சேர்கர் கோட்டை
| சேர்கர் கோட்டை | |
|---|---|
| அமைவிடம் | சசாராம், இந்தியா |
| ஆள்கூற்றுகள் | 24°49′40″N 83°43′41″E / 24.827852349185342°N 83.72817241126694°E |
| கட்டப்பட்டது | 1540-45 |
| கட்டிட முறை | இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை |
| உரிமையாளர் |
|
சேர்கர் கோட்டை (Shergarh Fort) (கிலா சேர்கர் , புர்குடா கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள சசாராம் நகரத்தின் செனாரி தொகுதியின் மாலிபூரில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையாகும். இது குட்ரா மற்றும் பீகாரின் சசாராமிலிருந்து நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[1][2] இது கைமூர் பீடபூமியில் சுமார் 800 அடி உயரமுள்ள ஒரு மலைக்கோட்டையான இது சேர் சா சூரியால் பலப்படுத்தப்பட்டது.[3] இந்தக் கோட்டை அடர்ந்த காட்டில் இருப்பதால், பீடபூமியின் அடிப்பகுதியில் இருந்து இதனை அணுகுவது கடினம். இந்தக் கோட்டை துர்காவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[4]
வரலாறு
[தொகு]இந்த கோட்டை 1540 மற்றும் 1545 க்கு இடையில் பேரரசர் சேர் சா சூரியால் கட்டப்பட்டது.[5] 16ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை புர்குடா கிலா என்று அழைக்கப்பட்டது.[6]
கட்டடக்கலை
[தொகு]கிட்டத்தட்ட 16 கிமீ2 பரப்பளவைக் கொண்ட கோட்டையின் பிரதான நுழைவாயிலில் முதலில் எட்டு சிறிய குவிமாடங்கள் இருந்தன. ஆனால் இப்போது ஐந்து மட்டுமே உள்ளன. பிரதான நுழைவாயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ராணி போக்ரா (ராணியின் குளம்) என்று அழைக்கப்படும் ஒரு ஏரி உள்ளது, மேலும் அருகிலுள்ள மலையில் ஒரு நிலத்தடி கோட்டை உள்ளது.[7]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bihar, Past & Present: Souvenir, 13th Annual Congress of Epigraphical Society of India. Kashi Prasad Jayaswal Research Institute. 1987.
- ↑ Provincial Series: Bengal, Vol. II. Usha. 1984.
- ↑ Murray, John (1903). A Handbook for Travellers in India, Burma and Ceylon: Including All British India, the Portuguese and French Possessions, and the Indian States.
- ↑ "470 साल पुराने इस रहस्यमय किले में हैं सैकड़ों सुरंगें और तहखाने, यहां जाने से डरते हैं लोग". Amar Ujala. https://www.amarujala.com/photo-gallery/bizarre-news/shergarh-fort-bihar-where-hundreds-of-tunnels-and-basements-people-are-afraid-to-come.
- ↑ "Hundreds of tunnels are present in this mysterious fort". News Track. https://www.english.newstracklive.com/ampnews/shergarh-fort-bihar-where-hundreds-of-tunnels-and-basements-people-are-afraid-to-come-sc108-nu-1055117-1.html.
- ↑ Studies in Art and Archaeology of Bihar and Bengal. Sri Satguru Publications. 1989. ISBN 8170301912.
- ↑ "हुक्मरानों की नजर से दूर शेरगढ़ का भूमिगत किला". Jagran. https://www.jagran.com/lite/bihar/rohtas-the-fort-of-shergarh-far-away-from-the-eyes-of-the-dictators-19413914.html.