உள்ளடக்கத்துக்குச் செல்

சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி ஆரம்பப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி ஆரம்ப பள்ளி
முகவரி
கிருஷ்ணன் தெரு, பிள்ளையார் பாளையம்
காஞ்சிபுரம், தமிழ் நாடு, 631501
இந்தியா
அமைவிடம்12°15′49″N 79°17′08″E / 12.2637°N 79.2856°E / 12.2637; 79.2856
தகவல்
வகைஅரசினர் பள்ளி
பள்ளி அவைஆரம்ப நிலை
வகுப்புகள்5
கற்பித்தல் மொழிதமிழ், ஆங்கிலம்
வகுப்பறைகள்15

சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி பள்ளி காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடம் முதலில் ஒரு சாவடியாக இருந்தது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் இந்தப் பகுதிக்கு வந்த போது இந்த மண்டபத்தைக் கண்டார். பயன்படாமல் இருந்த மண்டபத்தில் பள்ளி ஆரம்பிக்கலாம் என எண்ணினார். அக்காலத்தில் சாமிநாத முதலியார் அப்பகுதிக்கு சேர்மனாக இருந்தார். எனவே, அவரின் பெயராலேயே ஆரம்பப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை அப்பள்ளி இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் ஒரே ஒரு மண்டபமாக இருந்த அந்த பள்ளி இப்போது நான்கு கட்டிடங்களுடன் செயல்பட்டுவருகிறது.

இப்பள்ளி அமைந்துள்ள தெருவின் பெயர் கிருஷ்ணன் தெரு. இந்த தெரு பிள்ளையார் பாளையத்தின் இதயப்பகுதியில் அமைந்துள்ளது.

இப்பள்ளியின் மத்தியில் ஒரு பெரிய புங்க மரம் ஒன்று உள்ளது. ஆரம்பகாலத்தில் அந்த மரத்தடியில் தான் பெரும்பாலும் வகுப்புகள் நடைபெறும். தற்போதும் சில சமயங்களில் அங்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. இடைவெளி நேரங்களில் சிறுவ சிறுமியர் இங்கு விளையாடுவர்.

இப்பள்ளி ஆரம்ப பள்ளி ஆதலால் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இங்கு உள்ளன. ஆரம்பத்தில் தமிழ் வழி கல்வி மட்டுமே போதிக்கப்பட்டது. இப்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆங்கில வழி கல்வியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயில, இதே தெருவில் சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆரம்ப காலத்தில் பிள்ளையார் பாளையம் பகுதி மாணவ மாணவியர் மட்டுமே பயின்று வந்தனர். அதன் பின் தற்போது பக்கத்து காலனிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து பயிலுகின்றனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]