சேர்ந்தபூமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேர்ந்தபூமங்கலம் (Sernthapoomangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.[1] இவ்வூரின் சிறப்பு நவகைலாயத்தின் ஒன்பதாவது திருத்தலம் கைலாசநாதர் கோவில் இங்கு அமைந்துள்ளது.[2][3]

அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் மீண்டும் பிறவா வரம் வேண்டி (முக்தி வேண்டி) சிவபெருமானை வணங்கினர். இதை அறிந்த அகத்திய முனிவர் “தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு, பின்னர் நவக்கோள் வரிசையில் சிவனை வணங்கவேண்டும்’’ என்றார். நவகோள்களை அறிவதற்காக ஒன்பது மலர்களை ஆற்றில் விட்டு, இவை எந்தெந்த கரையில் ஒதுங்குகிறதோ அங்கு சிவலிங்கத்தை வைத்து வழிபடுமாறு வேண்டினார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்தார். அதில் முதல் மலர் ஒதுங்கிய இந்த இடத்தில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தூத்துக்குடியிலிருந்து 23 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து 1.5 கிமி தொலைவில் முக்கிய நெடுஞ்சாலை ஆத்தூர் பேருந்து நிலையம் (மா.நெ -176) உள்ளது. ஆத்தூரிலிருந்து சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதியும் உள்ளது. சுமார், 7 கிமீ தொலைவில் தொடர்வண்டி நிலையம் ஆறுமுகநேரியில் உள்ளது. 23 கி.மீ தொலைவில் தூத்துக்குடி வானூர்தி நிலையம் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,047 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 11,910 ஆகும்.

25.26 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 37 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sernthamangalam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.
  2. https://www.tirunelveli.today/ninth-kailasam-sernthapoomangalam/
  3. https://www.naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/kayalpattinam/1080-sernthapoomangalamsivan
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்ந்தபூமங்கலம்&oldid=3528031" இலிருந்து மீள்விக்கப்பட்டது