சேரமான் பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த நாயனார் பற்றிக் கழறிற்றறிவார் நாயனார் கட்டுரையைப் பார்க்க.

சேரமான் பெருமாள் (English: Cheraman Perumal; Malayalam:ചേരമാൻ പെരുമാൾ; Arabic: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .[1]

சேரமான் பெருமாளும் கொங்கு நாடும்[தொகு]

சேரமான் கயிலை சென்றது

வாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம்

கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்

கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்

தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை

மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே

(கு - ரை) கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர் சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான் பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே . கொங்கு நாடு தான் சேர நாடு

'ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில்,

ஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி ஆதியந்த உலா

ஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர் நன்நாடதனில் ஆவினன் குடிவாழ்வான தேவர்கள் பெருமாளே. (திருப்புகழ் - பழநி) என்பது இத்தகையதே.

அவசரமாக ஒரு காரியத்தைச்செய்தால் "தலைக்கு எண்ணெய் கூடத் தேய்க்காமல் அவசரப்படுகின்றான்" என்பது கொங்குநாட்டுப் பழமொழியாகும். சுந்தரர் கயிலைக்குச் செல்கின்றார் என்பதனை யறிந்து சேரமான் பெருமாள் விரைந்து சென்றார் என்பதனைத் 'தலைக்கு இடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் .... கயிலை சென்றான்' என்று குறிப்பிட்டது கொங்கு நாட்டுப் பழமொழியை யொட்டியாகும்.

சேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள்[தொகு]

கடைசி சேரமான் பெருமாளின் திடீர் மறைவு, அவரைச் சுற்றி பல தொன்மங்களை உருவாக்கியது. தனது அரசாட்சிக் காலம் முடிந்தவுடன் சேரமான் பெருமாள் கீழ்கண்ட இடங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்குச் சென்றதாகக் கருதப்படுகிறது:

 1. மெக்கா (இது தாசுத்தீன் சேரமான் பெருமாள் என்ற ஓர் தொன்மக் கதையை உருவாக்கியது)
 2. கைலாசம் (இது சேரமான் பெருமாள் நாயனார் என்ற ஓர் தொன்மக் கதையை உருவாக்கியது)
 3. கபிலவத்து அல்லது லும்பினி அல்லது சாரநாத் போன்ற புத்த மத ஸ்தலங்கள்
 4. கேரளர்கள் முன்னின்று நடத்திய நலந்தா பல்கலைகழகம்[2]

ஆனால், மேலே கூறிய எந்தவொரு இடத்திற்கும் அவர் சென்றதற்கான ஆதாரம் இல்லாதது, அவரது மறைவை மர்மம் ஆக்கியது. இவரது மறைவை வைத்துப் பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவை கீழ்காணுமாறு:

 • சத்ரிய பெண்ணின் கணவன் மற்றும் மூன்று சூத்திர பெண்களின் தந்தையாக இருந்தவர், இப்பெண்கள் தான் கேரளத்தின் வருங்கால அரசர்களைப் பெற்றெடுத்தனர்.[2]
 • எழவர்களின் பாதுகாப்பில் தச்சர்களை அழைத்து வர, இலங்கைக்குச் செய்தி அனுப்பியவர்.[2]
 • கி.பி. 843-ஆம் ஆண்டு மெக்கா சென்று அப்துல் ரகுமான் சமிரி எனும் பெயர்மாற்றத்துடன் இஸ்லாத்தைத் தழுவியவர்.[2]
 • இசுலாமியர்கள் மத்தியில் கூறப்படும் கதையில், முகம்மது நபி நிலவைப் பிளந்த நிகழ்வைக் கண்டு, மெக்கா பயணித்து முகமது நபி மேற்பார்வையில் தாசுதீன் (நம்பிக்கையின் மகுடம்) என்று பெயர்மாற்றம் கொண்டு இசுலாத்தைத் தழுவியவர். [2]
 • கோழிக்கோடின் நாயர் தலைவருக்கு வாள் அளித்து அவரை அப்பகுதியின் சாமுத்த்ரியாக ஆக்கியவர்.[2]
 • கிறித்துவ வியாபாரிகளுக்கு வியாபார உரிமை வழங்கிய அரசர்.[2]
 • அயிக்கற யசமானன் என்பவருக்கு மகுடம் அணிவித்து , அதிகாரமும் வழங்கியவர் .[2]
 • அரசராக இருந்து, பின்பு சைவ சாமியாராகித் தென் இந்தியா முழுதும் சுந்தரருடன் கோயில்களுக்குச் சென்றார். கடைசியாகக் கைலாயத்தில் சிவா பக்தன் ஆனதாகக் கருதப்படுகிறது.[3]
 • புத்த மதத்தை தழுவினார்.[2]

