பாண்டியனை எதிர்த்த எழுவர்
Appearance
(சேரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புலவர் நக்கீரர் பாண்டியனை எதிர்த்த ஏழு பேர் யார்யார் என்று குறிப்பிடுகிறார். ஏழுபேர் கூட்டாகச் சேர்ந்து தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைத் தாக்கினர். ஒரே பகலில் பாண்டியன் அவர்கள் ஏழு பேரையும் வெற்றான்.
- சேரல்
- செம்பியன்
- திதியன்
- எழினி
- எருமையூரன் (மை = எருமை, எருமையூர் = மைசூர்)
- இருங்கோ வேண்மான்
- பொருநன்
ஆகியோர் அந்த எழுவர்.
சேரல்
[தொகு]சேரல், தலையாலங்கானம் என்னுமிடத்தில் நடந்த போரில் பொடித்தேர்ச் செழியனை (தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்) எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டுக் குழுவில் ஒருவன்[1] .
சான்று
[தொகு]அகநானூறு 36
இவற்றை ஒப்பிட்டுக்கொள்ளலாம்
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது. புறநானூறு 17 அடிக்குறிப்பு இதனைக் கருத்தில் கொண்டு, இவனை யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பர். இந்தச் சிறைச் செய்தி பாடலில் இல்லை. எனவே இவனை யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனல் பொருந்தாது