சேரமான்மாதேவி குருகுலக் கல்வித் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் தமிழகத்தின் அரசியல், சமூகத் தளங்களில் பெரும் மாற்றத்தை விளைவித்த நிறுவனம் சேரன்மாதேவி குருகுலம். வ.வே.சு.ஐயரால் 1922 ஆம் ஆண்டு கல்லிடைக் குறிச்சியில் தொடங்கப்பெற்ற தமிழ்க் குருகுல வித்தியாலயம் பின்னர் சேரமான்தேவிக்கு மாற்றப்பட்டது. எனவே 'சேரமான்தேவி குரு குலம், என்ற பெயரே நிலைக்கலாயிற்று. நாட்டுக்கல்வி என்று சொல்லிக் கொண்டே மேல்நாட்டுக் கல்வி முறையில் நமது நாட்டை நுழைப்பதனால் நமது நாடு காடாகும் என்று உறுதியாகக் கூறுகிறோம். நமது நாட்டுக்கல்வியை நமக்குரிய குருகுல முறையில் போதித்தல் வேண்டும். (நவசக்தி 17-11-1922). என்ற திரு.வி.க வின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் சேரமான்தேவி குருகுலத்தில் கல்வித்திட்டம் அமைந்திருந்தது. கற்பிக்கும் நேரமும் சூழலும் மாணவர்களுக்குக் காலையில் 6.30 மணி முதல் 7.30 மணிவரையிலும் மாலையில் 2.30 மணி முதல் 4.30 மணிவரையிலும் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.மழைக்காலம் தவிர மற்றக் காலங்களில் அடர்ந்த மர நிழல்களிலேயே வகுப்புகள் நடைபெற்றன. குருகுலக் கல்வியின் தொடக்க காலத்தில் சிறப்புப் பாடங்களாக உலக சரித்திரம், வியாபாரத்திற்குப் பயன்படும் பூளோகம்,கணிதம்,தமிழ்இலக்கியம்,தெலுங்கு இலக்கியம்,சமஸ்கிருத இலக்கியம்,இந்திஇலக்கியம்,ஆங்கில இலக்கியம் போன்றவை கற்பிக்கப்பட்டன. இத்தகைய சிறப்புப்பாடங்களுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் கற்கின்றபோது கட்டாயமாகத் தமிழ்ப்பாடத்தையும் சேர்த்தே கற்க வேண்டும். சிறப்புப் பயிற்சிகள்

 ஆங்கிலக் கல்வி முறை அடிமைகளை உருவாக்கவே பயன்படும் என்று கருதிய வ.வே.சு.ஐயர் தன்னம்பிக்கையோடு சொந்தக் காலில் நிற்கும் வலிமையான இளைஞர்களை உருவாக்க நினைத்தார்.எனவேதான் மாணவர்கள் தங்களது விருப்பப்படி சிறப்புப் பாடப் பிரிவுகளைப் பயின்றாலும், அவர்கள்  அனைவருக்கும் பொதுவான சில சிறப்புப் பயிற்சிகளை அளிக்கக் குருகுலத்தில் ஏற்பாடு செய்தார்.

1.அனைத்து மாணவர்களும் உடற்கல்வி வகுப்புகளில் பங்கேற்றல், 2.நற்பண்புகளை வளர்க்கும் ஒழுக்கக் கல்வியை அனைவரும் பெறுதல். 3.நமது மண்ணின் மணத்தோடு நடத்தப் பெறும் நாடகங்களை அனைவரும் கண்டு களித்தல்.சான்று.தமிழ்ச் சமூகத் தேடல். மகிழேந்தி,அ.புவியரசு.கரந்தை பதிப்பகம்.