சேர்வையாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேர்வையாட்டம் என்பது தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒரு நாட்டார் கலை ஆகும். இதை குறும்பர் என்ற பழங்குடி சமூகத்தினருக்கானது. இது ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.[1]

சேரவை என்னும் இசைக் கருவியை அடித்து ஆடுவதால் இது சேர்வையாட்டம் என அழைக்கப்படுகிறது. இது சடங்கு சார்ந்த கலை. இவர்களின் முதன்மைக் கடவுள் வீரபத்திரர் இந்த ஆட்டத்தை ஆறு முதல் 12 பேர் ஆடுவர். இதற்கென்று ஒப்பனை, பாடல்கள் போன்றவை உண்டு. இதை இரு பிரிவினராக எதிரெதிராக வட்டமாக நின்று ஆடுவர். ஆட்டத்தின் உச்சத்தில் ஆட்டுக் கிடாய் போல தட்சனின் வேள்வியை நினைவூட்டும் விதமாக ஆடுவர்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. ValaiTamil. "சேர்வையாட்டம்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  2. அ. கா. பெருமாள் , தமிழகத்தில் உலாவரும் ஆந்திரக் கலைகள், கட்டுரை, தி இந்து சித்திரை மலர் 2016, பக்கம் 175-177
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்வையாட்டம்&oldid=3831326" இலிருந்து மீள்விக்கப்பட்டது