சேரன்மாதேவி: குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகுப்பு சேரன்மாதேவி: குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் என்பது ஒரு தமிழ் வரலாற்று நூலாகும். இதை பழ. அதியமான் எழுதியுள்ளார். இந்த நூல் ஒரு வரலாற்று காலகட்ட நிகழ்வை மிகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளார். சேரன்மகாதேவியில் வ. வே. சு. ஐயர் காங்கிரஸ் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட குருகுலத்தில் சாதி பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையும், அதனால் தமிழக அரசியில் ஏற்பட்ட விளைவு மிகப்பெரியது ஆகும். அதுபற்றிய முழுமையான வரலாற்றை உள்ளடக்கிய நூலாக இது உள்ளது.[1] இந்த நூல் குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் என்கிற துணை தலைப்பைக் கொண்டு விரிவாக 1924ல் நடந்த நிகழ்வை மைய்யமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் 2013 திசம்பரில் முதல் பதிப்பாகவும், பின் 2014 மார்ச்சில் இரண்டாம் பதிப்பாகவும் வெளியிட்டது.

பொருளடக்கம்[தொகு]

சேரன்மாதேவி குருகுலம் , போராட்டம் : தொடக்கமும் போக்கும் , போராட்டம் : உச்சமும் முடிவும் , குருகுலம் கற்பித்த பாடம் , வரலாற்றில் குருகுலப் போராட்டம் ஆகிய ஐந்து பிரிவுகளில் அன்றைய காலத்திய போராட்ட்ததை நூலின் ஆசிரியர் பழ.அதியமான் பதிவு செய்துள்ளார் .[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. - புத்தகன் (6 திசம்பர் 2014). "சேரன்மாதேவி: குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்". ஆனந்த விகடன். பார்க்கப்பட்ட நாள் 15 மே 2018.
  2. காலச்சுவடு பதிப்பகம் இந்த நிலை டிசம்பர் 2013ல் முதல் பதிப்பாகவும் , மார்ச் 2014ல் இரண்டாம் பதிப்பாகவும் வெளியிட்டுள்ளது .

வெளி இணைப்புகள்[தொகு]