண்டிகிரேடுக்கு க்கும் கீழேயும், குளிர் காற்று காரணிகள் -30°செண்டிகிரேடுக்கு கீழே இருக்கும். மலையிலிருந்து வழியும் மழைநீர் பவ் ஆற்றின் துணை ஆறுகளில் வடிகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Cockscomb Mountain". PeakFinder.com. Retrieved 2019-08-11.
- ↑ Gadd, Ben (2008), Geology of the Rocky Mountains and Columbias
- ↑ Peel, M. C.; Finlayson, B. L.; McMahon, T. A. (2007). "Updated world map of the Köppen−Geiger climate classification". Hydrol. Earth Syst. Sci. 11: 1633–1644. பன்னாட்டுத் தர தொடர் எண்:1027-5606.
வெளி இணைப்புகள்
[தொகு]- Cockscomb Mountain photo: Flickr
- Cockscomb Mountain weather: Mountain Forecast
- Parks Canada web site: Banff National Park