சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சேலம் வடக்கு | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 89 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சேலம் |
| மக்களவைத் தொகுதி | சேலம் |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 2,76,022[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
சேலம்-வடக்கு சட்டமன்றத் தொகுதி (Salem North Assembly constituency) சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[3] இந்த சட்டமன்றத் தொகுதியானது சேலம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.75 இலட்சம் ஆகும். சேலம் மாநகராட்சியின் வார்டு எண் 6 முதல் 16 வரை மற்றும் வார்டு எண் 26 முதல் 36 வரை. (மொத்தம் 22 வார்டுகள்) மற்றும் கன்னங்குறிச்சி பேரூராட்சியும் இத்தொகுதியில் உள்ளது. இத்தொகுதியில் வன்னியர், தேவாங்க செட்டியார், நாயக்கர், நாயுடு, செங்குந்த முதலியார், நாடார் மற்றும் ஆதி திராவிடர்களும், செவ்வாய்ப்பேட்டைப் பகுதியில் சௌராட்டிரர், இசுலாமியர் மற்றும் கிறித்துவர்களும் உள்ளனர்.[4]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- சேலம் (மாநகராட்சி) வார்டு எண். 6 முதல் 16 வரை மற்றும் 26 முதல் 36 வரை
- கன்னங்குறிச்சி (பேரூராட்சி)[5]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
|---|---|---|---|---|---|---|---|
| 2011 | அழகாபுரம் மோகன்ராஜ் | தேசிய முற்போக்கு திராவிட கழகம் | 88956 | செயப்பிரகாசு | காங்கிரசு | 59591 | 29365 |
| 2016 | இரா. ராஜேந்திரன் | திமுக | 86583 | கே. ஆர். எஸ். சரவணன் | அதிமுக | 76710 | 9873 |
| 2021 | இரா. ராஜேந்திரன் | திமுக | 93432 | கோ. வெங்கடாசலம் | அதிமுக | 85844 | 7588 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | இரா. ராஜேந்திரன் | 93,432 | 46.17 | +1.04 | |
| அ.இ.அ.தி.மு.க. | ஜி. வெங்கடாசலம் | 85,844 | 42.42 | +2.43 | |
| மநீம | ஆர். எசு. குரு சக்கரவர்த்தி | 10,718 | 5.3 | new | |
| நாம் தமிழர் கட்சி | என். இமையா ஈசுவரன் | 8,155 | 4.03 | +3.01 | |
| வாக்கு வித்தியாசம் | 7,588 | 3.74 | -1.4 | ||
| பதிவான வாக்குகள் | 1,98,896 | 72.06 | -0.06 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,76,022 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | +1.04 | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | இரா. ராஜேந்திரன் | 86,583 | 45.13 | n/a | |
| அ.இ.அ.தி.மு.க. | கே. ஆர். எசு. சரவணன் | 76,710 | 39.99 | n/a | |
| பாமக | கதிர் ராசரத்தினம் | 7,975 | 4.16 | n/a | |
| பா.ஜ.க | ஆர். பி. கோபிநாத் | 5,922 | 3.08 | +0.55 | |
| தமாகா | ஆர். தேவதாசு | 4,157 | 2.16 | n/a | |
| நோட்டா | நோட்டா | 4,009 | 2.09 | n/a | |
| நாதக | ஆர். கோவேந்தன் | 1,954 | 1.02 | n/a | |
| வாக்கு வித்தியாசம் | 9,873 | 5.14 | n/a | ||
| பதிவான வாக்குகள் | 1,91,841 | 72.12 | -2.42 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,65,999 | ||||
| தேமுதிக இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | n/a | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேமுதிக | அழகாபுரம் ஆர். மோகன் ராஜ் | 88,956 | 54.46 | - | |
| காங்கிரசு | ஜி. ஜெயபிரகாசு | 59,591 | 36.48 | - | |
| பா.ஜ.க | டி. மோகன் | 4,133 | 2.53 | - | |
| இஜக | வி. வெங்கடேசன் | 1,965 | 1.20 | - | |
| வாக்கு வித்தியாசம் | 29,365 | 17.98 | n/a | ||
| பதிவான வாக்குகள் | 1,63,459 | 74.53 | - | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 219,327 | ||||
| தேமுதிக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
- ↑ "Salem (North) Assembly Election Results 2021". Retrieved 2 May 2021.
- ↑ "சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2021/03/25045059/Number-of-voters-in-11-assembly-constituencies-in.vpf. பார்த்த நாள்: 12 September 2025.
- ↑ 2021இல் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி நிலவரம்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 மே 2014.