சேலம் அருங்காட்சியகம்
சேலம் அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் சேலம் மாநகரின் ஃபேர்லேண்ட்ஸ் என்னுமிடத்தில் அமையப்பெற்று உள்ளது. இவ்வருங்காட்சியகம், தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியரால் நிருவகிக்கப்பெறுகின்றது. இது 1979-ம் ஆண்டு துவங்கப்பட்டது. [1]
விவரம்[தொகு]
சேலம் தமிழக மாவட்டங்களில் ஒன்றாகும். 1965-க்கு முன்னர் இம்மாவட்டம் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக, தற்போதைய சேலம், நாமக்கல்,தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. எனவே,சேலம், நாமக்கல்,தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சார்ந்த அரிய பொருட்கள் இங்கு காட்சிபடுத்தப்பெற்றுள்ளன.
காட்சிப்பொருட்கள்[தொகு]
இந்த அருங்காட்சியகத்தில், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பயன்படுத்திய பொருட்கள், தமிழர்களின் தொன்மையான காசுகள், இந்திய ஒன்றியத்தின் சுதந்திரத்திற்கு முந்தைய காசுகள், டச்சு, பிரஞ்சுக் காசுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள்,கல்வெட்டுகள், கல் சிலைகள், மரப் படிமங்கள், உலோகப் படிமங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்தியப் பொருட்கள், முதுமக்கள் தாழி, நடுகல் (வீரக்கல்),மஞ்சு விரட்டு கல் வெட்டுகள், சுடுமண் படிமங்கள் ஆகியன உள்ளன.
காட்சிகூடம்[தொகு]
பாடம் செய்யப்பெற்ற நீர் நாய்
ஆதாரம்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Salem Government Museum in a state of neglect". ஆர். இளங்கோவன். தி இந்து. 21 மே 2011. 15 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் சேலம் அருங்காட்சியகம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.