சேரநல்லூர் மகாதேவர் கோயில்
சேரநல்லூர் மகாதேவர் கோவில் | |
---|---|
கோயில் நாலம்பலம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | எர்ணாகுளம் |
அமைவு: | சேரநல்லூர், கலாடி [1] |
ஆள்கூறுகள்: | 10°10′42″N 76°28′18″E / 10.1782927°N 76.4717243°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள பாணி |
இணையதளம்: | http://cheranalloorshivatemple.com/ |
சேரநல்லூர் மகாதேவர் கோயில்[Cheranalloor Mahadeva Temple] சிவனுக்கு படைத்தளிக்கப்பட்ட ஒரு பழங்கால இந்துக் கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தின் கலாடியில் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது.சேரநல்லூர் மகாதேவர் கோயில் கொச்சி இராச்சியத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றாகும்.இக்கோவிலின் சிவன் சிலையை பரசுராம முனிவர் திரேதாயுகத்தில் நிறுவியதாக நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.இந்த கோயில் கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் ஒன்றாகும்.[2][3]
கோயில் அமைப்பு
[தொகு]கிழக்கு நோக்கி இருக்கும் பிரதான கருவறைக்குள் சிவன் கோயில் படைத்தளிக்கப்பட்டுள்ளது. பிரதான சன்னதி, கேரள-திராவிடக் கட்டிடக்கலை பாணியில் வட்ட வடிவத்தில் அழகாக கட்டப்பட்டிருக்கிறது. கிழக்குத் தாழ்வாரத்தில் உள்ள நமஸ்கார மண்டபம் சதுர வடிவ கட்டமைப்பில் கட்டப்பட்டுள்ளது. நாலம்பலத்தின் அளவு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மற்றும் அதன் அருகிலுள்ள தீடப்பள்ளி மறுபடியும் கட்டப்பட்டுள்ளது. சேரநல்லூர் கோயிலின் கட்டிடக்கலை சிறந்த கைவினைத்திறனால் கட்டப்பட்டுள்ளது, மேலும் இக்கோயிலில் நாம் அரிய கட்டிடக்கலை தொகுப்பையும் காணலாம். முன்னொரு காலத்தில், சேரநல்லூர் மகாதேவர் கோயிலுக்குச் சொந்தமாக நிலங்கள் இருந்தன. மேலும் ஆண்டுக்கு சுமார் 24 டன் நெல் (24 ஆயிரம் ஹெக்டேர் நிலம்) கிடைத்தன. விவசாய சீர்திருத்தங்களின் விளைவாக, கோயில் அமைந்துள்ள ஓரிரு ஏக்கர் தவிர அனைத்து நிலங்களையும் கோயில் இழந்தது.
திருவிழா மற்றும் தினசரி பூஜை
[தொகு]இங்கு வழக்கமாக தினசரி ஐந்து பூஜைகள் செய்யப்படுகின்றன.(உஷா பூஜை, எர்த்ரா பூஜை, பாந்தீரதி பூஜை, நூன் பூஜை மற்றும் அதாஷா பூஜை).கோயிலின் ஆண்டு திருவிழா பொதுவாக மலையாள கும்ப மாதத்தில் (பிப்ரவரி - மார்ச்) கொண்டாடப்படுகிறது.[சான்று தேவை]சேரநல்லூரில் உள்ள சிவன் சதி தேவியுடன் சேர்ந்து அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது.எனவே, பக்தர்களின் அனைத்து கடன்களையும் தீர்க்கும் விதமாக கோயிலின் பிரதான தெய்வம் ரினா மோச்சகா வடிவத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.கோயிலில் தினமும் ரினா மோச்சகா பூஜை செய்யப்படுகிறது.[4]
கோயில் புகைப்படங்கள்
[தொகு]
-
பாலிகல் பூரா
-
பிரதான நுழைவு வாயில்
-
நாலம்பலம்
-
திருக்கோயில்
(பிரதான கருவறை) -
கிழக்கு நாலம்பலம்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "108-shiva-temples-of-keralaTemple". www.shaivam.org.
- ↑ "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". www.vaikhari.org.
- ↑ "Petuel data world.com/Temple/Cheranalloor-Shiva-Temple". www.petueldataworld.com.
- ↑ "Cheranalloor Shiva kshethram". www.templespedia.com. Archived from the original on 2019-04-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.