உள்ளடக்கத்துக்குச் செல்

சேர் சா சூரி பள்ளிவாசல்

ஆள்கூறுகள்: 25°36′40″N 85°08′38″E / 25.611°N 85.144°E / 25.611; 85.144
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர் சா சூரி பள்ளிவாசல்
Sher Shah Suri Mosque
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பட்னா
புவியியல் ஆள்கூறுகள்25°36′40″N 85°08′38″E / 25.611°N 85.144°E / 25.611; 85.144
சமயம்சன்னி
மண்டலம்மகதம்
மாநிலம்இந்தியா
மாகாணம்பீகார்
மாவட்டம்பட்னா மாவட்டம்
மாநகராட்சிபட்னா நகராட்சி ஆணையம்
நிலைஇசுலாம்

சேர் சா சூரி பள்ளிவாசல் (Sher Shah Suri Mosque) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் அமைந்துள்ளது. சேர்சாகி பள்ளிவாசல் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஆப்கானிய பாணி கட்டிடக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இப்பள்ளிவாசல் கருதப்படுகிறது. சேர் சா சூரி தனது ஆட்சியின் நினைவாக சேர் சா சூரி பள்ளிவாசலை 1540-1545 ஆம் ஆண்டு காலத்தில் கட்டினார். இது தவல்புராவுக்கு அருகிலுள்ள புராப் தர்வாசாவின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது.[1]

வரலாறு

[தொகு]

சேர் சா சூரி பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் 1540 ஆம் ஆண்டு சேர் சா சூரியின் ஆட்சிக் காலத்தில் தொடங்கி 1545 ஆம் ஆண்டில் நிறைவடைந்தன.

கட்டடக்கலை

[தொகு]

ஆப்கானிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட சேர் சா சூரி பள்ளிவாசல் இந்தியாவில் உள்ள பல வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்களில் ஒன்றாகும். மேலும் இது பாட்னாவின் ஒரு அடையாளமுமாகும். பள்ளிவாசலின் வளாகத்திற்குள் ஒரு கல்லறை உள்ளது. இக்கல்லறை ஓர் எண்கோண கல் பலகையால் மூடப்பட்டுள்ளது. ஆனால் சேர் சா சூரி பள்ளிவாசலின் ஈர்ப்பு அதன் மைய குவிமாடம் ஆகும். இது கூரையின் நடுவில் அமைந்து நான்கு சிறிய குவிமாடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பின் தனித்துவமான பகுதி என்னவென்றால், எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் மூன்று குவிமாடங்கள் மட்டுமே இருப்பதாகத் தெரியும் என்பதாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Sershasurikimasjid". Archived from the original on 10 April 2009. Retrieved 2008-09-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்_சா_சூரி_பள்ளிவாசல்&oldid=4264322" இலிருந்து மீள்விக்கப்பட்டது