சேலம் மாநகரத் தந்தைகள் பட்டியல்
சேலம் மாநகரத் தந்தை Mayor of Salem | |
---|---|
தற்போது ஆ. இராமச்சந்திரன் | |
Type | நகராட்சி ஆணையம் |
பதவி | பதவியில் |
அலுவலகம் | பிரெட்சு சாலை, சேலம் |
நியமிப்பவர் | சேலம் தேர்தல் பிரிவு |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | G.சூடாமணி |
உருவாக்கம் | 1996 |
இணையதளம் | Mayor of Salem |
சேலம் மாநகரத் தந்தை (Mayor of Salem) என்பவர் தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாநகரின் முதல் குடிமகன் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்ற பதவிக்குரியவரான இவர் சேலம் மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நகரத்தின் தலைமை நிர்வாகியாக பொறுப்பு வகிக்கிறார்.[1]
2006-ஆம் ஆண்டு மேயரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை நீக்கப்பட்டது. தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 2011 ஆம் ஆண்டு நேரடித் தேர்தல் முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது.[2]
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தொடர்ச்சியான தாமதம் ஏற்பட்டமையால் மாநிலத்தில் உள்ள மற்ற மேயர்களைப் போலவே சேலம் மேயர் பதவியும் 25 அக்டோபர் 2016 முதல் 4 மார்ச் 2022 வரை காலியாக இருந்தது. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த ஆ. இராமச்சந்திரன், சேலத்தின் ஆறாவது மேயராக 4 மார்ச் 2022 அன்று பதவியேற்றார்.[3]
நகரத் தந்தைகள் பட்டியல்
[தொகு]வ. எண் | உருவப்படம் | பெயர் | தேர்வான கோட்டம் | அரசியல் கட்சி | பதவிக் காலம் | மாமன்றத் தேர்தல் | ||
---|---|---|---|---|---|---|---|---|
1 | G. சூடாமணி | திராவிட முன்னேற்றக் கழகம் | 25 அக்டோபர் 1996 | 2001 | 1ஆவது
(4 ஆண்டுகள், 352 நாட்கள்) |
1ஆவது | ||
2 | இரா. சுரேசு குமார் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 2001 | 2006 | 1ஆவது
(5 ஆண்டுகள், 0 நாட்கள்) |
2ஆவது | ||
3 | எசு.சவுண்டப்பன் | 2006 | 27 அக்டோபர் 2006 | 1ஆவது
(0 ஆண்டுகள், 331 நாட்கள்) | ||||
4 | ஜெ. ரேகா பிரியதர்சினி | மக்களால் நேரடியாகத் தேர்வு | திராவிட முன்னேற்றக் கழகம் | 28 அக்டோபர் 2006 | 24 அக்டோபர் 2011 | 1ஆவது
(4 ஆண்டுகள், 361 நாட்கள்) |
3ஆவது | |
5 | எசு.சவுண்டப்பன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 25 அக்டோபர் 2011 | 24 அக்டோபர் 2016 | 2ஆவது
(4 ஆண்டுகள், 365 நாட்கள்) |
4ஆவது | ||
மாமன்றமும் மேயர் பதவியும் இல்லை (25 அக்டோபர் 2016 – 2 மார்ச் 2022) | ||||||||
6 | ஆ. இராமச்சந்திரன் | 6 | திராவிட முன்னேற்றக் கழகம் | 4 மார்ச் 2022 | பதவியில் | 1ஆவது
(2 ஆண்டுகள், 222 நாட்கள்) |
5ஆவது |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இளங்கோவன்,க .தனசேகரன், நவீன். "உள்ளாட்சி ரேஸ்: அனல் பறக்கும் `எடப்பாடி vs கே.என் நேரு'... சேலம் மாநகராட்சியை கைப்பற்றுமா திமுக?!". Vikatan.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
- ↑ "In next local poll, mayors will be elected directly by people". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Chennai). 21 July 2011 இம் மூலத்தில் இருந்து 2014-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202164702/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-21/chennai/29799406_1_mayor-election-local-body-direct-elections. பார்த்த நாள்: 2014-01-24.
- ↑ "சேலம் மேயராக ஆ.ராமச்சந்திரன் தேர்வு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.