சேரர் தொகுப்புக் குறிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, எய்யும் வில்

சங்ககால அரசர்கள் பலரது பெயர்களும் அவர்களைப் பகுத்தறிய உதவும் சிறுகுறிப்புகளும் இங்குத் தரப்படுகின்றன.

பதிற்றுப்பத்து தரும் செய்திகள்[தொகு]

அரசன் குறிப்புகள் சிறப்புக் குறிப்புகள்
உதியஞ்சேரல் ஐவர் நூற்றுவர் போரில் பெருஞ்சோறு அளித்தவன், 2-ம் பத்து அரசனின் தந்தை
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்) இமயமலையில் வில் பொறித்தவன், யவனரைப் பிணித்தவன், திருப்போர்ப்புறம் போரில் சோழன் வேல்பஃறக்கைப் பெருவிறற்கிள்ளியோடு ஒற்றைக்கு ஒற்றையாகப் போரிட்டு மாண்டவன் பதிற்றுப்பத்து 2-ன் தலைவன்
பல்யானைச் செல்கெழு குட்டுவன் உம்பற்காடு, அகப்பா, தோட்டிமலை, முதியர், பூழியர் - வெற்றிகள், பதிற்றுப்பத்து 3-ன் தலைவன்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் நன்னனை வென்று பூழி நாட்டை மீட்டுக்கொண்டான் பதிற்றுப்பத்து 4-ன் தலைவன்
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் குட்டுவர் புரச்சியை ஒடுக்கியவன், மோகூரை வென்றவன், கண்ணகிக்குச் சிலை வைத்தவன், பதிற்றுப்பத்து 5-ன் தலைவன்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்து வருடையாடுகளைக் கவர்ந்து வந்து தன் தொண்டிநகர் பார்ப்பார்க்கு வழங்கியவன். இவன் தலைநகர் நறவூர் பதிற்றுப்பத்து 6-ன் தலைவன்
அந்துவன் (சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை) கருவூரில் இருந்துகொண்டு ஆண்டவன். மதம் பிடித்த யானைமீதிருந்த சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியைக் காப்பாற்றியவன் பதிற்றுப்பத்து 7-ம் பத்துத் தலைவனின் தந்தை
செல்வக் கடுங்கோ வாழியாதன் சோழ, பாண்டிய அரசர்களை வென்றவன். பூழிநாட்டை இணைத்துக்கொண்டவன். தமிழ்மன்றம் அமைத்தவன் பதிற்றுப்பத்து 7-ன் தலைவன்
பெருஞ்சேரல் இரும்பொறை இருபெரு வேந்தர், கழுவுள் ஆகியோரை வென்றவன். தகடூர், கொல்லி, பூழி, தோட்டி நாடுகளை வென்று நாட்டு விரிவுபடுத்தியவன் பதிற்றுப்பத்து 8-ன் தலைவன்
இளஞ்சேரல் இரும்பொறை தந்தைக்காகத் தகடூர், கொல்லி போர்களை நடத்தியவன். பூழியர் கோ, கொங்கர் கோ, குட்டுவர் ஏறு, மரந்தையோர் பொருநன் என இவனைக் குறிக்கும் தொடர்கள் இவனது நாட்டுப் பரப்பைக் காட்டுவன பதிற்றுப்பத்து 9-ன் தலைவன்

புறநானூறு தரும் செய்திகள்[தொகு]

அரசன் குறிப்புகள் சிறப்புக் குறிப்புகள்
சேரமான் பெருஞ்சேரலாதன் வெண்ணிப் பறந்தலைப் போரில் புறப்பண் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தவன் வெண்ணிக் குயத்தியார், கழாத்தலையார் பாடல்கள்
சேரமான் மாரிவெண்கோ சேர சோழ பாண்டியர் நட்பு ஔவையார் பாடல்
சேரமான் வஞ்சன் வள்ளல் திருத்தாமனார் பாடல்
சேரமான் கோக்கோதை மார்பன் மூவன் பல்லைப் பிடுங்கி வந்து, தன் தொண்டிக் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டவன் பொய்கையார் பாடல்கள்

சிறுபாணாற்றுப்படை தரும் செய்தி[தொகு]

அரசன் குறிப்புகள்
இயல்தேர்க் குட்டுவன் (சேரன் செங்குட்டுவன்) வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்தவன்

புகழூர்க் கல்வெட்டு தரும் செய்திகள்[தொகு]

அரசன் குறிப்புகள்
கோ ஆதன் செல்லிரும்பொறை பிட்டன் கொற்றன் செங்காயபன் தலைமையின் கீழ்ச் சமணத் துறவியாக மாறியபோது கல்படுக்கை வெட்டி அழியாமல் இனறும் உள்ள கலவையால் மெழுகித் தந்தவனின் பாட்டன்
பெருங்கடுங்கோ பிட்டன் கொற்றன் செங்காயபன் தலைமையின் கீழ்ச் சமணத் துறவியாக மாறியபோது கல்படுக்கை வெட்டி அழியாமல் இனறும் உள்ள கலவையால் மெழுகித் தந்தவனின் தந்தை
இளங்கடுங்கோ பிட்டன் கொற்றன் செங்காயபன் தலைமையின் கீழ்ச் சமணத் துறவியாக மாறியபோது கல்படுக்கை வெட்டி அழியாமல் இனறும் உள்ள கலவையால் மெழுகித் தந்தவன்

புலவராய் விளங்கிய சேர அரசர்கள்[தொகு]

அரசன் குறிப்புகள்
சேரமான் எந்தை குறுந்தொகை 22
சேரமான் இளங்குட்டுவன் அகநானூறு 153
சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டுப் பெற்று உண்ணாமல் உயிர் துறந்தவன்
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் மனைவி பெருங்கோப்பெண்டு காலமானபோது "நானும் உடன் சாகாமல் உயிர் வாழ்கிறேனே" என்று கலங்கிப் பாடியவன்
பாலை பாடிய பெருங்கடுங்கோ தான் பாடிய கலித்தொகைப் பாலைக்கலிப் பாடல்களில் கொடுங்கோல் ஆட்சியில் குடிமக்கள் படும் வேதனையைப் பாடும் இவனைச் செங்கோலாட்சி நடத்திய சேரன் எனலாம்
மருதம் பாடிய இளங்கடுங்கோ சோழநாட்டுப் பருவூர்ப் பறந்தலையில் அஃதை தந்தை இருபெரு வேந்தர்களை ஓட்டிவிட்டுத் தன் வாளைச் சொழற்றிக்கொண்டு ஆடிய செய்தியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

காண்க[தொகு]