வரலாறு[தொகு]

இத்திருமுறையில் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளிச் செய்தவர் சேரமான் பெருமாள் நாயனார்.[4]

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெற்ற இவர் சேரமன்னர். சுந்தரரின் இனிய தோழர். சுந்தரருடன் கயிலைச் சென்றவர். ஆலவாய் இறைவர் பாணபத்திரர் பொருட்டுத் திருமுகப்பாசுரம் அருளிய பெருமை உடையவர். இந்நாயனார் வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமிகளால் கழறிற்றறிவார் புராணம் வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாற்றோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இவரது காலம் சுந்தரர் காலமாகிய கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகும்.

எம்பெருமானிடத்துச் சென்ற சேரரை அவர் புகழ் குன்ற கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சேரர் கிறித்துவர்களுக்கு உதவியது போல் முகமதியருக்கும் உதவினார். இன்றும் அவர் வணங்கிய திருவஞ்சைக்களம்** அன்றாடம் மானிடர் வணங்கி வரும் திருக்கோயிலாக உள்ளது.

சைவமும் தமிழும் தழைக்கத் தோன்றிய அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் என்னும் பெருமாக் கோதையார் திரு அவதாரஞ் செய்தருளிய பதி. பரசுராமர் தம் தாயைக் கொன்றதோசம் நீங்கப் பூசித்த தலம். இத்தலத்திலிருந்துதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானையின் மீதும், சேரமான் பெருமாள் நாயனார் குதிரையின் மீதும் திருக்கயிலாயத்துக்கு எழுந்தருளினார்கள். இந்த அஞ்சைக்களம் சேர நாட்டில் சேர மன்னர்களது இராசதானியாகிய மகோதையில், உள்ள திருக்கோயில். `கடலங்கரை மேல் மகோதையணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே` என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவாக்கு (மகோதை என்பது கொடுங்கோளுர்).

இத்திருவஞ்சைக்களத்துக்கு வடக்கே கொடுங்கோளூரும், தெற்கே கோட்டைப் புறமும், மேற்கே மேற்றலையும், கிழக்கே புல்லூற்றும் இருக்கின்றன. கொடுங்கோளூரில் பகவதி அம்மன் கோயில் இருக்கின்றது. இதனையே கண்ணகி கோயில் என்பர். அஞ்சைக்களத்து அப்பர் கோயில் மலையாள முறையில் கட்டப்பட்டுள்ளது.


மேலும் பார்க்க[தொகு]

சேரமான் ஜும்மா பள்ளிவாசல்

மேற்கோள்கள்[தொகு]

 1. இந்த அரசப்பெயர் சில சமயம் ராஜசேகர வர்மன் மற்றும் ராம வர்மா குலசேகரன் அவர்களின் பெயர் என கருதப்படுகிறது; ஆனால், ஹெர்மன் குண்டேர்ட் என்பவர் அந்த அரசப்பெயர் சேர வம்சத்தினுடையது தான், தனியொரு அரசரின் பட்டபெயர் அல்ல என்கிறார் . Menon, T. Madhava (trans.), Kerala Pazhama: Gundert's Antiquity of Kerala.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 S.N., Sadasivan (2000), "Caste Invades Kerala", A Social History of India (in English), APH Publishing, p. 303,304,305, ISBN 817648170X Unknown parameter |month= ignored (|date= suggested) (உதவி)CS1 maint: unrecognized language (link)
 3. Wentworth, Blake(04-24-2013). "Bhakti Demands Biography: Crafting the Life of a Tamil Saint". {{{booktitle}}}. பரணிடப்பட்டது 2013-05-08 at the வந்தவழி இயந்திரம்
 4. சேரமான்பெருமான் நாயனார்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரமான்_பெருமாள்&oldid=3517909" இருந்து மீள்விக்கப்பட்டது